ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

ஐ-பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியை இந்திய சந்தையில் ஜாகுவார் இன்று (மார்ச் 23) விற்பனைக்கு அறிமுகம் செய்தது. சர்வதேச சந்தைகளில் ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது இந்தியாவிற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கவர்ச்சியாக டிசைன் செய்யப்பட்டுள்ளது.

ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

முன் பகுதியில் கம்பீரமான க்ரில் அமைப்பும், அதன் பக்கவாட்டில் இருபுறமும் எல்இடி ஹெட்லேம்ப்களும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் முன் பகுதியில் ஏர் இன்டேக்குகளும் இடம்பெற்றுள்ளன. இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் பின் பகுதியில் எல்இடி டெயில்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் டிசைன் சாலையில் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் உள்ளது.

ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், 90 kWh லித்தியம்-அயான் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 480 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியும். அத்துடன் இந்த காரின் ஒவ்வொரு ஆக்ஸிலும் மோட்டாரை பெற்றுள்ளது. இவை ஒட்டுமொத்தமாக 394 பிஎஸ் பவரையும், 696 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும்.

ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த கார் வெறும் 4.8 வினாடிகளில் எட்டி விடும். அதே சமயம் இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 200 கிலோ மீட்டர்கள் ஆகும். மேலும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியையும் ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி பெற்றுள்ளது. இதன் மூலம் வெறும் 45 நிமிடங்களில், இந்த காரின் பேட்டரியை பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்பி விட முடியும்.

ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

மேலும் சார்ஜிங் வசதிகளுக்காக டாடா பவர் நிறுவனத்துடனும் கூட்டணி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா முழுவதும் 23 நகரங்களில் உள்ள 200க்கும் மேற்பட்ட டாடா பவர் சார்ஜிங் ஸ்டேஷன்களை பயன்படுத்தி கொள்ள முடியும். அதே சமயம் இன்டீரியரிலும் ஏராளமான வசதிகளை ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி பெற்றுள்ளது.

ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

இதில், ட்வின்-ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் முக்கியமானது. இதில், ஒரு திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டமாக செயல்படும். மற்றொன்று க்ளைமேட் கண்ட்ரோலுக்கு பயன்படும். இந்த இன்போடெயின்மெண்ட் ஸ்க்ரீன் 10 இன்ச் டச்ஸ்க்ரீன் ஆகும். ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை இது சப்போர்ட் செய்யும்.

ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

இதுதவிர 16 ஸ்பீக்கர் மெரிடியன் 3டி சர்ரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங், பிஎம் 2.5 ஏர் ஃபில்டர், பனரோமிக் சன்ரூஃப், 12.3 இன்ச் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஹெட்-அப் டிஸ்ப்ளே மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் என மேலும் பல்வேறு வசதிகளும் ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் வழங்கப்பட்டுள்ளன.

ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

பாதுகாப்பை பொறுத்தவரை, 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இஎஸ்சி, எமர்ஜென்ஸி பிரேக் அஸிஸ்ட் மற்றும் முன் மற்றும் பின் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகிய வசதிகளை ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி பெற்றுள்ளது. ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி முழுவதும் கட்டமைக்கப்பட்ட நிலையில் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும்.

ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

ஐ-பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு ஜாகுவார் நிறுவனம் ஏற்கனவே முன்பதிவுகளை ஏற்று வருகிறது. மொத்தம் 3 வேரியண்ட்களில் இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் கிடைக்கும். இந்திய சந்தையில் தற்போதுதான் எலெக்ட்ரிக் வாகனங்கள் மெல்ல மெல்ல பிரபலமாகி வருகின்றன. மெர்சிடிஸ்-பென்ஸ் இக்யூசி மற்றும் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ஆடி இ-ட்ரான் உள்ளிட்ட கார்களுடன் ஜாகுவார் ஐ-பேஸ் போட்டியிடும்.

நாங்கள் ஏற்கனவே கூறியபடி எஸ், எஸ்இ மற்றும் ஹெச்எஸ்இ என மொத்தம் மூன்று வேரியண்ட்களில் ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கிடைக்கும். ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் பேஸ் வேரியண்ட்டின் விலை 1.06 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் டாப் வேரியண்ட்டின் விலை 1.12 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

Most Read Articles
மேலும்... #ஜாகுவார் #jaguar
English summary
Jaguar I-Pace All-electric SUV Launched In India - Design, Features, Price, Variants And More. Read in Tamil
Story first published: Tuesday, March 23, 2021, 12:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X