ஜாகுவார் ஐ-பேஸ் ப்ளாக் காருக்கான புக்கிங் துவக்கம்!! வெளிநாட்டில் விருதுகளை குவித்த எலக்ட்ரிக் கார்!

ஐ-பேஸ் ப்ளாக் என்ற தனது எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகளை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக ஜாகுவார் நிறுவனம் துவங்கியுள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் ஜாகுவார் காரை பற்றி கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஜாகுவார் ஐ-பேஸ் ப்ளாக் காருக்கான புக்கிங் துவக்கம்!! வெளிநாட்டில் விருதுகளை குவித்த எலக்ட்ரிக் கார்!

ஜாகுவார் பிராண்டின் முதன்மையான மற்றும் சமீபத்திய அதிநவீன எலக்ட்ரிக் எஸ்யூவி காராக ஐ-பேஸ் விளங்கி வருகிறது. இந்தியாவிலும் விற்பனையில் இருக்கும் இந்த லக்சரி எலக்ட்ரிக் காரின் புதிய எடிசன் ஐ-பேஸ் ப்ளாக் என்கிற பெயரில் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஜாகுவார் ஐ-பேஸ் ப்ளாக் காருக்கான புக்கிங் துவக்கம்!! வெளிநாட்டில் விருதுகளை குவித்த எலக்ட்ரிக் கார்!

முழுவதுமாக கருப்பு நிறத்தில், பனோராமிக் சன்ரூஃப் உடன் வடிவமைக்கப்படுகின்ற ஐ-பேஸ் ப்ளாக் காருக்கான முன்பதிவுகள் தான் தற்போது துவங்கப்பட்டுள்ளன. தோற்றத்தில் செம்ம ஸ்டைலிஷானது இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி. இதற்காக பல வெளிநாட்டு சந்தைகளில் கார் ஆர்வலர்களிடம் இருந்து பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்றுள்ளது.

ஜாகுவார் ஐ-பேஸ் ப்ளாக் காருக்கான புக்கிங் துவக்கம்!! வெளிநாட்டில் விருதுகளை குவித்த எலக்ட்ரிக் கார்!

இதனை காட்டிலும் பலரை எளிதில் மயக்கிவிடும் தோற்றத்தில் இதன் ஸ்பெஷல் வெர்சனான ப்ளாக் எடிசன் உட்புறத்தையும் அதே கருப்பு நிறத்தில் கொண்டிருப்பதுதான் இதில் சிறப்பான விஷயமே. ஸ்டாண்டர்ட் ஐ-பேஸ் காரில் இருந்து இந்த ஸ்பெஷல் எடிசன் வித்தியாசப்படும் வகையில் வழங்கப்பட்டுள்ள மற்றொரு அம்சம் என்னவென்றால், ஐ-பேஸ் ப்ளாக்கின் பளபளப்பான க்ரே நிற 19-இன்ச் டைமண்ட்-கட் சக்கரங்கள் ஆகும்.

ஜாகுவார் ஐ-பேஸ் ப்ளாக் காருக்கான புக்கிங் துவக்கம்!! வெளிநாட்டில் விருதுகளை குவித்த எலக்ட்ரிக் கார்!

ஆனால் இயக்க ஆற்றலை வழங்கும் பவர்ட்ரெயினில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கமான 90kWh லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பே ஐ-பேஸ் ப்ளாக் காரிலும் வழங்கப்பட்டுள்ளது. இதன் ஆற்றல்கள் காரின் முன்பக்க மற்றும் பின்பக்க முனைகளில் பொருத்தப்படுகின்ற இரு எலக்ட்ரிக் மோட்டார்களுக்கு அனுப்பப்படுகின்றன.

ஜாகுவார் ஐ-பேஸ் ப்ளாக் காருக்கான புக்கிங் துவக்கம்!! வெளிநாட்டில் விருதுகளை குவித்த எலக்ட்ரிக் கார்!

ஜாகுவார் ஐ-பேஸ் காரின் இரு எலக்ட்ரிக் மோட்டார்கள் இணைந்து அதிகப்பட்சமாக 395 பிஎஸ் மற்றும் 696 என்எம் டார்க் திறன் வரையில் வெளிப்படுத்தக்கூடியவை. பிரத்யேகமான பெயிண்ட் மற்றும் பனோராமிக் சன்ரூஃப் உடன் கூடுதல் தொழிற்நுட்ப வசதிகள் சிலவற்றையும் பெற்றுள்ள ஐ-பேஸ் ப்ளாக் கார் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 4.8 வினாடிகளில் எட்டிவிடக்கூடியது.

ஜாகுவார் ஐ-பேஸ் ப்ளாக் காருக்கான புக்கிங் துவக்கம்!! வெளிநாட்டில் விருதுகளை குவித்த எலக்ட்ரிக் கார்!

மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்கள், எல்இடி டெயில்லைட்கள், தகவமைத்து கொள்ளக்கூடிய க்ரூஸ் கண்ட்ரோல், சைகை மூலம் திறந்து மூடும் பின்பக்க கதவு, மெரிடியன் ஆடியோ சிஸ்டம், 3டி கேமிரா, லெதர் ஸ்போர்ட்ஸ் இருக்கைகள் மற்றும் ஏசி கண்ட்ரோலிற்கும் தொடு-இடைமுகம் உள்ளிட்டவை ஜாகுவார் நிறுவனம் ஐ-பேஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி காரில் வழங்கும் முக்கியமான தொழிற்நுட்ப அம்சங்களாகும்.

ஜாகுவார் ஐ-பேஸ் ப்ளாக் காருக்கான புக்கிங் துவக்கம்!! வெளிநாட்டில் விருதுகளை குவித்த எலக்ட்ரிக் கார்!

ஜாகுவார் ஐ-பேஸின் பேட்டரியை 100 கிலோவாட்ஸ் விரைவு சார்ஜரின் மூலம் 80 சதவீதத்தை 40 நிமிடங்களில் நிரப்பிவிடலாம். அதுவே வீட்டில் பயன்படுத்தக்கூடிய 7.4 கிலோவாட்ஸ் மாறுதிசை மின்னோட்ட சுவர் சார்ஜர் மூலமாக 80 சதவீதத்தை எட்ட கிட்டத்தட்ட 10 மணிநேரங்கள் தேவைப்படுமாம்.

ஜாகுவார் ஐ-பேஸ் ப்ளாக் காருக்கான புக்கிங் துவக்கம்!! வெளிநாட்டில் விருதுகளை குவித்த எலக்ட்ரிக் கார்!

ஐ-பேஸ் எலக்ட்ரிக் காரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பிக்கொண்டு அதிகப்பட்சமாக 470கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என்கிறது ஜாகுவார் நிறுவனம். ஐ-பேஸ் ப்ளாக் எடிசன் காருக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டிருப்பது குறித்து ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரோகித் சுரி பேசுகையில், ஏகப்பட்ட விருதுகளை குவித்த பேட்டரி எலக்ட்ரிக் காரின் (ஐ-பேஸ்) தோற்றத்தை ஐ-பேஸ் ப்ளாக் மெருக்கேற்றுகிறது.

ஜாகுவார் ஐ-பேஸ் ப்ளாக் காருக்கான புக்கிங் துவக்கம்!! வெளிநாட்டில் விருதுகளை குவித்த எலக்ட்ரிக் கார்!

அதுமட்டுமில்லாமல் ஜாகுவார் ஐ-பேஸ் மாடலை இன்னும் தனித்துவமானதாகவும், விரும்பத்தக்கதாகவும் ஆக்குகிறது என்றார். ஐ-பேஸ் காருக்கு அருபா மற்றும் ஃபாரல்லன் பேர்ல் கருப்பு என்கிற பிரீமியம் தரத்திலான மெட்டாலிக் பெயிண்ட் தேர்வுகளை ஜாகுவார் வழங்குகிறது. இந்தியாவில் ஜாகுவார் ஐ-பேஸ் எலக்ட்ரிக் காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.05 கோடியாக தற்சமயம் உள்ளது.

ஜாகுவார் ஐ-பேஸ் ப்ளாக் காருக்கான புக்கிங் துவக்கம்!! வெளிநாட்டில் விருதுகளை குவித்த எலக்ட்ரிக் கார்!

ஏற்கனவே கூறியதுதான், ஜாகுவாரின் இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி கார் ஏகப்பட்ட சாதனைகளை படைத்துள்ளது. இந்த வகையில் சமீபத்தில் கடந்த ஜூன் மாத துவக்கத்தில் இங்கிலாந்தில் சிங்கிள்-சார்ஜில் 8,848மீ உயரத்திற்கு ஐ-பேஸ் எலக்ட்ரிக் கார் இயக்கப்பட்டு சாதனை புரியப்பட்டுள்ளது. நேபாளத்தில் உள்ள இமயமலையின் உயரமும் கிட்டத்தட்ட இதே தான்.

ஜாகுவார் ஐ-பேஸ் ப்ளாக் காருக்கான புக்கிங் துவக்கம்!! வெளிநாட்டில் விருதுகளை குவித்த எலக்ட்ரிக் கார்!

2019ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த கார் என்கிற விருதை பெற்ற ஜாகுவார் ஐ-பேஸ், அதே ஆண்டில் சிறந்த ஐரோப்பிய கார் விருதையும் தட்டி சென்றது. இதுவே இந்த ஜாகுவார் எலக்ட்ரிக் காருக்கு உலகளவில் கிடைக்கும் வரவேற்பிற்கு முக்கிய காரணமாகும். இந்தியாவிலும் இந்த ஜாகுவார் மாடலுக்கு எதிர்பார்த்த அளவு கவனம் கிடைப்பதினாலேயே தைரியமாக இதன் ப்ளாக் எடிசனிற்கான முன்பதிவுகளையும் தற்போது நம் நாட்டில் ஜாகுவார் துவங்கியுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஜாகுவார் #jaguar
English summary
BOOKINGS OPENED FOR THE NEW JAGUAR I-PACE BLACK.
Story first published: Wednesday, September 29, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X