ஜாகுவார் நிறுவனத்திற்கே இதனால் பெருமை!! இங்கிலாந்தில் புதிய சாதனையை படைத்த ஐ-பேஸ்!

ஜாகுவாரின் ஐ-பேஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி கார் இங்கிலாந்து நாட்டில் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஜாகுவார் நிறுவனத்திற்கு இதனால் பெருமை!! இங்கிலாந்தில் புதிய சாதனையை படைத்த ஐ-பேஸ்!

ஜாகுவார் ஐ-பேஸ், 2019ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த கார் என்கிற விருதை பெற்ற எலக்ட்ரிக் கார் ஆகும். அதுமட்டுமில்லாமல் அதே ஆண்டில் சிறந்த ஐரோப்பிய கார் விருதையும் இந்த ஜாகுவார் தயாரிப்பு தட்டி சென்றது.

ஜாகுவார் நிறுவனத்திற்கு இதனால் பெருமை!! இங்கிலாந்தில் புதிய சாதனையை படைத்த ஐ-பேஸ்!

இதனால் உலகளவில் எதிர்பார்த்ததை காட்டிலும் மிக வேகமாகவே பிரபலமடைந்த இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி கார் இங்கிலாந்தில் 8,848மீ தூரத்திற்கு சிங்கிள் சார்ஜில் இயக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. 8,848மீ என்பது கிட்டத்தட்ட நேபாளத்தில் உள்ள இமயமலையின் உயரமாகும்.

ஜாகுவார் நிறுவனத்திற்கு இதனால் பெருமை!! இங்கிலாந்தில் புதிய சாதனையை படைத்த ஐ-பேஸ்!

இதற்காகவே இந்த சவாலான பயணத்திற்கு ‘எவரெஸ்டிங் சேலன்ஞ்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இமயமலையில் ஏறுவது எவ்வளவு கடினமானதோ, அத்தகைய கடுமையான சவால்களை எல்லாம் இந்த பயணத்தில் இந்த ஜாகுவார் ஐ-பேஸ் கார் கண்டுள்ளது.

ஜாகுவார் நிறுவனத்திற்கு இதனால் பெருமை!! இங்கிலாந்தில் புதிய சாதனையை படைத்த ஐ-பேஸ்!

அதாவது, செங்குத்தான பாதைகளில் ஏறியது, மணல் பரப்புகளில் பயணித்தது, உறைய வைக்கும் குளிரில் இயங்கியது என இந்த சாதனை பயணத்தில் இந்த ஐ-பேஸ் கார் கண்ட சவால்கள் ஏராளம். இந்த பயணத்தில் ஐ-பேஸ் காரை ஒலிம்பிக் மற்றும் உலக சைக்கிள் சாம்பினான எலினோர் பார்கர் எம்.பி.இ இயக்கியுள்ளார்.

ஜாகுவார் நிறுவனத்திற்கு இதனால் பெருமை!! இங்கிலாந்தில் புதிய சாதனையை படைத்த ஐ-பேஸ்!

இந்த பயணம் குறித்து எலினோர் பார்கர் எம்.பி.இ பேசுகையில், ஊரடங்கு உத்தரவுகளுக்கு மத்தியில் இந்த எவரெஸ்ட்டிங் சவாலை பல சைக்கிளிஸ்ட் ஏற்று கொண்டதை நான் ஆர்வத்துடன் பார்த்தேன். இது சகிப்புத்தன்மைக்கான சாதனையாகும்.

ஜாகுவார் நிறுவனத்திற்கு இதனால் பெருமை!! இங்கிலாந்தில் புதிய சாதனையை படைத்த ஐ-பேஸ்!

எனவே அதனை ஜாகுவார் ஐ-பேஸ் என்ற முழு-எலக்ட்ரிக் காரில் நிகழ்த்தியதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன் என்றார். இங்கிலாந்தின் கும்ப்ரியா மாகாணத்தில் உள்ளது, தி கிரேட் டன் இறக்கம். சுற்றிலும் மலைகளை மட்டுமே கொண்ட இடம் என்பதால் சாலை அதிகளவில் ஏற்ற, இறக்கங்களுடன் உள்ளது.

ஜாகுவார் நிறுவனத்திற்கு இதனால் பெருமை!! இங்கிலாந்தில் புதிய சாதனையை படைத்த ஐ-பேஸ்!

இதனாலேயே இந்த சாலை சைக்கிள் ஆர்வலர்களுக்கு மிகவும் ஏற்ற இடமாக விளங்கி வருகிறது. குறிப்பாக இதன் உச்சியில் சாலை முடிவடையும் பகுதியில் சைக்கிள் ஏறுவது மிகவும் கடினம் என கூறப்படுகிறது. அத்தகைய உச்சியில் தான் 547மீ தூரத்திற்கு இந்த ஜாகுவார் ஐ-பேஸ் கார் கிட்டத்தட்ட 16.2 தடவை மீண்டும் மீண்டும் ஏற்றி சாதனை புரியப்பட்டுள்ளது.

ஜாகுவார் நிறுவனத்திற்கு இதனால் பெருமை!! இங்கிலாந்தில் புதிய சாதனையை படைத்த ஐ-பேஸ்!

இந்த சாதனையின் முக்கிய சிறப்பம்சமே, இந்த சாவலில் ஐ-பேஸ் கார் ஒரே ஒரு முறை மட்டுமே முழுவதும் சார்ஜ் செய்யப்பட்டு இயக்கப்பட்டுள்ளது. சாதனைக்காக கணக்கிடப்பட்டது தான் 8,848மீ ஆகும். ஒட்டு மொத்தமாக 199.6 கிமீ தூரத்திற்கு இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி கார் இயங்கியுள்ளது.

ஜாகுவார் நிறுவனத்திற்கு இதனால் பெருமை!! இங்கிலாந்தில் புதிய சாதனையை படைத்த ஐ-பேஸ்!

இதற்கு காரில் வழங்கப்பட்டுள்ள ரீஜெனரேட்டிவ் ப்ரேக்கிங் தொழிற்நுட்பம் மிகவும் உதவிகரமானதாக இருந்துள்ளது. இதனாலேயே இந்த சாதனை வெற்றிக்கரமாக நிறைவு செய்யப்பட்ட பின்னரும் பேட்டரியில் 31% சார்ஜ் இருந்துள்ளது. ஜாகுவார் ஐ-பேஸில் 90 கிலோவாட்ஸ்/நேரம் பேட்டரி வழங்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #ஜாகுவார் #jaguar
English summary
Jaguar I-Pace Climbs Britain’s Highest Surfaced Road On A Single Charge: Read More To Find Out!
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X