Just In
- 2 hrs ago
ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?
- 9 hrs ago
பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க!! புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது!!
- 11 hrs ago
200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? டாப்-10 பைக்குகள் இதோ...
- 15 hrs ago
பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு
Don't Miss!
- News
கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி
- Sports
ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்!
- Movies
இப்படியா போடுவீங்க? பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்!
- Finance
எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..!
- Lifestyle
கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஜாவா பைக்குகளின் ஷோரூம் விலைகள் அதிகரிப்பு!! பதற வேண்டாம்... மிகவும் குறைவாகதான் உயர்த்தப்பட்டுள்ளன...
கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் 2021ஆம் ஆண்டிற்காக ஜாவா மோட்டார்சைக்கிள்கள் அனைத்தின் எக்ஸ்ஷோரூம் விலைகளையும் உயர்த்தியுள்ளது. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

தற்சமயம் ஜாவா பிராண்டில் இருந்து 42, ஜாவா மற்றும் பெராக் என்ற மூன்று பைக் மாடல்கள் விற்பனையில் உள்ளன. இவற்றின் விலைகள்தான் தற்போது தலா ரூ.2,987 அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதில் ஜாவா பைக் சிங்கிள்-சேனல் மற்றும் ட்யுல்-சேனல் ஏபிஎஸ் தேர்வுகளில் கருப்பு, க்ரே, மெரூன் நிறத்தேர்வுகளில் கிடைக்கிறது. இரு ஏபிஎஸ் தேர்விலும் கருப்பு மற்றும் க்ரே நிறத்தில் இந்த பைக்கின் விலை ஒரே மாதிரியாகவே உள்ளது.
Jawa | ||||||
Old Price Single-channel ABS | New Price Single-channel ABS | Differece | Old Price Dual-channel ABS | New Price Dual-channel ABS | Difference | |
Black | ₹1,73,164 | ₹1,76,151 | ₹2,987 | ₹1,82,106 | ₹1,85,093 | ₹2,987 |
Grey | ₹1,73,164 | ₹1,76,151 | ₹2,987 | ₹1,82,106 | ₹1,85,093 | ₹2,987 |
Maroon | ₹1,74,228 | ₹1,77,215 | ₹2,987 | ₹1,83,170 | ₹1,86,157 | ₹2,987 |

ஆனால் ஜாவாவை மெரூன் நிறத்தில் பெற ரூ.1,100 அளவில் கூடுதலாக செலுத்த வேண்டும். இதன் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் வேரியண்ட்களுக்கும் ட்யுல்-சேனல் ஏபிஎஸ் வேரியண்ட்களுக்கும் இடையே ரூ.9 ஆயிரம் அளவில் வித்தியாசம் உள்ளது.

ஜாவா பிராண்டில் இருந்து தற்சமயம் கிடைக்கும் குறைவான விலை கொண்ட பைக்கான 42 ஆறு விதமான நிறத்தேர்வுகளில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் சிங்கிள்-சேனல் மற்றும் ட்யுல்-சேனல் ஏபிஎஸ் என்ற இரு விதமான வெர்சன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

Forty Two | ||||||
Haley's Teal | ₹1,60,300 | ₹1,63,287 | ₹2,987 | ₹1,69,242 | ₹1,72,229 | ₹2,987 |
Comet Red | ₹1,65,228 | ₹1,68,215 | ₹2,987 | ₹1,74,170 | ₹1,77,157 | ₹2,987 |
Galactic Green | ₹1,65,228 | ₹1,68,215 | ₹2,987 | ₹1,74,170 | ₹1,77,157 | ₹2,987 |
Nebula Blue | ₹1,65,228 | ₹1,68,215 | ₹2,987 | ₹1,74,170 | ₹1,77,157 | ₹2,987 |
Lumos Lime | ₹1,64,164 | ₹1,67,151 | ₹2,987 | ₹1,73,106 | ₹1,76,093 | ₹2,987 |
Starlight Blue | ₹1,60,300 | ₹1,63,287 | ₹2,987 | ₹1,69,242 | ₹1,72,229 | ₹2,987 |
இதன் புதிய குறைந்தப்பட்ச விலையாக ரூ.1,63,287-உம் (ஹாலேவின் காட்டு வாத்தின் நிறம் அல்லது ஸ்டார்லைட் நீல நிறத்தில் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் வேரியண்ட்), அதிகப்பட்ச விலையாக ரூ.1,77,157-உம் (கோமெட் சிவப்பு அல்லது விண்மீனின் பச்சை அல்லது நெபுலா நீல நிறத்தில் ட்யுல்-சேனல் ஏபிஎஸ் வேரியண்ட்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜாவா பிராண்டில் இருந்து கடைசியாக அறிமுகமான ஒற்றை இருக்கை உடைய பெராக் கருப்பு நிறத்தில் ட்யுல்-சேனல் ஏபிஎஸ் வெர்சனில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. ரூ.1,94,500ஆக இருந்த இதன் முந்தைய விலை தற்போது ரூ.1,97,487ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Perak | ||||||
Old Price | New Price | Difference | ||||
Black, Dual-channel ABS | ₹1,94,500 | ₹1,97,487 | ₹2,987 |

இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், இப்போதும் இந்த ஜாவா பைக்குகள் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 மற்றும் சமீபத்திய அறிமுகமான மீட்டியோர் 350 மற்றும் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்குகளுக்கு போட்டியாகவே விளங்குகின்றன. அதிலும் பெராக், இந்தியாவில் இப்போதைக்கு குறைவான விலையில் கிடைக்கும் பாப்பர் ஸ்டைல் மோட்டார்சைக்கிளாக விளங்குகிறது.