தொழில்நுட்ப அம்சங்களில் மிரட்டப்போகும் புதிய ஜீப் காம்பஸ் 7 சீட்டர் மாடல்!

அதிசெயல்திறன் மிக்க எஞ்சின் மற்றும் சிறந்த தொழில்நுட்ப அம்சங்களுடன் ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் புதிய 7 சீட்டர் மாடல் வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தொழில்நுட்ப அம்சங்களில் மிரட்டப்போகும் புதிய ஜீப் காம்பஸ் 7 சீட்டர் மாடல்!

மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் 7 சீட்டர் மாடல்களுக்கான மவுசு அதிகரித்து வருகிறது. அந்த வகையில், ஜீப் நிறுவனம் தனது காம்பஸ் எஸ்யூவி அடிப்படையில் புதிய 7 சீட்டர் மாடலை கொண்டு வர இருக்கிறது. இந்த மாடல் இந்தியர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொழில்நுட்ப அம்சங்களில் மிரட்டப்போகும் புதிய ஜீப் காம்பஸ் 7 சீட்டர் மாடல்!

தற்போது இந்த புதிய 7 சீட்டர் எஸ்யூவி சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

தொழில்நுட்ப அம்சங்களில் மிரட்டப்போகும் புதிய ஜீப் காம்பஸ் 7 சீட்டர் மாடல்!

இந்த சூழலில், இந்த எஸ்யூவியில் இடம்பெற இருக்கும் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்த சில முக்கியத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி, புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலில் சக்திவாய்ந்த 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வு இடம்பெற இருப்பதாக தெரிகிறது.

தொழில்நுட்ப அம்சங்களில் மிரட்டப்போகும் புதிய ஜீப் காம்பஸ் 7 சீட்டர் மாடல்!

அதாவது, ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் வழங்கப்படும் ஃபியட் நிறுவனத்தின் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் 200 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறனுடன் மாற்றங்கள் செய்யப்பட்டு வர இருக்கிறது. மேலும், இதனுடன் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் கொடுக்கப்பட உள்ளதாம்.

தொழில்நுட்ப அம்சங்களில் மிரட்டப்போகும் புதிய ஜீப் காம்பஸ் 7 சீட்டர் மாடல்!

இதனால், புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடல் பிரிமீயம் மாடலாக நிலைநிறுத்தப்படும் என தெரிகிறது. அதாவது, டாப் வேரியண்ட் ரூ.35 லட்சத்தையொட்டிய எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.

தொழில்நுட்ப அம்சங்களில் மிரட்டப்போகும் புதிய ஜீப் காம்பஸ் 7 சீட்டர் மாடல்!

ஜீப் காம்பஸ் அடிப்படையிலான மாடலாக இருந்தாலும், புதிய பெயரில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஸ்யூவி தற்போது எச்6 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுகிறது. தனது பாரம்பரியத்தை பரைசாற்றும் வகையில் ஆஃப்ரோடு அம்சங்களுடன் இந்த புதிய மாடல் வர இருக்கிறது.

தொழில்நுட்ப அம்சங்களில் மிரட்டப்போகும் புதிய ஜீப் காம்பஸ் 7 சீட்டர் மாடல்!

புதிய ஜீப் காம்பஸ் 7 சீட்டர் எஸ்யூவியானது டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர், ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ், ஸ்கோடா கோடியாக் உள்ளிட்ட மாடல்களுக்கு இணையாக நிலைநிறுத்தப்படும் என தெரிகிறது.

Via- Gaadiwaadi

Most Read Articles

மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep's all new 7 seater SUV likely position in premium SUV market in India.
Story first published: Saturday, March 20, 2021, 11:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X