Jeep Commander அதிகாரப்பூர்வமாக அறிமுகம்... இந்தியாவில் Meridian என்ற பெயரில் வருகிறது... முழு விபரம்!

Jeep Commander எஸ்யூவி கார் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Jeep Commander அதிகாரப்பூர்வமாக அறிமுகம்... இந்தியாவில் Meridian என்ற பெயரில் வருகிறது... முழு விபரம்!

Jeep நிறுவனம் இறுதியாக Commander எஸ்யூவி காரை அறிமுகம் செய்துள்ளது. ஆனால் இந்நிகழ்ச்சி நடந்தது இந்தியாவில் அல்ல. பிரேசிலில். இது Jeep Compass எஸ்யூவி காரின் மூன்று வரிசை வெர்ஷன் (Three-row Version) ஆகும். ஆனால் நாம் ஏன் இதை இங்கே ஆச்சரியமாக பேசி கொண்டிருக்க வேண்டும்? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம்.

Jeep Commander அதிகாரப்பூர்வமாக அறிமுகம்... இந்தியாவில் Meridian என்ற பெயரில் வருகிறது... முழு விபரம்!

ஏனெனில் Commander இந்தியாவிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது இந்திய சந்தையில் ஏற்கனவே விற்பனையில் உள்ள Jeep Compass எஸ்யூவி காரின் மூன்று வரிசை வெர்ஷனாக இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது. இந்தியாவில் தற்போது ஒரு டிரெண்ட் வேகமாக பரவி வருவது உங்களுக்கு தெரியலாம்.

Jeep Commander அதிகாரப்பூர்வமாக அறிமுகம்... இந்தியாவில் Meridian என்ற பெயரில் வருகிறது... முழு விபரம்!

அதாவது இரண்டு வரிசை கொண்ட (5 சீட்டர்) எஸ்யூவி கார்களின் மூன்று வரிசை வெர்ஷன்கள் தொடர்ச்சியாக இந்தியாவில் அறிமுகமாகி வருகின்றன. MG Hector Plus, TATA Safari மற்றும் Hyundai Alcazar போன்ற கார்களை இதற்கு உதாரணமாக கூற முடியும். இதில், MG Hector Plus, MG Hector எஸ்யூவி காரின் மூன்று வரிசை வெர்ஷன் ஆகும்.

Jeep Commander அதிகாரப்பூர்வமாக அறிமுகம்... இந்தியாவில் Meridian என்ற பெயரில் வருகிறது... முழு விபரம்!

அதே சமயம் TATA Harrier எஸ்யூவி காரின் மூன்று வரிசை வெர்ஷன்தான் புதிய TATA Safari. இதில், கடைசியாக உள்ள Hyundai Alcazar, Hyundai Creta எஸ்யூவி காரின் மூன்று வரிசை வெர்ஷன் ஆகும். இதே பாணியில் அமெரிக்காவை சேர்ந்த Jeep நிறுவனம் Commander எஸ்யூவி காரை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

Jeep Commander அதிகாரப்பூர்வமாக அறிமுகம்... இந்தியாவில் Meridian என்ற பெயரில் வருகிறது... முழு விபரம்!

ஆனால் இந்திய சந்தையில் Jeep Compass எஸ்யூவி காரின் மூன்று வரிசை வெர்ஷன் Meridian என்ற பெயரில் அழைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய நிலையில் வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில், இந்த புதிய எஸ்யூவி கார் முதலில் தென் அமெரிக்க நாடுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

Jeep Commander அதிகாரப்பூர்வமாக அறிமுகம்... இந்தியாவில் Meridian என்ற பெயரில் வருகிறது... முழு விபரம்!

அதன்பின் மற்ற நாடுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரையில், அடுத்த ஆண்டு இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம். Jeep Compass எஸ்யூவி காரின் பிளாட்பார்ம் அடிப்படையில்தான் இந்த புதிய எஸ்யூவி காரும் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த 2 எஸ்யூவி கார்களும் நிறைய அம்சங்களை பகிர்ந்து கொள்ளவுள்ளன.

Jeep Commander அதிகாரப்பூர்வமாக அறிமுகம்... இந்தியாவில் Meridian என்ற பெயரில் வருகிறது... முழு விபரம்!

எனினும் Jeep Compass எஸ்யூவி காருடன் ஒப்பிடுகையில், Jeep Commander பல்வேறு வகைகளில் வித்தியாசமாக தெரியும். இதன்படி Jeep Commander காரில், Seven-slat Radiator Grille வழங்கப்படவுள்ளது. இந்த க்ரில் அமைப்பின் பக்கவாட்டில் இருபுறமும் எல்இடி ஹெட்லேம்ப்கள் கொடுக்கப்படவுள்ளன.

Jeep Commander அதிகாரப்பூர்வமாக அறிமுகம்... இந்தியாவில் Meridian என்ற பெயரில் வருகிறது... முழு விபரம்!

அதேபோல் Jeep Commander எஸ்யூவி காரின், பம்பர் மற்றும் அலாய் வீல்களின் டிசைனும் வேறுபடுத்தப்படவுள்ளது. இந்த காரின் பின் பகுதியில், எல்இடி டெயில்லைட்கள் வழங்கப்படவுள்ளன. எனினும் Jeep Compass எஸ்யூவி காரை விட டிசைன் என்ற அம்சத்தில், Jeep Commander மேம்படுத்தப்பட்டிருக்கும்.

Jeep Commander அதிகாரப்பூர்வமாக அறிமுகம்... இந்தியாவில் Meridian என்ற பெயரில் வருகிறது... முழு விபரம்!

Jeep Commander எஸ்யூவி காரின் நீளம் 4,769 மிமீ. அகலம் 1,859 மிமீ. உயரம் 1,682 மிமீ. இதன் மூலம் Compass காரை காட்டிலும், Jeep Commander நீளமாகவும், அகலமாகவும், உயரமாகவும் இருக்கும். அதேபோல் மூன்றாவது வரிசை இருப்பதால், Compass காரை காட்டிலும் Commander எஸ்யூவி காரின் வீல்பேஸ் நீளமும் 158 மிமீ அதிகம்.

Jeep Commander அதிகாரப்பூர்வமாக அறிமுகம்... இந்தியாவில் Meridian என்ற பெயரில் வருகிறது... முழு விபரம்!

எனினும் Compass காரை போலவேதான் Commander காரின் இன்டீரியரும் இருக்கும். எனினும் ஒரு சில மாற்றங்களை நீங்கள் எதிர்பார்க்கலாம். வசதிகளை பொறுத்தவரையில், Commander காரில் ட்யூயல்-ஸோன் ஆட்டோமேட்டிக் ஏசி, பார்க் அஸிஸ்ட், ஆட்டோ ஹோல்டு உடன் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், 10.25 இன்ச் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றிருக்கும்.

Jeep Commander அதிகாரப்பூர்வமாக அறிமுகம்... இந்தியாவில் Meridian என்ற பெயரில் வருகிறது... முழு விபரம்!

மேலும் 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், பனரோமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்பட்டிருக்கும். அத்துடன் Adaptive Cruise Control, Lane Change Assistant, Automatic Emergency Braking, Blind-spot Assistant மற்றும் ஓட்டுனர் தூங்கினால் எச்சரிக்கும் வசதி உள்ளிட்டவற்றையும் Commander பெற்றிருக்கும்.

Jeep Commander அதிகாரப்பூர்வமாக அறிமுகம்... இந்தியாவில் Meridian என்ற பெயரில் வருகிறது... முழு விபரம்!

இதுதவிர 7 ஏர்பேக்குகள், Hill Descent Control மற்றும் Rear Parking Camera போன்ற வசதிகளையும் Commander பெற்றிருக்கும். இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போது, Commander எஸ்யூவி கார் (இந்தியாவில் Meridian), 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் ஆகிய இன்ஜின் தேர்வுகளை பெற்றிருக்கும்.

Most Read Articles
மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep commander three row suv officially unveiled here are all the details
Story first published: Friday, August 27, 2021, 20:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X