Just In
- 31 min ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 55 min ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 2 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 3 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
இன்று தேசத்தின் 72-வது குடியரசு தினம்.. டெல்லியில் கோலாகலம்..மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட்: அறிந்துகொள்ள வேண்டிய 7 முக்கிய விஷயங்கள்
ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சில நாட்களுக்கு முன் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இந்த காரில் குறிப்பிடத்தக்க 5 முக்கிய அம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டிசைன் மாற்றம்
ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் முகப்பு டிசைனில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு இருக்கிறது. எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட், புதிய க்ரில் அமைப்பும், ஹெட்லைட் க்ளஸ்ட்டர், பம்பர், புதிய அலாய் வீல்கள், டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள் ஆகியவை கூர்மையான டிசைன் அம்சங்களுடன் வசீகரம் கூட்டப்பட்டு இருக்கிறது.

02. இன்டீரியர் முற்றிலும் புதிது
வெளிப்புறத்தை விட உட்புறத்தில் முற்றிலும் புதிதாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய டேஷ்போர்டு அமைப்பு, இரட்டை வண்ண பாகங்களுடன் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. ஃப்ளோட்டிங் திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. புதி ஏசி வென்ட்டுகளும் இடம்பெற்றுள்ளன.

03. முக்கிய வசதிகள்
புதிய ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 10.1 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், யு-கனெக்ட்-5 என்ற கனெக்டெட் கார் தொழில்நுட்பம், பனரோமிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் வென்டிலேடட் முன் இருக்கைகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

04. கனெக்டெட் கார் தொழில்நுட்பம்
இந்த காரில் யு-கனெக்டெட்-5 கனெக்டெட் கார் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. இதன்மூலமாக, கார் குறிப்பிட்ட எல்லையை விட்டு தாண்டதவாறு தடுக்கும் ஜியோ பென்சிங், கார் இயக்கம் குறித்த முக்கிய தகவல்கள், கார் திருடுபோவதை எளிதாக கண்டறியும் வசதிகள் உள்ளன.

05. பாதுகாப்பு அம்சங்கள்
புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் 360 டிகிரி கேமரா முக்கிய அம்சமாக இருக்கிறது. அத்துடன், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், பவர் லிஃப்ட் டெயில் கேட், ஹில் ஹோல்டு அசிஸ்ட், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், செலக்டெரெயின் 4 வீல் டிரைவ் சிஸ்டம், 6 ஏர்பேக்குகள், பிரேக் அசிஸ்ட் உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

06. எஞ்சின் தேர்வுகள்
புதிய ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.4 லிட்டர் மல்டிஜெட் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் தேர்வுகள் தக்க வைக்கப்படுகின்றன. பெட்ரோல் எஞ்சின் 161 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேனுவல் அல்லது டிசிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 171 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். டீசல் மாடலில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் எதிர்பார்க்கப்படுகிறது.

07. அறிமுக விபரம்
அடுத்த மாதம் புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.17 லட்சத்தையொட்டிய ஆரம்ப விலையில் புதிய மாடல் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.