Just In
- 4 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 7 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 8 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 8 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Lifestyle
ஆரோக்கியத்திற்காக நீங்க சாப்பிடும் இந்த நட்ஸ் வகை உங்க உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்...ஜாக்கிரதை!
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சிட்ரோன் பிளாட்ஃபார்மில் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை ஜீப் களமிறக்க வாய்ப்பு!
சிட்ரோன் நிறுவனத்தின் காம்பேக்ட் எஸ்யூவி கட்டமைப்புக் கொள்கையின் அடிப்படையில் புதிய எஸ்யூவி மாடலை ஜீப் நிறுவனம் களமிறக்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தியாவில் 3 புதிய எஸ்யூவி மாடல்களை களமிறக்க உள்ளதாக ஜீப் நிறுவனம் தெரிவித்தது. மேலும், இந்தியாவுக்காக புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடலை உருவாக்கி வருவதாகவும் அண்மையில் தெரிவித்தது.

இந்த சூழலில், சிட்ரோன் நிறுவனத்தின் தாய் நிறுவனமான பிஎஸ்ஏ குழுமமும், ஜீப் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஃபியட் க்றைஸ்லர் குழுமமும் இணைந்து ஸ்டெல்லன்டிஸ் என்ற புதிய கார் உற்பத்தி நிறுவனமாக செயல்பட உள்ளது. கடந்த மாதம் இரு கார் குழுமங்களும் இணைக்கப்பட்டன.

எனவே, இந்தியாவில் ஜீப் மற்றும் சிட்ரோன் நிறுவனங்கள் ஒரே கட்டமைப்புக் கொள்கையின் கீழ் புதிய மாடல்களை உருவாக்கவும், தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகள் எழுந்துள்ளன.

மேலும், ஜீப் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடலானது சிட்ரோன் நிறுவனத்தின் புதிய கட்டமைப்புக் கொள்கையை பயன்படுத்தி உருவாக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக ஆட்டோகார் இந்தியா செய்தி தெரிவிக்கிறது.

வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள தனது ரெனிகேட் காம்பேக்ட் எஸ்யூவியை இந்தியாவுக்கு தக்க அம்சங்களுடன் மாற்றங்களை செய்து விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஜீப் நிறுவனம் திட்டமிட்டு இருந்தது. ஆனால், அந்த காரை மாற்றுவதற்கும், உள்நாட்டு உதிரிபாகங்களை சப்ளையர்களிடம் இருந்து பெறுவதற்கும் அதிக முதலீடுகள் தேவைப்படும் சூழல் இருக்கிறது.

இதனை மனதில் வைத்து, சிட்ரோன் நிறுவனத்தின் கட்டமைப்புக் கொள்கையை பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை ஜீப் எடுக்கும் என தெரிகிறது. ஏனெனில், சிட்ரோன் நிறுவனம் ஏற்கனவே தனது காம்பேக்ட் எஸ்யூவி மாடலை இந்தியாவில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தி வருகிறது. எனவே, அந்த காரின் அடிப்படையில் புதிய மாடலை கொண்டு வருவது எளிதான விஷயமாக இருக்கும்.

சிட்ரோன் காம்பேக்ட் எஸ்யூவி இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது. மேலும், அதே எஞ்சின் மற்றும் முக்கிய உதிரிபாகங்களை பயன்படுத்தி தனது காம்பேக்ட் எஸ்யூவியை விரைவாக கொண்டு வர முடியும் என்பதால், ஜீப் இந்த திட்டம் குறித்து பரிசீலிக்கும் என்று தெரிகிறது.

இதன்மூலமாக, இரண்டு கார்களுக்கான உருவாக்க செலவீனம், உற்பத்தி செலவீனம் உள்ளிட்டவை அதிக அளவில் குறையும். விரைவாக இந்த கார்களின் மூலமாக குறிப்பிடத்தக்க வர்த்தகத்தை பெற முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில், ஜீப் நிறுவனத்தின் கார் மாடல்களில் 4 வீல் டிரைவ் சிஸ்டம் மிக முக்கிய அம்சமாக இருக்கும். ஆனால், சிட்ரோன் நிறுவனத்தின் கட்டமைப்புக் கொள்கையானது 2 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல்களுக்கே பொருத்தமானதாக இருக்கும். எனவே, தனது ஆஸ்தான கொள்கையை விட்டுவிட்டு, 2 வீல் டிரைவ் சிஸ்டத்துடன் தனது புதிய எஸ்யூவி மாடலை ஜீப் களமிறக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.