உலக போர்களில் இருந்து எலக்ட்ரிக் வரையில் ஜீப் வாகனங்கள்... 80 வருடத்தை நிறைவு செய்யும் அமெரிக்க ஜீப் பிராண்ட்!

ஜீப் வ்ராங்க்லரின் அடிப்படையில் உருவாக்கப்படும் முழு-எலக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட் மாடல் டீசர் ஒன்றின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. அதன் மூலம் தயாரிப்பு நிறுவனம் கூறவந்துள்ள விஷயத்தை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

உலக போர்களில் இருந்து எலக்ட்ரிக் வரையில் ஜீப் வாகனங்கள்... 80 வருடத்தை நிறைவு செய்யும் அமெரிக்க ஜீப் பிராண்ட்!

‘தி ரோடு அகேட் - சாலைக்கு முன்பாக' என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ ஜீப் பிராண்டின் 80 வருட வாகன தயாரிப்பை கொண்டாடும் மற்றும் நினைவுப்படுத்தும் விதமாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் வ்ராங்க்லரின் ப்ளக்-இன் ஹைப்ரீட் வேரியண்ட் மற்றும் அமெரிக்காவில் பிரபலமான வாகோனீரின் கான்செப்ட் வெர்சனும் காட்டப்பட்டுள்ளன. இவற்றுடன் க்ராண்ட் செரோக்கி எல் காரையும் நீங்கள் பார்க்க முடியும்.

உலக போர்களில் இருந்து எலக்ட்ரிக் வரையில் ஜீப் வாகனங்கள்... 80 வருடத்தை நிறைவு செய்யும் அமெரிக்க ஜீப் பிராண்ட்!

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வரும் நிறுவனங்களுள் ஒன்றாக இருக்கும் ஜீப் பிராண்டின் உலகளாவிய தலைவர் கிரிஸ்டியன் மியூனியர் சமீபத்திய பேட்டியில், ஜீப் மாடல்கள் அடுத்த சில வருடங்களில் எலக்ட்ரிக் தேர்வையும் 4X4 தொழிற்நுட்பத்தையும் அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்காக பெறவுள்ளன என கூறியிருந்தார்.

உலக போர்களில் இருந்து எலக்ட்ரிக் வரையில் ஜீப் வாகனங்கள்... 80 வருடத்தை நிறைவு செய்யும் அமெரிக்க ஜீப் பிராண்ட்!

வ்ராங்க்லர் இவி கான்செப்ட் மாடல் ஈஸ்டர் ஜீப் சஃபாரியின் ஒரு பகுதியாக வெளிவரலாம் என்பதையும் இந்த டீசர் வீடியோ நமக்கு தெரியப்படுத்துவதுபோல் அமைந்துள்ளன. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

உலக போர்களில் இருந்து எலக்ட்ரிக் வரையில் ஜீப் வாகனங்கள்... 80 வருடத்தை நிறைவு செய்யும் அமெரிக்க ஜீப் பிராண்ட்!

வ்ராங்க்லர் இவி ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனத்தின் தோற்றத்தை பற்றி இந்த வீடியோ வைத்து எந்தவொரு முடிவிற்கு வர முடியாது. ஏனெனில் இந்த டீசர் வீடியோவில் 7-ஸ்லாட் க்ரில் ஜீப்பின் முக்கியமான அடையாளமாக சுட்டி காட்டப்பட்டுள்ளது.

உலக போர்களில் இருந்து எலக்ட்ரிக் வரையில் ஜீப் வாகனங்கள்... 80 வருடத்தை நிறைவு செய்யும் அமெரிக்க ஜீப் பிராண்ட்!

ஆனால் வ்ராங்க்லர் இவி கான்செப்ட் வாகனத்தின் க்ரில் அமைப்பு மூடப்பட்டிருக்கும். பேட்டரி தொகுப்பு மூன்று வெவ்வேறு விதமான பாகங்களாக பிரிக்கப்படலாம் என்பதுபோல் இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. அதேபோல் சூரிய ஒளியின் போல் இந்த எலக்ட்ரிக் வாகனம் இயங்கும் என்பது போன்றும் கூறப்பட்டுள்ளது.

உலக போர்களில் இருந்து எலக்ட்ரிக் வரையில் ஜீப் வாகனங்கள்... 80 வருடத்தை நிறைவு செய்யும் அமெரிக்க ஜீப் பிராண்ட்!

இதற்காக அமெரிக்காவின் பல பகுதிகளில் இந்த நிறுவனம் சூரிய ஒளி சார்ஜிங் நிலையங்களை ஏற்படுத்தும் என தெரிகிறது. இந்த டீசரில், விரைவில் ஜீப் வாகனங்களில் வழங்கப்படவுள்ள ஓட்டுனரின் உதவியில்லா ஸ்டேரிங் சக்கர செயல்பாட்டு வசதியையும் பார்க்க முடிகிறது.

உலக போர்களில் இருந்து எலக்ட்ரிக் வரையில் ஜீப் வாகனங்கள்... 80 வருடத்தை நிறைவு செய்யும் அமெரிக்க ஜீப் பிராண்ட்!

கிராண்ட் செரோக்கி எல் காரை பொறுத்தவரையில், நிலை 2 க்ரேடை பெற்ற துணை-தானியங்கி செயல்பாடு போன்ற கூடுதல் வசதிகளுடன் இதன் அறிமுகம் அமெரிக்க சந்தையில் இந்த 2021ஆம் ஆண்டின் இறுதியில் இருக்கலாம். இந்தியாவில் ஜீப் நிறுவனம் சமீபத்தில் காம்பஸின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை அறிமுகப்படுத்தி இருந்தது.

Most Read Articles
மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep Wrangler Electric Set To Make Your Adventures Quieter And Cleaner
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X