புதிய ஜீப் கமாண்டர் 7 சீட்டர் எஸ்யூவியின் டீசர் வெளியீடு... விரைவில் பிரேசிலில் அறிமுகமாகிறது!

காம்பஸ் எஸ்யூவியின் கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய ஜீப் கமாண்டர் 7 சீட்டர் எஸ்யூவியின் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதனால், விரைவில் இந்த புதிய எஸ்யூவி முறைப்படி சந்தைக்கு வர இருப்பது உறுதியாகி இருக்கிறது.

புதிய ஜீப் கமாண்டர் 7 சீட்டர் எஸ்யூவியின் டீசர் வெளியீடு

இந்த நிலையில், இந்த எஸ்யூவி முதலாவதாக பிரேசில் நாட்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை வாடிக்கையாளர்களுக்கு கட்டியம் கூறும் வகையில், டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

மிட்சைஸ் 7 சீட்டர் எஸ்யூவி மாடல்களுக்கு அதிக வரவேற்பு எழுந்துள்ளது. இதனை மனதில் வைத்து காம்பஸ் எஸ்யூவியின் அடிப்படையில் புதிய எஸ்யூவியை ஜீப் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. H6 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்பட்டு வந்த இந்த புதிய எஸ்யூவி கமாண்டர் என்ற பெயரில் வர இருக்கிறது.

புதிய ஜீப் கமாண்டர் 7 சீட்டர் எஸ்யூவியின் டீசர்

இது 7 சீட்டர் மாடல் என்பதால் காம்பஸ் எஸ்யூவியை விட நீளம், அகலத்தில் பெரிய மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. மேலும், மூன்று வரிசை இருக்கைகளிலும் போதுமான இடவசதியை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஜீப் கமாண்டர் எஸ்யூவியின் தோற்றம் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் என்பது டீசர் மூலமாக உணர்ந்து கொள்ள முடிகிறது. ஜீப் நிறுவனத்தின் பாரம்பரிய முகப்பு க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், புதிய அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள் உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

இந்த காரின் இன்டீரியர் குறித்து இதுவரை எந்த தகவலும் கசியவிடாமல் ரகசியம் காத்து வருகிறது ஜீப் நிறுவனம். ஆனால், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர், கனெக்டெட் கார் தொழில்நுட்பம் ஆகியவை முக்கிய வசதிகளாக இருக்கும்.

புதிய ஜீப் கமாண்டர் 7 சீட்டர் எஸ்யூவி

காம்பஸ் 5 சீட்டர் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் ஃபியட் நிறுவனத்தின் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் சில மாறுதல்களுடன் இந்த எஸ்யூவியில் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, அதிக திறன் கொண்டதாக மேம்படுத்தப்பட்டு இருக்கும்.

ஜீப் கமாண்டர் எஸ்யூவி இந்திய வருகை குறித்து எந்த அதிகாரப்பூர்வத் தகவலும் இல்லை. ஆனால், வெளிநாடுகளைத் தொடர்ந்து நிச்சயம் இந்தியாவிலும் இந்த புதிய மாடல் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. மிட்சைஸ் 7 சீட்டர் எஸ்யூவி மார்க்கெட்டில் அதிக பிரிமீயமான மாடலாக நிலைநிறுத்தப்படும் என தெரிகிறது.

Most Read Articles

மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep has released new teaser for Commander SUV ahead of global debut very soon.
Story first published: Saturday, May 29, 2021, 16:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X