2022 ஜீப் க்ராண்ட் செரோக்கி 4எக்ஸ்இ ஹைப்ரீட் கார் வெளியீடு!! மாசில்லா போக்குவரத்திற்கான மற்றொரு படி!

2022 ஜீப் க்ராண்ட் செரோக்கி 4எக்ஸ்இ ப்ளக்-இன் ஹைப்ரீட் எஸ்யூவி காரை பற்றிய விபரங்கள் படங்களுடன் 2021 ஸ்டெல்லாண்டிஸ் இவி நாளில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

2022 ஜீப் க்ராண்ட் செரோக்கி 4எக்ஸ்இ ஹைப்ரீட் கார் வெளியீடு!! மாசில்லா போக்குவரத்திற்கான மற்றொரு படி!

இந்த அமெரிக்க நிறுவனம் "பூஜ்ஜிய உமிழ்வு, 100% சுதந்திரம்" பார்வையை நோக்கி வைக்கும் மற்றொரு படியாக விளங்கும் இந்த ஹைப்ரீட் கார், ஜீப் பிராண்டின் 80 ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளிவந்துள்ளது.

2022 ஜீப் க்ராண்ட் செரோக்கி 4எக்ஸ்இ ஹைப்ரீட் கார் வெளியீடு!! மாசில்லா போக்குவரத்திற்கான மற்றொரு படி!

முற்றிலும் புதிய 2022 கிராண்ட் செரோக்கி 4எக்ஸ்இ ஜீப் நிறுவனத்தின் நான்காவது ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக விளங்கவுள்ளது. இதற்கு முன்னர் காம்பஸ் 4எக்ஸ்இ, ரெனிகேட் 4எக்ஸ்இ மற்றும் வ்ராங்க்லர் 4எக்ஸ்இ என்ற மூன்று ஜீப் ப்ளக்-இன் ஹைப்ரீட் கார்கள் வெளியாகி இருந்தன.

2022 ஜீப் க்ராண்ட் செரோக்கி 4எக்ஸ்இ ஹைப்ரீட் கார் வெளியீடு!! மாசில்லா போக்குவரத்திற்கான மற்றொரு படி!

கடந்த 30 வருடங்களாக அமெரிக்காவில் விற்பனையில் இருக்கும் கிராண்ட் செரோக்கி, அமெரிக்கன் எஸ்யூவி பெயரில் பல நாட்டு சந்தைகளில் பிரபலமடைந்துள்ளது. எந்த அளவிற்கு என்றால், இதுவரையில் கிட்டத்தட்ட 7 மில்லியன் வாடிக்கையாளர்களை உலகளவில் செரோக்கி மாடல் பெற்றுள்ளது.

2022 ஜீப் க்ராண்ட் செரோக்கி 4எக்ஸ்இ ஹைப்ரீட் கார் வெளியீடு!! மாசில்லா போக்குவரத்திற்கான மற்றொரு படி!

வருகிற ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள 2021 நியூ யார்க் சர்வதேச ஆட்டோ கண்காட்சியில் ஜூப் க்ராண்ட் செரோக்கியின் ஐந்தாம் தலைமுறை மாடல் அதிகாரப்பூர்வமாக காட்சிப்படுத்தப்பட உள்ளது. இதனால் புதிய செரோக்கியை பற்றிய விபரங்கள் எதுவும் தற்போதைக்கு இல்லை.

2022 ஜீப் க்ராண்ட் செரோக்கி 4எக்ஸ்இ ஹைப்ரீட் கார் வெளியீடு!! மாசில்லா போக்குவரத்திற்கான மற்றொரு படி!

எப்படியிருந்தாலும், 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வ்ராங்லர் 4எக்ஸ்இ காரில் வழங்கப்பட்டுள்ள 4-சக்கர-ட்ரைவ் எலக்ட்ரிக் மோட் புதிய க்ராண்ட் செரோக்கியிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2022 ஜீப் க்ராண்ட் செரோக்கி 4எக்ஸ்இ ஹைப்ரீட் கார் வெளியீடு!! மாசில்லா போக்குவரத்திற்கான மற்றொரு படி!

இந்த வசதி வாகனம் எரிபொருளை பயன்படுத்தாமல் அதன் எலக்ட்ரிக் ஆற்றலில் ஆஃப்-ரோடுகளில் இயங்க வைக்கும். இந்த ப்ளக்-இன் ஹைப்ரீட் கார் குறித்து ஜீப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜீப் செரோக்கி 4எக்ஸ்இ காரின் அறிமுகம் எங்களது எலக்ட்ரிக் மயமாதலின் ஒரு படியாகும்.

2022 ஜீப் க்ராண்ட் செரோக்கி 4எக்ஸ்இ ஹைப்ரீட் கார் வெளியீடு!! மாசில்லா போக்குவரத்திற்கான மற்றொரு படி!

அதுமட்டுமில்லாமல் பிராண்டின் 80 வருட சாதனை மற்றும் கண்டுப்பிடிப்புகளை கொண்டாடும் விதமாக மேற்கொள்ளப்பட்டுவரும் "பூஜ்ஜிய மாசு உமிழ்வு, 100% சுதந்திரம்" பார்வைக்கும் வலுச்சேர்க்கவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஜீப் #jeep
English summary
2022 Jeep Grand Cherokee 4xe breaks cover in plug-In hybrid form.
Story first published: Saturday, July 10, 2021, 21:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X