Just In
- 5 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 6 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 7 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 8 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நிஸான் மேக்னைட் காரைவிட அதிக விலை... புதிய கவாஸாகி இசட்650 பைக் அறிமுகம்... இதோட விலை எவ்ளே தெரியுமா?
கவாஸாகி நிறுவனம் புதிய நிஸான் மேக்னைட் காரின் விலைக்கே டஃப் கொடுக்கும் மதிப்பில் இசட்650 பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இப்பைக் பற்றிய கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

நிஸான் நிறுவனம் அண்மையில் மேக்னைட் எனும் புதுமுக காரை விற்பனைக்குக் களமிறக்கியது. இக்காரின் அறிமுக விலையாக ரூ. 4.99 லட்சம் என்ற விலையை நிர்ணயித்தது. இது மிக மிக மலிவான விலை என்பதால் ஹேட்ச்பேக் கார்களுக்கே டஃப் கொடுக்கின்ற வகையில் இக்கார் விற்பனையைப் பெற்று வருகின்றது. நிஸான் அறிவித்த காலம் முடிவடைந்ததன் காரணத்தினால் இக்காரின் ஆரம்ப விலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ரூ. 50 ஆயிரம் உயர்த்தப்பட்டிருக்கின்றது. இது ஆரம்பநிலை மாடலுக்கு மட்டுமே பொருந்தும். இருப்பினும், இக்காரின் விலை ரூ. 6 லட்சத்தைத் தொடவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. தற்போது நிஸான் மேக்னைட் காரின் ஆரம்ப விலை ரூ. 5.49 லட்சம் ஆகும். இந்த காரின் விலையைக் காட்டிலும் அதிக விலைக் கொண்ட பைக்கையே கவாஸாகி நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

இசட்650 எனும் புதிய பைக்கை கவாஸாகி நிறுழனம் இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கின்றது. இப்பைக்கிற்கு இந்திய மதிப்பில் ரூ. 6.04 லட்சம் என்ற விலையை அது நிர்ணயித்திருக்கின்றது. இந்தியாவின் மிடில்-வெயிட் (நடு தர எடையுள்ள) இருசக்கர வாகன சந்தையை அதகளப்படுத்தும் வகையில் இப்பைக்கைக் கவாஸாகி அறிமுகம் செய்திருக்கின்றது.

2021ம் ஆண்டிற்கான மாடலே தவிர வேறெந்த மாற்றத்தையும் பெரியளவில் இப்பைக் பெறவில்லை. இதன் பிஎஸ்6 வெர்ஷன் பைக்கை கடந்த வருடமே கவாஸாகி அறிமுகம் செய்துவிட்டது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே நேக்கட் ஸ்ட்ரீட்ஃபைட்டர் ரகத்தில் இந்த புதிய 2021 மாடல் பைக் அறிமுகம் தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.

முந்தைய மாடல் ரூ. 5.94 லட்சம் என்ற விலையில் மட்டுமே விற்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே பத்தாயிரம் ரூபாய் விலை அதிகரிப்புடன் புதிய இசட்650 மிடில் வெயிட் நேக்கட் ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த விலையுயர்வைத் தொடர்ந்து புதிய நிற தேர்வையும் கவாஸாகி இப்பைக்கில் அறிமுகப்படுத்தியுள்ளது.

மெட்டாலிக் ஸ்பார்க் கருப்பு நிறம் மற்றும் புதிய காஸ்மெட்டிக் அப்டேட்டையும் அது வழங்கியிருக்கின்றது. ஆனால், இதில் மெக்கானிக்கல் மாற்றம் எதையும் அது வழங்கவில்லை. அதாவது, எஞ்ஜின் திறனில் எந்த மாற்றத்தையும் அது செய்யவில்லை. 649 சிசி திறனை வெளிப்படுத்தக்கூடிய பாரல்லல் ட்வின், டிஓஎச் எஞ்ஜினே இப்பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

இது அதிகபட்சமாக 68 பிஎஸ் பவரை 8,000 ஆர்பிஎம்மிலும், 64 என்எம் டார்க்கை 6,700 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இப்பைக்கில் நிஞ்ஜா 650 பைக்கின் டிசைன் தாத்பரியத்தை வெளிப்படுத்துகின்ற வகையில் எல்இடி மின் விளக்குகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இதுமட்டுமின்றி கூடுதல் சிறப்பு வசதிகளை வழங்கும் வகையில் 4.3 இன்சிலான டிஎஃப்டி வண்ண இன்ஸ்ட்ரூமென்டேஷன் கருவி வழங்கப்பட்டிருக்கின்றது. இது முழு டிஜிட்டல் திறன் கொண்டதாகும். இத்துடன், ப்ளூடூத் இணைப்பு தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு பைக் மற்றும் செல்போனை இணைப்பது சுலபம். அவ்வாறு இணைக்கும் பட்சத்தில் பைக் பற்றிய தகவல்களை செல்போன் திரையிலேயே நம்மால் பெற முடியும்.

தொடர்ந்து, செல்போனுக்கு வரும் அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி போன்ற முக்கிய தகவல்களை பைக்கில் உள்ள 4.3 இன்ச் திரையில் அறிந்து கொள்ள முடியும். இதற்காக ரைடியாலஜி (RIDEOLOGY THE APP) எனும் பிரத்யேக செல்போன் செயலியை கவாஸாகி வழங்குகின்றது.