ஃபோக்ஸ்வேகன் டைகுனுக்கும், டைகுன் ஜிடி-க்கும் இடையில் இவ்வளவு வித்தியாசங்களா? எதை வாங்குவது?

ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஜிடி கார் இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து டைகுன் ஸ்டாண்டர்ட் மாடல் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. விரைவில் இதன் ஜிடி வேரியண்ட்டையும் விற்பனையில் களமிறக்க ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தயாராகி வருகிறது.

ஃபோக்ஸ்வேகன் டைகுனுக்கும், டைகுன் ஜிடி-க்கும் இடையில் இவ்வளவு வித்தியாசங்களா? எதை வாங்குவது?

தோற்றத்தில் இரண்டிற்கும் இடையில் பெரிய அளவில் எந்தவொரு வித்தியாசமும் இல்லாவிடினும், சில அம்சங்களில் டைகுன் ஸ்டாண்டர்ட் மாடலில் இருந்து அதன் ஜிடி மாடல் வேறுபடவுள்ளது. அவற்றை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

ஃபோக்ஸ்வேகன் டைகுனுக்கும், டைகுன் ஜிடி-க்கும் இடையில் இவ்வளவு வித்தியாசங்களா? எதை வாங்குவது?

ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஸ்டாண்டர்ட் மாடலில் இருந்து வேறுப்பட்டு தெரிவதற்காக டைகுன் ஜிடி காரில் இரட்டை நிறத்தில் 2-ஸ்போக் அலாய் சக்கரங்கள் சிவப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்ட ப்ரேக் காலிபர்களுடன் வழங்கப்படவுள்ளன. ஆனால் ஸ்டாண்டர்ட் டைகுன் மாடல் எளிமையான தோற்றத்தில் சக்கரங்களை கொண்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் டைகுனுக்கும், டைகுன் ஜிடி-க்கும் இடையில் இவ்வளவு வித்தியாசங்களா? எதை வாங்குவது?

அதேபோல் முன்பக்க க்ரில், ஃபெண்டர் மற்றும் பின்கதவில் ஜிடி லோகோவை எதிர்பார்க்கலாம். இவற்றுடன் எல்இடி டிஆர்எல்களை கொண்ட பிரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் கார்னரிங் விளக்குகளும் டைகுன் ஜிடி காரில் வழங்கப்பட உள்ளன.

ஃபோக்ஸ்வேகன் டைகுனுக்கும், டைகுன் ஜிடி-க்கும் இடையில் இவ்வளவு வித்தியாசங்களா? எதை வாங்குவது?

எஸ்யூவி பண்பாக அடிப்பக்க தகடை பெற்றுவரவுள்ள டைகுனின் இந்த டாப் வேரியண்ட்டில் முன் பம்பரின் கீழ் பாதி கருப்பு & க்ரே நிறங்களில் கொடுக்கப்பட்டு இருந்தன. டைகுனின் வேரியண்ட்கள் அனைத்திலும் ட்ரம் ப்ரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இது புதிய ஜிடி வேரியண்ட்டிற்கும் தொடரப்படலாம்.

ஃபோக்ஸ்வேகன் டைகுனுக்கும், டைகுன் ஜிடி-க்கும் இடையில் இவ்வளவு வித்தியாசங்களா? எதை வாங்குவது?

அதேபோல் டைகுன் வேரியண்ட்கள் அனைத்தும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக 4,221மிமீ-இல் நீளத்தையும், 1,760மிமீ-இல் அகலத்தையும், 1,612மிமீ-இல் உயரத்தையும் கொண்டுள்ளன. இந்த ஃபோக்ஸ்வேகன் எஸ்யூவி காரின் வீல்பேஸ் அளவு 2,651மிமீ ஆக உள்ளது.

ஃபோக்ஸ்வேகன் டைகுனுக்கும், டைகுன் ஜிடி-க்கும் இடையில் இவ்வளவு வித்தியாசங்களா? எதை வாங்குவது?

டைகுனின் பின்பக்கமானது காரின் மொத்த அகலத்தில் எல்இடி டெயில்லேம்ப்கள், உயரத்தில் நிறுத்து விளக்குடன் ஸ்போர்டியான ஸ்பாய்லர் மற்றும் சுறாவின் துடுப்பு வடிவிலான ஆண்டென்னா உள்ளிட்டவற்றுடன் பார்ப்போரை வசீகரிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் டைகுனுக்கும், டைகுன் ஜிடி-க்கும் இடையில் இவ்வளவு வித்தியாசங்களா? எதை வாங்குவது?

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு ஃபோக்ஸ்வேகன் டைகுனில் 1.0 லிட்டர், 3-சிலிண்டர் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர், 4-சிலிண்டர் என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்பட்டுள்ளன. இவை இரண்டும் தான் பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ஸ்கோடா நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட குஷாக் எஸ்யூவி மாடலிலும் வழங்கப்பட்டுள்ளன.

ஃபோக்ஸ்வேகன் டைகுனுக்கும், டைகுன் ஜிடி-க்கும் இடையில் இவ்வளவு வித்தியாசங்களா? எதை வாங்குவது?

இதில் சிறிய அளவிலான 1.0 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் 5,000- 5,500 ஆர்பிஎம்-இல் 114 பிஎச்பி மற்றும் 1,750- 4,500 ஆர்பிஎம்-இல் 178 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. 6-ஸ்பீடு மேனுவல் & 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுடன் இந்த என்ஜின் வழங்கப்படுகிறது.

ஃபோக்ஸ்வேகன் டைகுனுக்கும், டைகுன் ஜிடி-க்கும் இடையில் இவ்வளவு வித்தியாசங்களா? எதை வாங்குவது?

மறுபக்கம், 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினானது 5,000- 6,000 ஆர்பிஎம்-இல் 148 பிஎச்பி மற்றும் 1,600- 3,500 ஆர்பிஎம்-இல் 250 என்எம் டார்க் திறன் வரையில் காருக்கு வழங்கக்கூடியதாக வடிவமைக்கப்படுகிறது. இந்த பெட்ரோல் என்ஜினை 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்பீடு டிஎஸ்ஜி தேர்வில் பெறலாம்.

ஃபோக்ஸ்வேகன் டைகுனுக்கும், டைகுன் ஜிடி-க்கும் இடையில் இவ்வளவு வித்தியாசங்களா? எதை வாங்குவது?

ஆனால் டைகுன் ஜிடி காரில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் மட்டுமே மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் தேர்வில் வழங்கப்பட உள்ளது. ஸ்கோடா குஷாக்கை போல் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஜிடி-யும் மேனுவல் தேர்வில் தான் அதிக வசதிகளுடன், ஆட்டோமேட்டிக் வெர்சனை காட்டிலும் கூடுதல் விலையில் விற்பனை செய்யப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஃபோக்ஸ்வேகன் டைகுனுக்கும், டைகுன் ஜிடி-க்கும் இடையில் இவ்வளவு வித்தியாசங்களா? எதை வாங்குவது?

கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்ட ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஜிடி காரின் உட்புறத்தை அவ்வளவு தெளிவாக பார்க்க முடியவில்லை. ஆனால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டைகுன் ஸ்டாண்டர்ட் மாடலில் 3-ஸ்போக் பல-செயல்பாட்டு ஸ்டேரிங் சக்கரம், ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே உடன் பெரிய அளவிலான தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் ஹெப்டாகன் காற்று துளைகளை பார்க்க முடிகிறது.

ஃபோக்ஸ்வேகன் டைகுனுக்கும், டைகுன் ஜிடி-க்கும் இடையில் இவ்வளவு வித்தியாசங்களா? எதை வாங்குவது?

இரட்டை நிறத்தில் இருக்கைகளை பெற்றுவந்துள்ள ஸ்டாண்டர்ட் டைகுன் மாடலில் பின் இருக்கை பயணிகளுக்காகவும் ஏசி வசதி வழங்கப்பட்டுள்ளது. டைகுன் ஜிடி காரின் உள்ளே என்னென்ன அம்சங்கள் வழங்கப்பட உள்ளன என்பது தற்போதைக்கு உறுதியாக தெரியவில்லை.

ஃபோக்ஸ்வேகன் டைகுனுக்கும், டைகுன் ஜிடி-க்கும் இடையில் இவ்வளவு வித்தியாசங்களா? எதை வாங்குவது?

ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், வயர் இல்லா சார்ஜிங் வசதி, யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் துளைகள் உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் டைகுன் ஜிடி-யின் உட்புறத்தை ஸ்போர்டியான தோற்றத்தில் எதிர்பார்க்கின்றோம். இந்திய சந்தைக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரில் பாதுகாப்பு அம்சங்களும் அதிகளவில் வழங்கப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
Key visual highlights that distinguish the Volkswagen Taigun GT from standard model.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X