எம்மம்மா இந்த ஒத்த காருல இவ்ளோ வசதிகளா! சஃபாரி, அல்கஸார் எதையும் விட்டு வைக்காது போல! Kia Carens வெளியீடு!

தென் கொரியாவை மையமாகக் கொண்டு இயங்கும் கியா (Kia) நிறுவனம், அதன் கேரன்ஸ் (Carens) எனும் மூன்று வரிசை இருக்கை அமைப்பு கொண்ட புதுமுக எம்பிவி ரக காரை இன்று உலகளவில் வெளியீடு செய்தது. விரைவில் இந்தியா வர இருக்கும் இக்கார் குறித்த சுவாரஷ்ய தகவல்கலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

எம்மம்மா இந்த ஒத்த காருல இவ்ளோ வசதிகளா... டாடா சஃபாரி, ஹூண்டாய் அல்கஸார் எதையும் விட்டு வைக்காது போல! Kia Carens அறிமுகம்!

தென் கொரியாவை மையமாகக் கொண்டு இயங்கும் கியா (Kia) நிறுவனம், கேரன்ஸ் (Carens) எனும் புதுமுக கார் உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாக அண்மைக் காலங்களாக தகவல்கள் வெளி வந்த வண்ணம் இருந்தன. இந்த தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில், நிறுவனம், அதன் சார்பில் புதுமுக காரின் ஸ்கெட்ச் படங்களை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது.

எம்மம்மா இந்த ஒத்த காருல இவ்ளோ வசதிகளா... டாடா சஃபாரி, ஹூண்டாய் அல்கஸார் எதையும் விட்டு வைக்காது போல! Kia Carens அறிமுகம்!

இந்த நிலையில், உலகளவில் புதிய கேரன்ஸ் எம்பிவி காரை விற்பனைக்குக் கொண்டு வரும் விதமாக இன்று அக்காரை வெளியீடு செய்திருக்கின்றது. மூன்று வரிசை இருக்கைகள் அமைப்பைக் கொண்ட எம்பிவி வாகனமாக இது சந்தையை அலங்கரிக்க இருக்கின்றது. இதன் விற்பனைக்கான அறிமுகம் 2022ம் ஆண்டின் முதல் காலாண்டில் எதிர்பார்க்கப்படுகின்றது.

எம்மம்மா இந்த ஒத்த காருல இவ்ளோ வசதிகளா... டாடா சஃபாரி, ஹூண்டாய் அல்கஸார் எதையும் விட்டு வைக்காது போல! Kia Carens அறிமுகம்!

இதற்கான முன்னோட்டமாகவே கியா கேரன்ஸ் காரை தற்போது வெளியீடு செய்திருக்கின்றது. கியா நிறுவனம், தனது கார்களின் புதிய சகாப்தத்தைக் குறிக்கும் வகையில் இக்காருக்கு கேரன்ஸ் எனும் பெயரை வைத்திருக்கின்றது. கியாவின் கூற்றுப்படி, கார் + மறுமலர்ச்சி இதுவே கேரன்ஸ் என்ற பெயருக்கான அர்த்தம் ஆகும்.

எம்மம்மா இந்த ஒத்த காருல இவ்ளோ வசதிகளா... டாடா சஃபாரி, ஹூண்டாய் அல்கஸார் எதையும் விட்டு வைக்காது போல! Kia Carens அறிமுகம்!

கியா நிறுவனம் ஏற்கனவே இந்திய சந்தையில் செல்டோஸ் (இந்தியாவில் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்த முதல் கார் இதுவே ஆகும்), சொனெட் மற்றும் கார்னிவல் ஆகிய மூன்று கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இவற்றைத் தொடர்ந்து நான்காவது மாடலாக கேரன்ஸ் எம்பிவி-யை நாட்டில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது.

எம்மம்மா இந்த ஒத்த காருல இவ்ளோ வசதிகளா... டாடா சஃபாரி, ஹூண்டாய் அல்கஸார் எதையும் விட்டு வைக்காது போல! Kia Carens அறிமுகம்!

ஏற்கனவே, எம்பிவி கார்கள் பிரிவில் கார்னிவல் எனும் சொகுசு வாகனத்தை நிறுவனம் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இந்நிலையில் இந்தியாவிற்கான இரண்டாவது எம்பிவி ரக வாகனமாக கேரன்ஸை கியா கொண்டு வருகின்றது. ஆகையால், இக்காரின் மீது இந்தியர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துக் காணப்படுகின்றது.

எம்மம்மா இந்த ஒத்த காருல இவ்ளோ வசதிகளா... டாடா சஃபாரி, ஹூண்டாய் அல்கஸார் எதையும் விட்டு வைக்காது போல! Kia Carens அறிமுகம்!

இந்த காரின் வருகை எம்பிவி ரக வாகனங்களான டொயோட்டா இன்னோவா, மாருதி சுசுகி எர்டிகா உள்ளிட்ட கார்களுக்கு மட்டும் போட்டியாக அமைய போவதில்லை. இன்னும் சில வேற்று ரக வாகனங்களுக்கும் போட்டியாக அமைய இருக்கின்றது. அந்தவகையில், ஹூண்டாய் அல்கஸார் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 மற்றும் டாடா சஃபாரி உள்ளிட்ட பிரமாண்ட தோற்றம் கொண்ட எஸ்யூவி கார்களுக்கும் இதன் வருகை போட்டியாக அமைய இருக்கின்றது.

எம்மம்மா இந்த ஒத்த காருல இவ்ளோ வசதிகளா... டாடா சஃபாரி, ஹூண்டாய் அல்கஸார் எதையும் விட்டு வைக்காது போல! Kia Carens அறிமுகம்!

இதற்கு கேரன்ஸின் புதிய வடிவமைப்பு தத்துவமே காரணம். ஆம், கியா நிறுவனம் கேரன்ஸ் எம்பிவி காரை அதன் பிற தயாரிப்புகளில் இருந்து மாறுபட்டு காட்சியளிக்கும் வகையில் வடிவமைத்திருக்கின்றது. இதற்கு மிக சிறந்த உதாரணமாக காரின் உட்பகுதியில் இருக்கும் டேஷ்போர்டு அமைந்திருக்கின்றது.

எம்மம்மா இந்த ஒத்த காருல இவ்ளோ வசதிகளா... டாடா சஃபாரி, ஹூண்டாய் அல்கஸார் எதையும் விட்டு வைக்காது போல! Kia Carens அறிமுகம்!

இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் கியாவின் எந்தவொரு காரிலும் இடம் பெறாத வகையில் இதன் டேஷ்போர்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. எக்கச்ச தொழில்நுட்ப அம்சங்களையும், ஸ்போர்ட்ஸ் தர சிறப்பு வசதிகளையும் அங்கு கியா வழங்கியிருக்கின்றது. ஆகையால், தற்போது விற்பனையில் இருக்கும் பிற கியார கார்களைக் காட்டிலும் கேரன்ஸ் சற்றே மாறுபட்டுக் காணப்படும்.

எம்மம்மா இந்த ஒத்த காருல இவ்ளோ வசதிகளா... டாடா சஃபாரி, ஹூண்டாய் அல்கஸார் எதையும் விட்டு வைக்காது போல! Kia Carens அறிமுகம்!

புலி முக வடிவத்திலான முகப்பு பகுதி, டிஆர்எல்கள் உடன் கூடிய எல்இடி ஹெட்லேம்ப் உள்ளிட்டவை இந்த காரின் கவர்ச்சியான தோற்றத்திற்காக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவை கேரன்ஸ் காரை எம்பிவி தோற்றத்திற்கு பதிலாக எஸ்யூவி ரக வாகனத்தைப் போன்று தோற்றுவிக்கின்றன. இதன் காரணத்தினாலேயே இந்தியாவில் எம்பிவி கார்களுக்கு மட்டுமின்றி எஸ்யூவி கார்களுக்கும் இது போட்டியாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்மம்மா இந்த ஒத்த காருல இவ்ளோ வசதிகளா... டாடா சஃபாரி, ஹூண்டாய் அல்கஸார் எதையும் விட்டு வைக்காது போல! Kia Carens அறிமுகம்!

காரின் பக்கவாட்டு பகுதிக்கு எஸ்யூவி கார்களைப் போன்ற தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இதன் முரட்டுத்தனமான தோற்றத்திற்காக பயன்படுத்தப்பட்டிருக்கும் கிளாடிங்குகளே கேரன்ஸுக்கு இந்த தோற்றத்தை வழங்குகின்றது. கேரன்ஸ் காரின் உட்பகுதியில் இன்னும் பல்வேறு சிறப்பு வசதிகள் இடம் பெற்றிருக்கின்றன. குரோம் கார்னிஷ் கொண்ட கதவுகள், 10.25 இன்ச் அளவுள்ள ஆடியோ, வீடியோ நேவிகேஷன் டெலிமேட்டிக் வசதிக் கொண்ட திரை ( Audio Video Navigation Telematics) ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இதுமாதிரியான இன்னும் பல தனித்துவமான அம்சங்களை கேரன்ஸ் பெற்றிருக்கின்றது.

எம்மம்மா இந்த ஒத்த காருல இவ்ளோ வசதிகளா... டாடா சஃபாரி, ஹூண்டாய் அல்கஸார் எதையும் விட்டு வைக்காது போல! Kia Carens அறிமுகம்!

போஸ் பிரீமியம் தர சவுண்ட் சிஸ்டம் 8 ஸ்பீக்கர்களுடன், 64 நிறங்கள் கொம்ட ஆம்பிசியன்ட் மின் விளக்கு, வைரஸ் மற்றும் பாக்டீரியக்களை அழிக்கும் திறன் கொண்ட காற்று வடிகட்டி, காற்றோட்ட வசதிக் கொண்ட இருக்கைகள் (முன் பக்கத்தில்), ஸ்போர்ட்/ஈகோ/ நார்மல் ஆகிய டிரைவிங் மோட்கள், ஸ்கைலைட் சன்ரூஃப், பெரிய கேபின் வசதி மற்றும் இரண்டாவது வரிசை இருக்கைகளுக்கு ஒன் டச் ஈசி எலெக்ட்ரிக் டம்பிள் ஆகிய சிறப்பு தொழில்நுட்ப வசதிகள் கியா கேரன்ஸ் காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

எம்மம்மா இந்த ஒத்த காருல இவ்ளோ வசதிகளா... டாடா சஃபாரி, ஹூண்டாய் அல்கஸார் எதையும் விட்டு வைக்காது போல! Kia Carens அறிமுகம்!

இதுமட்டுமின்றி அடுத்த தலைமுறை கார் இணைப்பு வசதியும் கேரன்ஸ் வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காரை கியா நிறுவனம் அதன் அனந்தபூர் உற்பத்தி ஆலையில் வைத்தே தயாரித்து வருகின்றது. இந்த ஆலை ஆந்திராவில் அமைந்திருக்கின்றது. இங்கு வைத்து தயாரிக்கப்படும் கேரன்ஸ் கார்களே உலக நாடுகள் பலவற்றிற்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றது. ஆம், 'மேட் இன் இந்தியா' கேரன்ஸ்கள் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட இருக்கின்றன.

எம்மம்மா இந்த ஒத்த காருல இவ்ளோ வசதிகளா... டாடா சஃபாரி, ஹூண்டாய் அல்கஸார் எதையும் விட்டு வைக்காது போல! Kia Carens அறிமுகம்!

கியா கேரன்ஸ் காரில் பாதுகாப்பு அம்சங்களும் குறைச்சலின்றி காணப்படுகின்றன. பன்முக ஏர்பேக்குகள் (முன் மற்றும் பக்கவாட்டு பகுதியில் திரை போன்ற ஏர் பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன), இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிராக்கள், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், முன் மற்றும் பின் பக்கத்தில் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட பன்முக பாதுகாப்பு அம்சங்கள் கேரின்ஸில் வழங்கப்பட்டிருக்கின்றன.

எம்மம்மா இந்த ஒத்த காருல இவ்ளோ வசதிகளா... டாடா சஃபாரி, ஹூண்டாய் அல்கஸார் எதையும் விட்டு வைக்காது போல! Kia Carens அறிமுகம்!

மேலும், இந்த காரில் ஆறு ஏர் பேக்குகளை வழக்கமான அம்சமாக வழங்க கியா திட்டமிட்டுள்ளது. ஆகையால், இந்தியாவின் பாதுகாப்பான கார்களின் பட்டியலில் கேரன்ஸும் இணையும் எதிர்பார்க்கப்படுகின்றது. கியா கேரன்ஸ் இந்தியாவில் ஆறு மற்றும் ஏழு இருக்கைகள் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும். ஆகையால், பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற காராக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதிக இட வசதியை வழங்கும் பொருட்டு மிக நீளமான வீல் பேஸ் கேரன்ஸுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

எம்மம்மா இந்த ஒத்த காருல இவ்ளோ வசதிகளா... டாடா சஃபாரி, ஹூண்டாய் அல்கஸார் எதையும் விட்டு வைக்காது போல! Kia Carens அறிமுகம்!

காரின் விலை பற்றிய விபரம் வெளியிடப்படவில்லை. அதே நேரத்தில் சுமார் 15 லட்சம் ரூபாய் அல்லது இதற்கு நிகரான விலையிலேயே சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் வருகை நிச்சயம் 2022ம் ஆண்டின் முதல் காலாண்டில் அமையும் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

Most Read Articles
English summary
Kia carens debuts in india with 6 standard airbags across all variants
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X