கியா கேரன்ஸ் எம்பிவி கார் நாளை அறிமுகம்... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களும் இங்கே!

கியா கேரன்ஸ் கார் நாளை அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கியா கேரன்ஸ் எம்பிவி கார் நாளை அறிமுகம்... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களும் இங்கே!

கியா நிறுவனம் கேரன்ஸ் மூன்று வரிசை எம்பிவி காரை உலகளாவிய அளவில் அறிமுகம் செய்வதற்கு தயாராகி வருகிறது. வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கியா கேரன்ஸ் கார் நாளை (டிசம்பர் 16) அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதை தொடர்ந்து 2022ம் ஆண்டின் முதல் காலாண்டில் கியா கேரன்ஸ் கார் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

கியா கேரன்ஸ் எம்பிவி கார் நாளை அறிமுகம்... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களும் இங்கே!

கியா கேரன்ஸ் எம்பிவி கார் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் தேர்வுகளில் கிடைக்கவுள்ளது. இதில், 6 சீட்டர் மாடலின் நடுவரிசையில் கேப்டன் இருக்கைகள் இடம்பெறவுள்ளன. ஆனால் பவர்ட்ரெயின் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கியா நிறுவனத்தின் செல்டோஸ் எஸ்யூவி காருடன், கியா கேரன்ஸ் எம்பிவி கார் பகிர்ந்து கொள்ளவுள்ளது.

கியா கேரன்ஸ் எம்பிவி கார் நாளை அறிமுகம்... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களும் இங்கே!

இதன்படி கியா கேரன்ஸ் எம்பிவி காரில், 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் தேர்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 140 பிஎஸ் பவரையும், 242 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு ட்யூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கியா கேரன்ஸ் எம்பிவி கார் நாளை அறிமுகம்... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களும் இங்கே!

இதுதவிர 1.5 லிட்டர் நான்கு-சிலிண்டர் டீசல் இன்ஜின் தேர்வும் கியா கேரன்ஸ் காரில் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கியா கேரன்ஸ் காரில், 115 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வு ஸ்டாண்டர்டாக வழங்கப்படலாம்.

கியா கேரன்ஸ் எம்பிவி கார் நாளை அறிமுகம்... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களும் இங்கே!

இதுதவிர இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் தேர்வையும் கியா கேரன்ஸ் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதே நேரத்தில் இந்த காரின் வெளிப்புறத்தை பொறுத்தவரையில், எல்இடி ஹெட்லைட்கள், எல்இடி டிஆர்எல்கள் மற்றும் எல்இடி டெயில்லைட்கள் ஆகியவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கியா கேரன்ஸ் எம்பிவி கார் நாளை அறிமுகம்... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களும் இங்கே!

மேலும் ரூஃப் ரெயில்கள், ஜன்னல்களை சுற்றிலும் க்ரோம் லைன்கள், புதிய அலாய் வீல்கள், ஸ்பாய்லர் ஆகியவற்றையும் கியா கேரன்ஸ் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இன்டீரியரை பொறுத்தவரையில், பெரிய டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை எதிர்பார்க்கப்படுகிறது.

கியா கேரன்ஸ் எம்பிவி கார் நாளை அறிமுகம்... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களும் இங்கே!

பொதுவாக ஹூண்டாய் கார்களை போலவே கியா நிறுவனத்தின் கார்களிலும் ஏராளமான வசதிகள் வழங்கப்படும். இதன்படி கியா கேரன்ஸ் காரில், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், 6 ஏர்பேக்குகள், பல்வேறு கண்ட்ரோல்களுக்கான ஸ்விட்ச்கள் உடன் கூடிய ஸ்டியரிங் வீல், யுவோ கனெக்ட், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகிய வசதிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கியா கேரன்ஸ் எம்பிவி கார் நாளை அறிமுகம்... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களும் இங்கே!

மேலும் பனரோமிக் சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் சார்ஜர் ஆகிய வசதிகளையும் கியா கேரன்ஸ் கார் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஒட்டுமொத்தத்தில் கியா நிறுவனத்தின் மற்ற கார்களை போலவே கியா கேரன்ஸ் எம்பிவி காரிலும் அதிநவீன வசதிகளுக்கு பஞ்சமிருக்காது என்றே எதிர்பார்க்கலாம். கியா கேரன்ஸ் காரின் விலை என்னவாக இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது.

கியா கேரன்ஸ் எம்பிவி கார் நாளை அறிமுகம்... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களும் இங்கே!

தற்போது வெளியாகி வரும் தகவல்களின் அடிப்படையில் பார்த்தால் கியா கேரன்ஸ் காரின் ஆரம்ப விலை 14 லட்ச ரூபாயாக இருக்கலாம் என தெரிகிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 20 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இங்கே நாங்கள் குறிப்பிட்டுள்ளவை எதிர்பார்க்கப்படும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

கியா கேரன்ஸ் எம்பிவி கார் நாளை அறிமுகம்... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களும் இங்கே!

ஆனால் நாளை அறிமுகம் செய்யப்படும்போது கியா கேரன்ஸ் காரின் விலை அறிவிக்கப்பட மாட்டாது என்றே தெரிகிறது. பொதுவாக கார்களை பொது பார்வைக்கு கொண்டு வரும்போது உற்பத்தி நிறுவனங்கள் விலையை அறிவிப்பதில்லை. மாறாக டிசைன், வசதிகள், இன்ஜின் தேர்வுகள் போன்ற தகவல்கள் மட்டுமே வெளியிடப்படும்.

கியா கேரன்ஸ் எம்பிவி கார் நாளை அறிமுகம்... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களும் இங்கே!

அதை தொடர்ந்து விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போதுதான் விலை அறிவிக்கப்படும். இந்திய சந்தையில் மஹிந்திரா மராஸ்ஸோ, மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரின் டாப் வேரியண்ட்கள் மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஆகிய எம்பிவி கார்களுடன் புத்தம் புதிய கியா கேரன்ஸ் கார் போட்டியிடும்.

Most Read Articles
English summary
Kia carens mpv global debut tomorrow here s everything you need to know
Story first published: Wednesday, December 15, 2021, 20:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X