6-இருக்கை கியா கார்னிவல் விற்பனைக்கு அறிமுகம், விலை ரூ.28.95 லட்சம்!! 9-இருக்கை வெர்சனின் விற்பனை நிறுத்தம்

கியா கார்னிவலின் புதிய 6 இருக்கை மாடல் ரூ.28.95 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய கார்னிவல் காரை பற்றிய கூடுதல் விபரங்களை விரிவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

6-இருக்கை கியா கார்னிவல் விற்பனைக்கு அறிமுகம், விலை ரூ.28.95 லட்சம்!! 9-இருக்கை வெர்சனின் விற்பனை நிறுத்தம்

இந்திய சந்தையில் சமீபத்தில் நுழைந்து வாடிக்கையாளர்களின் கவனத்தை பெற்ற கார் பிராண்ட்களுள் தென்கொரியாவை சேர்ந்த கியாவும் ஒன்றாகும். 2019இல் செல்டோஸ் எஸ்யூவியின் மூலம் நம் நாட்டில் காலடி எடுத்துவைத்த கியா தற்சமயம் இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக விளங்குகிறது.

6-இருக்கை கியா கார்னிவல் விற்பனைக்கு அறிமுகம், விலை ரூ.28.95 லட்சம்!! 9-இருக்கை வெர்சனின் விற்பனை நிறுத்தம்

ஆந்திர பிரதேசத்தில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டுவரும் கியா நிறுவனம் இந்தியாவில் கார்கள் தயாரிப்பில் வெற்றிக்கரமாக சமீபத்தில் 3 லட்சம் என்ற மைல்கல்லை கடந்தது. விரைவாக இந்த சாதனையை நெருங்கியதற்கு கியாவின் செல்டோஸ் & சொனெட் எஸ்யூவி கார்களுக்கு வாடிக்கையாளர்கள் அளித்துவரும் வரவேற்பினை முக்கிய காரணமாக சொல்லலாம்.

6-இருக்கை கியா கார்னிவல் விற்பனைக்கு அறிமுகம், விலை ரூ.28.95 லட்சம்!! 9-இருக்கை வெர்சனின் விற்பனை நிறுத்தம்

செல்டோஸ் முதல் மாடலாக அறிமுகப்படுத்திய கியா, சொனெட் காம்பெக்ட் எஸ்யூவியை மூன்றாவது மாடலாக களமிறக்கியது. இவற்றிற்கு இடையில் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் மூலம் 2வது கியா மாடலாக கார்னிவல் எம்பிவி அறிமுகப்படுத்தப்பட்டது. மற்ற இரண்டுடன் ஒப்பிடுகையில், கார்னிவல் மாடல் சற்று வேறுப்பட்டதாகும்.

6-இருக்கை கியா கார்னிவல் விற்பனைக்கு அறிமுகம், விலை ரூ.28.95 லட்சம்!! 9-இருக்கை வெர்சனின் விற்பனை நிறுத்தம்

அதாவது, செல்டோஸ் & சொனெட் என்ற இரண்டும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் நிலையில், கார்னிவல் முழுவதுமாக வெளிநாட்டு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு நம் நாட்டில் இறக்குமதி செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி, இதன் உட்புற & வெளிப்புற தோற்றமும் மிகவும் பிரீமியம் தரத்தில் உள்ளதால், கார்னிவலை சொகுசு காராகவே கியா முன்னிலைப்படுத்தி வருகிறது.

6-இருக்கை கியா கார்னிவல் விற்பனைக்கு அறிமுகம், விலை ரூ.28.95 லட்சம்!! 9-இருக்கை வெர்சனின் விற்பனை நிறுத்தம்

இந்த நிலையில் தான் தற்போது புதிய 6-இருக்கை கார்னிவலை கியா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னதாக இந்த கியா எம்பிவி மாடல் 7-இருக்கை, 8-இருக்கை மற்றும் 9-இருக்கை தேர்வுகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது புதியதாக 6-இருக்கை வெர்சன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், 9-இருக்கை மாடலின் விற்பனை நிறுத்தி கொள்ளப்பட்டுள்ளது.

6-இருக்கை கியா கார்னிவல் விற்பனைக்கு அறிமுகம், விலை ரூ.28.95 லட்சம்!! 9-இருக்கை வெர்சனின் விற்பனை நிறுத்தம்

6-இருக்கை கார்னிவலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.28.95 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுளது. இந்தியாவில் கார்னிவல் எம்பிவியை பிரீமியம், பிரெஸ்டீஜ், லிமௌசைன் மற்றும் லிமௌசைன் ப்ளஸ் என்கிற நான்கு விதமான வேரியண்ட்களில் கியா நிறுவனம் சந்தைப்படுத்தி வருகிறது. ஆனால் இவற்றில் மத்திய பிரெஸ்டீஜ் வேரியண்ட்டில் மட்டுமே புதிய 6-இருக்கை கார்னிவல் விற்பனை செய்யப்பட உள்ளது.

6-இருக்கை கியா கார்னிவல் விற்பனைக்கு அறிமுகம், விலை ரூ.28.95 லட்சம்!! 9-இருக்கை வெர்சனின் விற்பனை நிறுத்தம்

மேலும் புதிய 6-இருக்கை வெர்சனின் அறிமுகத்தினால் கார்னிவலின் மொத்த வேரியண்ட்கள் வரிசையும் சற்று திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, கார்னிவலின் ஆரம்ப நிலை பிரீமியம் வேரியண்ட் 7 மற்றும் 8 இருக்கை தேர்வுகளில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கவுள்ளது.

6-இருக்கை கியா கார்னிவல் விற்பனைக்கு அறிமுகம், விலை ரூ.28.95 லட்சம்!! 9-இருக்கை வெர்சனின் விற்பனை நிறுத்தம்

அதுவே பிரெஸ்டீஜ் வேரியண்ட் 6 மற்றும் 7 இருக்கை தேர்வுகளிலும், டாப் லிமௌசைன் மற்றும் லிமௌசைன் ப்ளஸ் வேரியண்ட்கள் 7-இருக்கை தேர்விலும் வழங்கப்பட உள்ளன. ஏற்கனவே கூறியதுதான், இனி கார்னிவல் எம்பிவி காரை இந்தியாவில் 9-இருக்கை தேர்வுகளில் பெற முடியாது. அதேபோல் ஏற்கனவே விற்பனையில் உள்ள வேரியண்ட்களின் விலைகளையும் கியா நிறுவனம் அப்டேட் செய்துள்ளது.

6-இருக்கை கியா கார்னிவல் விற்பனைக்கு அறிமுகம், விலை ரூ.28.95 லட்சம்!! 9-இருக்கை வெர்சனின் விற்பனை நிறுத்தம்

இதன்படி கார்னிவல் எம்பி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.24.95 லட்சத்தில் (பிரீமியம் 7-இருக்கை) இருந்து ரூ.33.99 லட்சம் (லிமௌசைன் ப்ளஸ் 7-இருக்கை) வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இதுகுறித்த அறிவிப்பினை கியா நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

6-இருக்கை கியா கார்னிவல் விற்பனைக்கு அறிமுகம், விலை ரூ.28.95 லட்சம்!! 9-இருக்கை வெர்சனின் விற்பனை நிறுத்தம்

இவ்வளவு ஏன், தற்போது புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 6-இருக்கை கார்னிவலின் ரூ.28.95 லட்சம் என்ற விலையும் அங்கீகரிக்கப்பட்ட கியா டீலர்ஷிப் ஒன்றின் மூலமாகவே நமக்கு தெரிய வந்துள்ளது. தற்போதைய திருத்தியமைப்புகளினால் 8-இருக்கை தேர்வில் கார்னிவலை பிரீமியம் வேரியண்ட்டில் மட்டுமே பெற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

6-இருக்கை கியா கார்னிவல் விற்பனைக்கு அறிமுகம், விலை ரூ.28.95 லட்சம்!! 9-இருக்கை வெர்சனின் விற்பனை நிறுத்தம்

புதிய 6-இருக்கை மாடலில் உட்புறத்தில் இருக்கைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதால், கேபினில் கூடுதல் இடவசதியும், அதிக எண்ணிக்கையில் கேப்டன் இருக்கைகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த புதிய மாடல் ஆனது கார்னிவலின் 7 மற்றும் 8-இருக்கை வேரியண்ட்களை காட்டிலும் பொருட்களை வைக்க பெரிய அளவில், 540 லிட்டர் கொள்ளளவில் இடவசதியை பெற்றுள்ளது.

Most Read Articles

மேலும்... #கியா #kia
English summary
Kia carnival 6 seater variant launch soon details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X