4பேர் மட்டுமே செல்ல கூடிய வாகனமாக உருவாகிய கியா கார்னிவல்! செல்வந்தர்களை குறி வைத்து களமிறங்கும் சொகுசு கார்!

கியா நிறுவனம் அதன் நான்கு இருக்கைகள் வசதிக் கொண்ட கார்னிவல் எம்பிவி ரக காரை வெளியீடு செய்துள்ளது. இந்த கார்குறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

வெறும் 4 பேர் மட்டுமே செல்லும் வகையில் உருவாகிய கியா கார்னிவல்! செல்வந்தர்களை குறி வைத்து களமிறங்கும் சொகுசு கார்!

தென் கொரியாவைச் சேர்ந்த கார் உற்பத்தியாளரான கியா அதன் கார்னிவல் சொகுசு காரை மேலும் சொகுசு வசதிக் கொண்ட வாகனமாக மாற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, கார்னிவல் எம்பிவி ரக காரை நான்கு இருக்கைகள் மட்டுமே கொண்ட வாகனமாக அது மாற்றியிருக்கிறது.

வெறும் 4 பேர் மட்டுமே செல்லும் வகையில் உருவாகிய கியா கார்னிவல்! செல்வந்தர்களை குறி வைத்து களமிறங்கும் சொகுசு கார்!

மிக அதிக சொகுசு வசதியை விரும்பும் செல்வந்தர்களைக் கவரும் நோக்கில் இத்தகைய வசதியுடன் கார்னிவல் எம்பிவி உருவாக்கப்பட்டுள்ளது. இது நான்காம் தலைமுறை கார்னிவல் ஆகும். இன்னும் இத்தலைமுறை கார்னிவல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. தற்போது தென் கொரியாவில் மட்டுமே வெளியீடு செய்யப்பட்டிருக்கின்றது.

வெறும் 4 பேர் மட்டுமே செல்லும் வகையில் உருவாகிய கியா கார்னிவல்! செல்வந்தர்களை குறி வைத்து களமிறங்கும் சொகுசு கார்!

இந்தியாவில் இந்த நான்காம் தலைமுறை கார்னிவல் அடுத்த வருடம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய நான்காம் தலைமுறை கார்னிவல் காரை கியா நிறுவனம் அதிக இட வசதி கொண்ட வாகனமாக உருவாக்கியிருக்கிறது. பொதுவாக கார்னிவல் கார் 5,115 மிமீ அளவைக் கொண்டதாக இருக்கின்றது.

வெறும் 4 பேர் மட்டுமே செல்லும் வகையில் உருவாகிய கியா கார்னிவல்! செல்வந்தர்களை குறி வைத்து களமிறங்கும் சொகுசு கார்!

இது கார்னிவல் எம்பிவியின் வழக்கமான வேரியண்டின் அளவாகும். இதிலேயே 11 பேர் அமர்ந்து செல்ல முடியும். ஆனால், இதைக் காட்டிலும் அதிக இடவசதிக் கொண்ட தேர்வாக இதன் டாப்-ஸ்பெக் லிமோசைன் ஹை-ட்ரிம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை 5,200 மிமீ அளவில் கியா உருவாக்கியுள்ளது. ஆகையால், மிக அதிக இட வசதியுடன் இந்த டாப்-ஸ்பெக் உருவாகியிருக்கின்றது.

வெறும் 4 பேர் மட்டுமே செல்லும் வகையில் உருவாகிய கியா கார்னிவல்! செல்வந்தர்களை குறி வைத்து களமிறங்கும் சொகுசு கார்!

அதேசமயம், சொகுசான பயண அனுபவத்தை விரும்புவோர்களின் மனதைக் கவர்வதற்காக இந்த வாாகனத்தை வெறும் நான்கு இருக்கைகள் மட்டுமே கொண்ட வாகனமாக கியா உருவாக்கியிருக்கின்றது. இந்த நான்கு இருக்கைகளும் கேப்டைன் இருக்கைகளைப் போல் தனி தனியாகவும், அதிக பிரீமியம் வசதிகளைக் கொண்டதாகவும் இருக்கின்றன.

வெறும் 4 பேர் மட்டுமே செல்லும் வகையில் உருவாகிய கியா கார்னிவல்! செல்வந்தர்களை குறி வைத்து களமிறங்கும் சொகுசு கார்!

நெப்பா லெதர், மசாஜ் மற்றும் காற்றோட்டத்தை உறுதிப்படுத்தும் வசதி என பல தரப்பட்ட வசதிகளை இருக்கைகள் கொண்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி, கழுத்து, கால் மற்றும் தலை என அனைத்திற்கும் மிக சிறந்த ஓய்வளிக்கும் வசதியையும் இந்த இருக்கைகள் கொண்டிருக்கின்றன.

வெறும் 4 பேர் மட்டுமே செல்லும் வகையில் உருவாகிய கியா கார்னிவல்! செல்வந்தர்களை குறி வைத்து களமிறங்கும் சொகுசு கார்!

பிரீமியம் வசதிகளின் தொகுப்பு:

பின் இருக்கையாளர்களுக்கு கூடுதல் சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. சூரிய ஒளி புகா கண்ணாடி, சூடு மற்றும் குளிர்ச்சியாக்கக் கூடிய கோப்பை தாங்கிகள், காற்று வடிகட்டி, கால்களுக்கு மசாஜ் வழங்கும் வசதி, எல்இடி ஆம்பிசியன்ட் மின் விளக்கு, படிக்க உதவும் மின் விளக்கு, 21.5 இன்சிலான ஸ்மார்ட் மானிட்டர் மற்றும் இப்பெரிய திரையை கன்ட்ரோல் செய்ய ஏதுவாக 7.0 இன்சிலான திரை உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன.

வெறும் 4 பேர் மட்டுமே செல்லும் வகையில் உருவாகிய கியா கார்னிவல்! செல்வந்தர்களை குறி வைத்து களமிறங்கும் சொகுசு கார்!

தொடர்ந்து, ஸ்மார்ட் போன் இணைப்பு, ஒயர்லெஸ் சார்ஜிங் வசதி, ஸ்டோரேஜ் பாக்ஸ், சிறிய குளிர்சாதன பெட்டி போன்ற இன்னும் பல அதிக சிறப்பு வாய்ந்த அம்சங்களும் இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றன. இந்த அனைத்து அம்சங்கள் அனைத்தும் டாப்-ஸ்பெக் மாடல் கியா கார்னிவல் எம்பிவியில் மட்டுமே கிடைக்கும்.

வெறும் 4 பேர் மட்டுமே செல்லும் வகையில் உருவாகிய கியா கார்னிவல்! செல்வந்தர்களை குறி வைத்து களமிறங்கும் சொகுசு கார்!

இதுபோன்று பல மடங்கு அதிக சிறப்பு வசதிகளைக் கியா கார்னிவல் 4 சீட்டர் கொண்டிருப்பதால் இதனை அல்ட்ரா லக்சூரியஸ் கார்னிவல் எம்பிவி என நிறுவனம் அழைக்கத் தொடங்கியிருக்கின்றது. இந்த காரில் 3.5 லிட்டர் ஸ்மார்ட் ஸ்ட்ரீம் வி6 பெட்ரோல் எஞ்ஜின் அல்லது 2.2 லிட்டர் சிஆர்டிஐ டீசல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட இருக்கின்றது.

Most Read Articles

English summary
Kia Carnival Four Seat Variant Debuts in South Korea. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X