புதிய லோகோவுடன் கியா சொனெட், செல்டோஸ் கார்கள் எப்போது அறிமுகம்?

கியா நிறுவனத்தின் புதிய லோகோவுடன் கூடிய சொனெட், செல்டோஸ் கார்கள் இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

புதிய லோகோவுடன் கியா கார்கள் எப்போது அறிமுகம்?

தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார் நிறுவனம் தனது லோகோவை அண்மையில் மாற்றியது. தென்கொரியாவில் நடந்த வண்ணமிகு விழாவில் வைத்து தனது நிறுவனத்திற்கான புதிய அடையாளச் சின்னத்தை அந்த நிறுவனம் வெளியிட்டது.

இந்த புதிய லோகோ உலக அளவில் விற்பனை செய்யப்படும் கியா கார்களில் கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கியா கார்களிலும் இந்த புதிய லோகோ இடம்பெற இருக்கிறது.

இதுகுறித்து கியா கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஹோ சங் சாங் கூறுகையில்,"இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களிலும் புதிய லோகோ விரைவில் கொடுக்கப்படடும். இந்த ஆண்டு மத்தியில் புதிய லோகோ செல்டோஸ், சொனெட் கார்களில் எதிர்பார்க்கலாம்," என்று தெரிவித்துள்ளார்.

இதுதவிர்த்து, டீலர்களிலும் அடையாளச் சின்னத்தை மாற்றும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், இந்தியாவில் உள்ள கியா ஷோரூம்களில் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

கியா மோட்டார் நிறுவனம் இந்தியாவில் விற்பனையில் மிக வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. மிக குறுகிய காலத்தில் அதீத விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது. மேலும், அந்நிறுவனம் அறிமுகம் செய்து வரும் கார்களுக்கு பெரிய அளவிலான வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக, செல்டோஸ், சொனெட் கார்கள் விற்பனையில் அசத்தி வருகின்றன.

இதையடுத்து, பல புதிய கார் மாடல்களை இந்தியாவில் கொண்டு வருவதற்கான முயற்சிகளிலும் கியா மோட்டார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்தியர்களை கவரும் வகயைில், புதிய கார் மாடல்களை கொண்டு வருவதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து செயலாற்றி வருகிறது.

Via- CNB

Most Read Articles

English summary
Kia car will get new logo in India very soon.
Story first published: Monday, January 18, 2021, 10:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X