Just In
- 1 hr ago
உலகின் முதல் லிடார் தொழில்நுட்பம் கொண்ட மின்சார கார்... இது எந்த நாட்டின் நிறுவன தயாரிப்பு தெரியுமா?
- 1 hr ago
மெர்சிடிஸின் அடுத்த எலக்ட்ரிக் செடான்... இக்யுஎஸ்!! 700கிமீ ரேஞ்ச் உடன் தயாரிப்பு!
- 2 hrs ago
குட் நியூஸ்... சென்னையில் விற்பனைக்கு வருகிறது பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
- 3 hrs ago
செம்ம டிமேண்ட்! உற்பத்தியைவிட தேவை பல மடங்கு அதிகரிப்பு! க்ரெட்டா எஸ்யூவிக்கு தொடரும் பிரமாண்ட எதிர்பார்ப்பு!!
Don't Miss!
- Education
ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் DRDO-வில் பணியாற்றலாம் வாங்க!
- News
இறக்கும் முன்னர் கொரோனா விழிப்புணர்வு.. இறந்த பின் விவேக் மக்களுக்கு சொல்லும் அறிவுரை "இதுதான்!"
- Sports
குறி வைத்த கோலி.. தமிழக வீரரை இந்திய அணிக்கு தட்டி தூக்க ரெடி.. முதல் "பவர்-ஹிட்டர்" பேட்ஸ்மேன்!
- Lifestyle
செட்டிநாடு பீன்ஸ் காலிஃப்ளவர் பொரியல்
- Finance
16% சம்பள உயர்வு, 5 நாள் வேலை.. 1.14 லட்சம் எல்ஐசி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!
- Movies
விவேக் பெயரில் குழப்பிய மும்பை ஊடகங்கள்.. பதறியடித்து டிவிட்டிய பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
போர்ஷே டைகானையே தூக்கி சாப்டும் வேகத்துடன் உருவாகும் கியாவின் முதல் பேட்டரி கார்!! இவி6 என பெயர்...
கியா மோட்டார்ஸின் முதல் முழு எலக்ட்ரிக் எஸ்யூவி காராக வெளிவரவுள்ள இவி6-ஐ பற்றிய கூடுதல் விபரங்கள் தெரிய வந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

தென் கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் இவி6 என்ற பெயரில் அதன் முதல் முழு-எலக்ட்ரிக் எஸ்யூவி காரை பற்றிய விபரங்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது.

அதனை தொடர்ந்து தற்போது இந்த கியா எலக்ட்ரிக் காரை பற்றிய கூடுதல் விபரங்கள் தெரியவந்துள்ளன. இந்த விபரங்களின்படி, இந்த க்ராஸ்ஓவர் எஸ்யூவி மாடல் பூஜ்ஜிய மாசு உமிழ்வு உடன் நீண்டதூர ரேஞ்சை பெற்றுவரவுள்ளது.

மேலும் 800 வோல்ட் அதி-வேக சார்ஜிங்கையும் கியா இவி6 கார் பெற்றுவரவுள்ளதாக இந்த தகவல்களில் கூறப்பட்டுள்ளன. எலக்ட்ரிக் கார்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இ-ஜிஎம்பி ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்படவுள்ள முதல் கார் மாடல் இந்த கியா எலக்ட்ரிக் காராகும்.

இதனை தொடர்ந்து கூட்டணி நிறுவனமான ஹூண்டாயின் புதிய ஐயோனிக் 5 எலக்ட்ரிக் காரும் இதே ப்ளாட்ஃபாரத்தை உபயோகப்படுத்தி தான் உருவாக்கப்பட உள்ளது. 4,680மிமீ நீளம், 1880மிமீ அகலம், 1,550மிமீ உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள கியா இவி6 காரின் வீல்பேஸ் 2,900மிமீ நீளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

‘ஆப்போசைட்ஸ் யுனிடெட்' என்ற கியா மோட்டார்ஸின் புதிய டிசைன் தத்துவத்தில் தோற்றத்தை பெற்றுள்ள இவி6 எலக்ட்ரிக் கார் கியாவின் லைன்அப்பில் ஸ்போர்டேஜிற்கும் சொரெண்டோவிற்கும் இடையில் எங்கு வேண்டுமானாலும் நிலைநிறுத்தப்படலாம்.

இவி6 காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 58kWh மற்றும் 77.4kWh என்ற இரு விதமான பேட்டரி தொகுப்புகள் தேர்வுகளாக கொடுக்கப்பட உள்ளன. இதில் ஒரு பேட்டரி, காரின் பின் சக்கரங்களை இயக்கும் ஒற்றை எலக்ட்ரிக் மோட்டாரில் பொருத்தப்படும்.

அதேநேரம் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலக்ட்ரிக் காரை போல் இவி6 காரின் விலைமிக்க வேரியண்ட்களிலும் இரு எலக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட உள்ளன. ஒற்றை எலக்ட்ரிக் மோட்டார் & சிறிய பேட்டரி தொகுப்பின் மூலம் அதிகப்பட்சமாக 168எச்பி வரையிலான ஆற்றலை பெறலாமாம்.

அதுவே அனைத்து-சக்கர ட்ரைவ் வேரியண்ட்களில் கூடுதலாக முன் மோட்டார் பொருத்தப்படுவதினால் 232 எச்பி வரையிலான ஆற்றலில் காரை இயக்க முடியும். பெரிய அளவிலான பேட்டரி தொகுப்புடன் ஒற்றை மோட்டாரில் 225 எச்பி பவரையும், இரட்டை-மோட்டார் வேரியண்ட்களில் அதிகப்பட்சமாக 321எச்பி வரையிலான ஆற்றல்களையும் பெற முடியும்.

இவற்றுடன் இவி6 ஜிடி காரும் 577எச்பி மற்றும் 740 என்எம் டார்க் திறன் என்ற அதிகப்பட்ச ஆற்றலில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. கியாவின் இந்த ஜிடி காரில் 0-வில் இருந்து 100kmph வேகத்தை 3.5 வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் பெற்றுவிட முடியுமாம். இந்த வகையில் கியாவின் இந்த எலக்ட்ரிக் கார் உலகளவில் பிரபலமான போர்ஷே டைகான் 4எஸ் காரை முந்தியுள்ளது.

கியா இவி6 ஜிடி எலக்ட்ரிக் காரின் அதிகப்பட்ச வேகம் 260kmph ஆகும். பெரிய பேட்டரி தொகுப்பில் சிங்கிள்-மோட்டார் உடன் பின்-சக்கர ட்ரைவ் உள்ளமைவை பெறும் கியா இவி6 எலக்ட்ரிக் காரை அதிகப்பட்சமாக சிங்கிள்-முழு சார்ஜில் 510கிமீ தூரத்திற்கு இயக்கி செல்ல முடியும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.