2027க்குள் 7 புதிய எலக்ட்ரிக் கார்கள்!! எதிர்காலத்திற்காக அதிரடி திட்டங்களை வகுத்து வைத்துள்ள கியா

தென் கொரியாவை சேர்ந்த கியா நிறுவனம் அதன் எதிர்கால கார் மாடல்களை பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளது. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

2027க்குள் 7 புதிய எலக்ட்ரிக் கார்கள்!! எதிர்காலத்திற்காக அதிரடி திட்டங்களை வகுத்து வைத்துள்ள கியா

கியா நிறுவனம் அதன் புதிய லோகோவை கடந்த வாரம் வெளியிட்டு இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது எதிர்கால திட்டங்கள் இந்த நிறுவனத்தில் இருந்து வெளிவந்துள்ளன.

2027க்குள் 7 புதிய எலக்ட்ரிக் கார்கள்!! எதிர்காலத்திற்காக அதிரடி திட்டங்களை வகுத்து வைத்துள்ள கியா

முன்பு கியா மோட்டார்ஸ் என அறியப்பட்ட இந்த தென் கொரிய கார் தயாரிப்பு நிறுவனம் தனது பெயரில் இருந்த மோட்டார்ஸ் என்ற வார்த்தையை நீக்கியுள்ளது. இதனால் இனி வெறும் கியா பெயரில் அழைக்கப்படவுள்ள இந்த நிறுவனம், அடுத்ததாக நுழையுள்ள சந்தைகளிலும் இதே பெயரில்தான் அறிமுகமாகவுள்ளது.

2027க்குள் 7 புதிய எலக்ட்ரிக் கார்கள்!! எதிர்காலத்திற்காக அதிரடி திட்டங்களை வகுத்து வைத்துள்ள கியா

புதிய ‘திட்டம்-எஸ்'-இன்படி இவி, இயக்கத்திற்கான தீர்வுகள், காரணத்துடன் தயாரிக்கப்படும் வாகனங்கள் (தனியார் பயன்பாட்டிற்கான கார்கள், ஓட்டுநர் வைத்து இயக்கப்படும் லக்சரி கார்கள்) உள்ளிட்ட பிரிவுகளிலும் கியா தன்னை உட்படுத்தி கொள்ளவுள்ளது.

2027க்குள் 7 புதிய எலக்ட்ரிக் கார்கள்!! எதிர்காலத்திற்காக அதிரடி திட்டங்களை வகுத்து வைத்துள்ள கியா

இந்த வகையில் 2027க்குள் மொத்தம் 7 எலக்ட்ரிக் கார்கள் புதியதாக கியா நிறுவனத்தில் இருந்து வெளிவரவுள்ளன. எஸ்யூவிகள், எம்பிவிகள் என வெவ்வேறான உடற் அமைப்பில் வெளிவரவுள்ள இவற்றிற்கு இவி1-ல் இருந்து இவி-7 வரையில் பெயர்களை வைக்க கியா முடிவெடுத்துள்ளது.

2027க்குள் 7 புதிய எலக்ட்ரிக் கார்கள்!! எதிர்காலத்திற்காக அதிரடி திட்டங்களை வகுத்து வைத்துள்ள கியா

இந்த புதிய எலக்ட்ரிக் அறிமுகங்கள் ஹூண்டாய் மோட்டார் க்ரூப்பின் உலகளாவிய எலக்ட்ரிக் மாடுலர் ப்ளாட்ஃபாரத்தில் (இ-ஜிஎம்பி) வடிவமைக்கப்படவுள்ளன. இதில் முதல் இவி கார் 2021ன் முதல் கால்பகுதியில் வெளிவரவுள்ளது.

2027க்குள் 7 புதிய எலக்ட்ரிக் கார்கள்!! எதிர்காலத்திற்காக அதிரடி திட்டங்களை வகுத்து வைத்துள்ள கியா

வெறும் 20 நிமிடங்களில் சார்ஜ் நிரப்பிவிடும் அளவிற்கு விரைவான சார்ஜிங் நேரத்தை பெற்றுவரவுள்ள இந்த கியா எலக்ட்ரிக் காரின் ரேஞ்ச் 500கிமீ அளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கியாவின் புதிய லோகோவை பெற்றுவரும் முதல் காராகவும் இதுதான் இருக்கும்.

2027க்குள் 7 புதிய எலக்ட்ரிக் கார்கள்!! எதிர்காலத்திற்காக அதிரடி திட்டங்களை வகுத்து வைத்துள்ள கியா

2025க்குள் உலகளாவிய கார்கள் விற்பனையில் 6.6 சதவீதத்தை பெற்றுவிட வேண்டும் என திட்டமிட்டுள்ள கியா 2026ல் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் 5,00,000 என்ற மைல்கல்லை உலகளவில் கடந்தவிட வேண்டும் என்பதையும் இலக்காக கொண்டுள்ளது.

2027க்குள் 7 புதிய எலக்ட்ரிக் கார்கள்!! எதிர்காலத்திற்காக அதிரடி திட்டங்களை வகுத்து வைத்துள்ள கியா

ஏற்கனவே கூறியதுபோல் எலக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமின்றி தாழ்வான கார்கள் மற்றும் டெலிவிரி வேன்கள் மூலமாக கார் பகிர்ந்து கொள்ளும் சேவைகளுக்கும் தயாரிப்பு வாகனங்களை கியா வழங்கவுள்ளது. இதற்காக க்ராப், ஒலா மற்றும் ரெப்சோல் போன்ற நிறுவனங்களுடன் இந்த தென் கொரிய நிறுவனம் கூட்டணி ஏற்படுத்தி கொள்ளவுள்ளது.

Most Read Articles

மேலும்... #கியா #kia motors
English summary
Kia announces new future strategy; to launch seven new EVs by 2027
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X