2021ல் மூன்றாவது முறையாக செல்டோஸ் & சொனெட்டின் விலைகளை உயர்த்திய கியா!! புதிய விலைகள் இனி இவை தான்

கியா செல்டோஸ், சொனெட் கார்களின் விலைகள் அதிரடியாக ரூ.20,000 வரையில் உயர்த்தப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

தென்கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான கியா இந்திய சந்தையில் தனது தயாரிப்பு வாகனங்கள் மற்றும் அவற்றிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள ஏற்கக்கூடிய விலைகளினால் வேகமாக முன்னணி நிறுவனமாக உருவெடுத்து வருகிறது. கியா பிராண்டில் இருந்து முதல் மாடலாக செல்டோஸ் கடந்த 2019ல் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தியாவில் கியா நிறுவனம் அடைந்துள்ள வளர்ச்சிக்கு செல்டோஸ் மிக முக்கியமான காரணம் என்றால், அதில் மிகையில்லை. இந்த நடுத்தர-அளவு எஸ்யூவி காருக்கு கிடைத்துவரும் அதே அளவிலான வரவேற்பு, இதனை தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்ட காம்பெக்ட் எஸ்யூவி காரான சொனெட்டிற்கு கிடைத்து வருகிறது.

முழுவதும் தயாரிக்கப்பட்ட நிலையில் இறக்குமதி செய்யப்பட்டு எம்பிவி காராக கார்னிவல் விற்பனை செய்யப்பட்டாலும், தற்போதைக்கு இந்தியாவில் இந்த இரு எஸ்யூவி கார்கள் தான் கியாவின் நம்பிக்கை மாடல்களாக விளங்குகின்றன. இத்தகைய மாடல்களின் விலைகளை தான் தற்போது கியா நிறுவனம் கணிசமாக உயர்த்தியுள்ளது.

கியா செல்டோஸ் மற்றும் சொனெட் கார்களின் விலைகள் அதிகரிக்கப்படுவது இந்த வருடத்தில் இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்பு கடந்த ஜனவரி மற்றும் மே மாதங்களில் உயர்த்தப்பட்டு இருந்தன. இம்முறை விலைகள் அதிகரிக்கப்பட்டிருப்பதற்கும், தொடர்ந்து அதிகரித்துவரும் உலோக பாகங்களின் விலைகளும், போக்குவரத்து செலவுமே காரணமாக உள்ளது.

செல்டோஸை பொறுத்தவரையில், மூன்று விதமான என்ஜின் தேர்வுகளில் கிடைக்கும் இந்த எஸ்யூவி காரின் ஆரம்ப விலையில் எந்த மாற்றமும் இல்லை. முன்பு ரூ.9.95 லட்சமாக இருந்தது. தற்போதும் அதே விலை தான் நீடிக்கிறது. இந்த ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் செல்டோஸின் எண்ட்ரீ-லெவல் எச்.டி.இ வேரியண்ட் வழங்கப்படுகிறது.

Seltos P 1.5 New Price Old Price Difference
HTE ₹9.95 Lakh ₹9.95 Lakh 0
HTK ₹10.84 Lakh ₹10.74 Lakh ₹10,000
HTK+ ₹11.89 Lakh ₹11.79 Lakh ₹10,000
HTK + iMT ₹12.29 Lakh ₹12.19 Lakh ₹10,000
HTX ₹13.75 Lakh ₹13.65 Lakh ₹10,000
HTX IVT ₹14.75 Lakh ₹14.65 Lakh ₹10,000
Seltos P 1.4 New Price Old Price Difference
GTX NA ₹15.65 Lakh -
GTX (O) ₹15.45 Lakh ₹15.35 Lakh ₹10,000
GTX+ ₹16.75 Lakh ₹16.65 Lakh ₹10,000
GTX+ DCT ₹17.54 Lakh ₹17.44 Lakh ₹10,000
X-Line DCT ₹17.79 Lakh - -
Seltos D 1.5 New Price Old Price Difference
HTE ₹10.65 Lakh ₹10.45 Lakh ₹20,000
HTK ₹11.99 Lakh ₹11.79 Lakh ₹20,000
HTK+ ₹13.19 Lakh ₹12.99 Lakh ₹20,000
HTK+ AT ₹14.15 Lakh ₹13.95 Lakh ₹20,000
HTX ₹14.95 Lakh ₹14.75 Lakh ₹20,000
HTX+ ₹15.99 Lakh ₹15.79 Lakh ₹20,000
GTX+ AT ₹17.85 Lakh ₹17.65 Lakh ₹20,000
X-Line AT ₹18.10 Lakh - -

இந்த பெட்ரோல் என்ஜின் உடனான செல்டோஸின் மற்ற வேரியண்ட்களின் விலைகள் தலா ரூ.10 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளன. 1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் செல்டோஸின் ஆரம்ப விலையாக முன்பு ரூ.15.65 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருந்தது. ஆனால் தற்போது இந்த விலையில் கிடைத்துவந்த செல்டோஸ் ஜிடிஎக்ஸ் வேரியண்ட்டின் புதிய விலை வெளியிடப்படவில்லை.

ஆதலால் இந்த டர்போ-பெட்ரோல் ட்ரிம்-இன் தயாரிப்பு நிறுத்தப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மிக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய எக்ஸ்-லைன் ட்ரிம்-இன் வருகையின் காரணமாக இந்த நடவடிக்கையினை கியா மேற்கொண்டிருக்க வேண்டும். செல்டோஸ் எக்ஸ்-லைனின் ஆரம்ப விலையாக நிர்ணயிக்கப்பட்ட ரூ.17.79 லட்சத்தில் எந்த மாற்றமும் இல்லை.

செல்டோஸ் பெட்ரோல் வேரியண்ட்களை போன்று டர்போ-பெட்ரோல் வேரியண்ட்களின் விலைகளும் தலா ரூ.10 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளன. ஆனால் டீசல் வேரியண்ட்களின் விலைகள் ரூ.20 ஆயிரம் அதிகரிக்கப்பட்டுள்ளன. கியா செல்டோஸின் அதிகப்பட்ச எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.18.1 லட்சம் (எக்ஸ்-லைன் டீசல் ஆட்டோமேட்டிக்) உள்ளது.

சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி காரின் பெட்ரோல் மற்றும் டர்போ பெட்ரோல் வேரியண்ட்களின் (ஜிடிஎக்ஸ்+ 7-டிசிடி ட்ரிம்-ஐ தவிர்த்து) விலைகள் முறையே ரூ.10,000 உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் சொனெட்டின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.79 லட்சத்தில் இருந்து ரூ.6.89 லட்சமாக உயர்ந்துள்ளது.

Soent P 1.2 New Price Old Price Difference
HTE 5MT ₹6.89 Lakh ₹6.79 Lakh ₹10,000
HTK 5MT ₹7.89 Lakh ₹7.79 Lakh ₹10,000
HTK+ 5MT ₹8.75 Lakh ₹8.65 Lakh ₹10,000
Soent P 1.0 New Price Old Price Difference
HTK+ iMT ₹9.89 Lakh ₹9.79 Lakh ₹10,000
HTX iMT ₹10.39 Lakh ₹10.29 Lakh ₹10,000
HTX 7 DCT ₹11.09 Lakh ₹10.99 Lakh ₹10,000
HTX+ iMT ₹11.85 Lakh ₹11.75 Lakh ₹10,000
GTX+ iMT ₹12.29 Lakh ₹12.19 Lakh ₹10,000
GTX+ 7DCT ₹12.99 Lakh ₹12.99 Lakh 0
Sonet D 1.5 New Price Old Price Difference
HTE 6MT ₹8.55 Lakh ₹8.35 Lakh ₹20,000
HTK 6MT ₹9.49 Lakh ₹9.29 Lakh ₹20,000
HTK+ 6MT ₹9.99 Lakh ₹9.89 Lakh ₹20,000
HTX 6MT ₹10.69 Lakh ₹10.49 Lakh ₹20,000
HTX 6AT ₹11.49 Lakh ₹11.29 Lakh ₹20,000
HTX+ 6MT ₹12.19 Lakh ₹11.99 Lakh ₹20,000
GTX+ 6MT ₹12.65 Lakh ₹12.45 Lakh ₹20,000
GTX+ 6AT ₹13.45 Lakh ₹13.25 Lakh ₹20,000

டீசல் ட்ரிம்கள் பொறுத்தவரையில், மத்திய எச்டிகே+ 6-ஸ்பீடு மேனுவல் ட்ரிம்-ஐ தவிர்த்து மற்றவைகளின் விலைகள் தலா ரூ.20 ஆயிரம் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக சொனெட்டின் அதிகப்பட்ச எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.13.25 லட்சத்தில் இருந்து ரூ.13.45 லட்சமாக அதிகரித்துள்ளது.

Most Read Articles

மேலும்... #கியா #kia
English summary
Kia Seltos, Sonet Prices Increased By Up To Rs 20k – New Price List Vs Old.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X