கியா சொனெட் முதலாம் ஆண்டு நிறைவு எடிசன்!! ரூ.10.79 லட்சத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

கியா நிறுவனம் சொனெட்டின் ஆண்டு நிறைவு எடிசனை இந்திய சந்தையில் இன்று (அக்.14) விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய சொனெட் காரை பற்றிய கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

கியா சொனெட் முதலாம் ஆண்டு நிறைவு எடிசன்!! ரூ.10.79 லட்சத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

2019இல் செல்டோஸின் மூலம் இந்திய சந்தையில் தென்கொரியாவை சேர்ந்த கியா நிறுவனம் நுழைந்தது. பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் அறிமுகமான கியா செல்டோஸிற்கு எதிர்பார்த்ததை போலவே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன் மூலம் இந்திய சந்தையில் கியா நிறுவனத்தால் ஓர் நிலையான இடத்தை பெற முடிந்தது.

கியா சொனெட் முதலாம் ஆண்டு நிறைவு எடிசன்!! ரூ.10.79 லட்சத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

செல்டோஸை தொடர்ந்து 2020 ஆட்டோ எக்ஸ்போவின் மூலம் கியா கார்னிவல் எம்பிவி கார் அறிமுகப்படுத்தப்பட்டது. லக்சரி கார்களை விரும்புவோரை டார்க்கெட் செய்து கொண்டுவரப்பட்ட கார்னிவலின் விற்பனையிலும் பெரிய அளவில் தடுமாற்றம் இல்லை. இவற்றை தொடர்ந்து கியா பிராண்டில் இருந்து மூன்றாவதாக களமிறக்கப்பட்ட மாடல் தான் சொனெட் ஆகும்.

கியா சொனெட் முதலாம் ஆண்டு நிறைவு எடிசன்!! ரூ.10.79 லட்சத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

இந்தியாவில் காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக கொண்டுவரப்பட்ட சொனெட் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சொனெட் நம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

கியா சொனெட் முதலாம் ஆண்டு நிறைவு எடிசன்!! ரூ.10.79 லட்சத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

இதனை கொண்டாடும் விதமாகவே தற்போது ஆண்டுநிறைவு எடிசன் என்கிற பெயரில் கியா சொனெட்டின் ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அவ்ரோரா கருப்பு பேர்ல், க்ளாசியர் வெள்ளை பேர்ல், இரும்பு சில்வர் & கிராவிட்டி க்ரே என்கிற நான்கு விதமான நிறத்தேர்வுகளில் சொனெட்டின் இந்த முதலாம் ஆண்டு எடிசனை வாங்கலாம்.

கியா சொனெட் முதலாம் ஆண்டு நிறைவு எடிசன்!! ரூ.10.79 லட்சத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

இந்த புதிய சொனெட் காரில் முன்பக்க புலி-மூக்கு வடிவிலான க்ரில் பகுதியில் கிச்சிலி பழ நிறத்தில் தொடுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனுடன் கம்பீரமான மற்றும் முரட்டுத்தனமான தோற்றத்திற்காக பக்கவாட்டில் ஆரோக்ஸ் சறுக்கு தட்டுகளை இந்த ஸ்பெஷல் எடிசன் பெற்று வந்துள்ளது. மேலும், கிச்சிலி பழ நிறத்தில் தொடுதல்களை சைடு கதவு கார்னிஷ் மற்றும் மைய சக்கர மூடிகளிலும் கியா நிறுவனம் வழங்கியுள்ளது.

கியா சொனெட் முதலாம் ஆண்டு நிறைவு எடிசன்!! ரூ.10.79 லட்சத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

சொனெட் மாடலின் இந்த ஸ்பெஷல் எடிசனின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.10.79 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்பெஷல் சொனெட் காருக்கும் இரு என்ஜின் தேர்வுகள் மற்றும் என்ஜினிற்கு தலா இரண்டு என மொத்தம் நான்கு டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை பொறுத்து இந்த ஸ்பெஷல் எடிசனிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலைகளை கீழே அட்டவணையாக காணலாம்.

Powertrain Transmission Price
Petrol 1.0 T-GDi Smartstream 6iMT ₹10,79,000
Smartstream 7DCT ₹11,49,000
Diesel 1.5 CRDi WGT 6MT ₹11,09,000
Diesel 1.5 CRDi VGT 6AT ₹11,89,000
கியா சொனெட் முதலாம் ஆண்டு நிறைவு எடிசன்!! ரூ.10.79 லட்சத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

இந்த இரு என்ஜின்களாக 1.0 லிட்டர் டி-ஜிடிஐ பெட்ரோல் & 1.5 லிட்டர் சிஆர்டிஐ டீசல் என்பவை அடங்குகின்றன. இதில் பெட்ரோல் என்ஜின் உடன் ஸ்மார்ட்ஸ்ட்ரீம் 6-ஸ்பீடு ஐஎம்டி அல்லது 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸையும், டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வையும் பெறலாம்.

கியா சொனெட் முதலாம் ஆண்டு நிறைவு எடிசன்!! ரூ.10.79 லட்சத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

சொனெட் முதலாம் ஆண்டு நிறைவு எடிசனின் அறிமுகம் குறித்து கியா இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டே-ஜின் பார்க் கருத்து தெரிவிக்கையில், இந்தியாவில் கியாவின் வெற்றிக்கு பங்களித்த எங்கள் முன்னேற்ற தயாரிப்புகளுள் சொனெட்டும் ஒன்றாகும். ஒரு வருடத்திற்குள் ஒரு இலட்சத்தும் அதிகமான யூனிட்களின் விற்பனையுடன், சொனெட் ஏற்கனவே இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் சிறிய-அளவு எஸ்யூவி காராக தன்னை நிலைநிறுத்தியுள்ளது.

கியா சொனெட் முதலாம் ஆண்டு நிறைவு எடிசன்!! ரூ.10.79 லட்சத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

இத்தகைய வரவேற்பை கொண்டாட, சொனெட்டின் ஆண்டுநிறைவு பதிப்பை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். வழக்கத்தை காட்டிலும் முரட்டுத்தனமான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள சொனெட் ஆண்டுநிறைவு எடிசன் ஆனது ஆரோக்ஸின் கருத்தை அடிப்படையாக கொண்டது. இது எங்களது இளம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு பிரீமியம் தரத்திலான ட்ரைவிங் உணர்வை வழங்கும் என்றார்.

கியா சொனெட் முதலாம் ஆண்டு நிறைவு எடிசன்!! ரூ.10.79 லட்சத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

கியா சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.6.37 லட்சத்தில் இருந்து ரூ.13.51 லட்சம் வரையில் உள்ளன. இந்த தென் கொரிய எஸ்யூவி காரில் பாதுகாப்பு அம்சங்களாக 6 காற்றுப்பைகள், இபிடி உடன் ஏபிஎஸ், வாகன ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், காரின் வேகத்தை அறிந்து தானாக லாக் ஆகும் கதவுகள் உள்பட ஏகப்பட்டவை வழங்கப்படுகின்றன.

Most Read Articles

மேலும்... #கியா #kia
English summary
Kia India launches Sonet First Anniversary Edition
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X