2021 கியா கார்னிவல் ரூ.24.95 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம்!! புதியதாக லிமௌசைன்+ வேரியண்ட் சேர்ப்பு

2021 கியா கார்னிவல் இந்தியாவில் ரூ.24.95 லட்சம் என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வகையில் கார்னிவலில் கொண்டுவரப்பட்டுள்ள அப்கிரேட்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 கியா கார்னிவல் ரூ.24.95 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம்!! புதியதாக லிமௌசைன்+ வேரியண்ட் சேர்ப்பு

தென்கொரியாவை சேர்ந்த கியா நிறுவனத்தில் இருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த எம்பிவி காரின் தோற்றத்தில் மிகவும் சில மாற்றங்களும், சில தொழிற்நுட்ப அப்கிரேட்களும் கொண்டுவரப்பட்டுள்ளன. முக்கிய அம்சமாக, 2021 கார்னிவலின் ட்ரிம்கள் வரிசையில் புதியதாக லிமௌசைன் மற்றும் லிமௌசைன்+ டாப் ட்ரிம்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

2021 கியா கார்னிவல் ரூ.24.95 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம்!! புதியதாக லிமௌசைன்+ வேரியண்ட் சேர்ப்பு

அதேபோல், அப்கிரேட் செய்யப்பட்ட புதிய கார்னிவலில், கியாவின் புதிய கார்ப்பிரேட் லோகோ வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய கியா எம்பிவி மாடலுக்கான முன்பதிவுகள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டன. இதனால் டெலிவிரியையும் மிக விரைவில் எதிர்பார்க்கிறோம்.

2021 Kia Carnival Price
Premium 7 Seater ₹24,95,000
Premium 8 Seater ₹25,15,000
Prestige 7 Seater ₹29,49,000
Prestige 9 Seater ₹29,95,000
Limousine 7 Seater ₹31,99,000
Limousine Plus 7 Seater ₹33,99,000
2021 கியா கார்னிவல் ரூ.24.95 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம்!! புதியதாக லிமௌசைன்+ வேரியண்ட் சேர்ப்பு

கார்னிவல் லிமௌசைன் வேரியண்ட்டில் ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டை காட்டிலும் மிகவும் பிரீமியம் தரத்திலான லெதர் இருக்கைகளும், இரண்டாவது இருக்கை வரிசையில் கால்களுக்கான தலையணை உதவியும் வழங்கப்படுகின்றன. மேலும் கார்னிவலின் இந்த லக்சரி வேரியண்ட்டின் உட்புற டேஸ்போர்டில் 8-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

2021 கியா கார்னிவல் ரூ.24.95 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம்!! புதியதாக லிமௌசைன்+ வேரியண்ட் சேர்ப்பு

அத்துடன் ஓடிபி வரைப்பட அப்டேட்கள், யுவோ உதவி, இசிஎம் கண்ணாடி, பின் இருக்கை பயணிகளுக்கு ஒற்றை 10.1 இன்ச் திரை மற்றும் ஸ்மார்ட் காற்று சுத்திகரிப்பான் உள்ளிட்டவையும் கார்னிவல் லிமௌசைனில் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும் இதனை காட்டிலும் லிமௌசைன்+ வேரியண்ட்டில் இன்னும் சில கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

2021 கியா கார்னிவல் ரூ.24.95 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம்!! புதியதாக லிமௌசைன்+ வேரியண்ட் சேர்ப்பு

இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால்,

 • ஹர்மன் கார்டன் பிரீமியம் 8-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம்,
 • எலக்ட்ரானிக் பார்க்கிங் ப்ரேக்,
 • 10-வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய, தன்னுள் இருந்து காற்றை வழங்கக்கூடிய ஓட்டுனர் இருக்கை,
 • லெதரால் மூடப்பட்ட ஸ்டேரிங் சக்கரம் & கியர் க்னாப்,
 • பிரீமியம் மரப்பலகை கார்னிஷ்,
 • 2021 கியா கார்னிவல் ரூ.24.95 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம்!! புதியதாக லிமௌசைன்+ வேரியண்ட் சேர்ப்பு
  • பின் இருக்கை பயணிகளுக்கு 10.1 இன்ச்சில் இரு திரைகள்,
  • டிபிஎம்எஸ்
  • கியா கார்னிவலில் தற்போது 18-இன்ச்சில் க்ரிஸ்டல் கட் அலாய் சக்கரங்கள் அதன் ட்ரிம்கள் அனைத்திலும் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் புதியதாக பிரீமியம் லெதர் இருக்கைகளும் தற்போது கார்னிவலின் பிரெஸ்டீஜ், லிமௌசைன் மற்றும் லிமௌசைன்+ வேரியண்ட்களில் வழங்கப்பட்டுள்ளன.

   2021 கியா கார்னிவல் ரூ.24.95 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம்!! புதியதாக லிமௌசைன்+ வேரியண்ட் சேர்ப்பு

   டாப் லிமௌசைன்+ ட்ரிம்மில் டைமண்ட் வடிவில் தையலிடப்பட்ட, கூடுதல் சவுகரியத்தை வழங்கக்கூடிய கியா பிராண்டின் விஐபி இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த விஐபி இருக்கைகள் ஒட்டுமொத்த கேபினின் தோற்றத்தையும் மெருக்கேற்றுகின்றன. இவை தவிர்த்த கியா கார்னிவலின் மற்ற வசதிகள், நிறங்கள் மற்றும் என்ஜின் தேர்வுகள் அனைத்தும் அப்படியே தான் தொடரப்பட்டுள்ளன.

   2021 கியா கார்னிவல் ரூ.24.95 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம்!! புதியதாக லிமௌசைன்+ வேரியண்ட் சேர்ப்பு

   கியா கார்னிவல் எம்பிவி காரில் 2.2 லிட்டர், 4-சிலிண்டர், டர்போ-டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 197 பிஎச்பி மற்றும் 440 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டர்போ-டீசல் என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டார்க்-கன்வெர்டர் கியர்பாக்ஸ் நிலையாக வழங்கப்படுகிறது.

   2021 கியா கார்னிவல் ரூ.24.95 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம்!! புதியதாக லிமௌசைன்+ வேரியண்ட் சேர்ப்பு

   கியா நிறுவனம் உலகளவில் பிரபலமாக விளங்கிய எம்பிவி கார்களுள் ஒன்றான கார்னிவலை முதன்முதலாக கடந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியது. அதன்பின் சில நாட்களிலேயே நம் நாட்டில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட இந்த கியா காரின் விலை அறிமுகத்தில் இருந்து தற்போது வரையில் மாற்றப்படவில்லை.

   2021 கியா கார்னிவல் ரூ.24.95 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம்!! புதியதாக லிமௌசைன்+ வேரியண்ட் சேர்ப்பு

   இந்தியாவின் தற்போதைய பிரீமியம் தரத்திலான எம்பிவி கார்களுள் ஒன்றாக விளங்கும் கார்னிவல், சிகேடி முறையில் நம் நாட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது பாகங்களாக இந்தியாவில் இருக்குமதி செய்யப்பட்டு, ஆந்திர பிரதேசத்தில் உள்ள கியாவின் தொழிற்சாலையில் வைத்து அசெம்பிள் செய்யப்பட்டு, பிறகு டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

   2021 கியா கார்னிவல் ரூ.24.95 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம்!! புதியதாக லிமௌசைன்+ வேரியண்ட் சேர்ப்பு

   ஒருவழியாக கியா நிறுவனம் கார்னிவல் எம்பிவி காரையும் புதிய பிராண்ட் லோகோ மற்றும் மேம்படுத்தப்பட்ட ட்ரிம் நிலைகளுடன் அப்டேட் செய்துவிட்டது. இதன் மூலம் கூடுதல் வாடிக்கையாளர்கள் நிச்சயம் கிடைப்பார்கள் என கியா கணித்து வைத்துள்ளது. இந்தியாவில் கியா கார்னிவலுக்கு நேரடியாக எந்த போட்டி மாடலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #கியா #kia
English summary
2021 Kia Carnival Launched In India; Priced From Rs. 24.95 Lakh.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X