வாண வேடிக்கையுடன் பிரம்மாண்ட முறையில் புதிய கியா லோகோ வெளியீடு!

கியா மோட்டார் நிறுவனத்தின் புதிய லோகோ பிரம்மாண்ட முறையில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டது. இந்த புதிய லோகோ இந்தியாவில் விற்பனை செய்யப்படும் சொனெட், செல்டோஸ் கார்களிலும் இடம்பெற இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிரம்மாண்ட முறையில் புதிய கியா லோகோ வெளியீடு!

தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார் நிறுவனம் உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக சிறந்து விளங்குகிறது. இந்தியாவிலும் கியா நிறுவனத்தின் கார்களுக்கு பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.

பிரம்மாண்ட முறையில் புதிய கியா லோகோ வெளியீடு!

இந்த நிலையில், தனது பிராண்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக, புதிய லோகோ மற்றும் நிறுவனத்தின் கொள்கை குறித்த விளம்பர முழுக்க சுலோகத்தையும் வெளியிட்டுள்ளது.

பிரம்மாண்ட முறையில் புதிய கியா லோகோ வெளியீடு!

புதிய லோகோ சாதாரண கையெழுத்தை பிரதிபலிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், கியா எழுத்துக்களுடன் கூடிய இந்த லோகோ எந்த இடத்திலும் பிரிவு இல்லாமல் தொடர்ச்சியாக இருக்கும் விதத்தில் சீரான பண்பை வெளிப்படுத்துகிறது.

பிரம்மாண்ட முறையில் புதிய கியா லோகோ வெளியீடு!

தென்கொரிய தலைநகர் சியோல் அருகில் உள்ள இன்சியோன் என்ற இடத்தில் புதிய லோகோ வெளியீட்டு நிகழ்ச்சியை கியா மோட்டார் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்திருந்தது.

பிரம்மாண்ட முறையில் புதிய கியா லோகோ வெளியீடு!

அப்போது, 303 டிரோன்களுடன் பைரோடெக்னிக்ஸ் முறையில் லோகோ வானில் தெரியும் வகையில் வெளியிடப்பட்டது. அப்போது, மிக பிரம்மாண்டமான வாண வேடிக்கை நிகழ்ச்சியும் நடந்தது. இந்த பிரம்மாண்ட லோகோ வெளியிட்டு வெளியீடு நிகழ்வு மிகப்பெரிய திருவிழாவாக அமைந்தது.

பிரம்மாண்ட முறையில் புதிய கியா லோகோ வெளியீடு!

மேலும், 'Movement that inspires' என்ற சுலோகத்தையும் கியா மோட்டார் வெளியிட்டது. ஊக்கமளிக்கும் நகர்வு என்பதை குறிப்பிடும் வகையிலான இந்த புதிய சுலோகம் கியா நிறுவனத்தின் புதிய தாரக மந்திரமாக விளம்பர முழக்கங்களில் பயன்படுத்தப்படும்.

பிரம்மாண்ட முறையில் புதிய கியா லோகோ வெளியீடு!

தற்போது பயன்படுத்தப்படும் லோகோவுக்கு பதிலாக இந்த புதிய லோகோ உலக அளவில் விற்பனை செய்யப்படும் கியா கார்களில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் சொனெட் மற்றும் செல்டோஸ் கார்களிலும் இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் 15ந் தேதி நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் மேலும் கூடுதல் தகவல்கள் மற்றும் புதிய கார்கள் அறிமுகம் குறித்த தகவல்கள் வெளியிடப்படும்.

Most Read Articles
English summary
Kia Motor has revealed new logo and slogan and it will be used in kia vehicles all over the world.
Story first published: Thursday, January 7, 2021, 16:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X