கியா நிறுவனத்தின் புதிய எம்பிவி கார் அறிமுகம் எப்போது? - புதிய தகவல் வெளியானது!

மாருதி எர்டிகா காருக்கு இணையான ரகத்தில் புத்தம் புதிய எம்பிவி காரை இந்தியாவில் களமிறக்குவதற்கு கியா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளதாக அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த புதிய எம்பிவி கார் எப்போது வர இருக்கிறது, இந்த காரில் என்னென்ன முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருக்கும் என்பது குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கியா நிறுவனத்தின் புதிய எம்பிவி கார் அறிமுகம் எப்போது? - புதிய தகவல் வெளியானது!

இந்தியாவின் காம்பேக்ட் எம்பிவி ரக கார் மார்க்கெட்டில் அதிக வர்த்தக வளம் உள்ளது. இந்த மார்க்கெட்டில் தனிக்காட்டு ராஜாவாக எர்டிகா கார் இருந்து வருகிறது. இந்த நிலையில், செல்டோஸ், சொனெட் கார்கள் மூலமாக எஸ்யூவி மார்க்கெட்டை கிடுகிடுக்க வைத்துள்ள கியா மோட்டார் அடுத்ததாக, எர்டிகா கார் மார்க்கெட்டை குறிவைத்துள்ளது.

இதற்காக, புத்தம் புதிய காம்பேக்ட் ரக எம்பிவி காரை இந்தியாவில் அறிமுகம் செய்யும் திட்டத்தை கியா மோட்டார் நிறுவனம் கையில் எடுத்துள்ளது.

கியா நிறுவனத்தின் புதிய எம்பிவி கார் அறிமுகம் எப்போது? - புதிய தகவல் வெளியானது!

KY என்ற குறியீட்டுப் பெயரில் உருவாக்கப்பட்டு வரும் இந்த எம்பிவி கார் மாருதி எர்டிகா காருக்கு மிக நேரடி போட்டியை தரும் வகையில் சிறப்பம்சங்களை பெற்றிருக்கும்.

கியா நிறுவனத்தின் புதிய எம்பிவி கார் அறிமுகம் எப்போது? - புதிய தகவல் வெளியானது!

இந்த புதிய எம்பிவி காரை அடுத்த ஆண்டு ஜனவரியில் விற்பனைக்கு களமிறக்கவும் கியா மோட்டார் முடிவு செய்துள்ளது. அதாவது, சரியாக ஓர் ஆண்டு காலத்தில் இந்த காரின் தயாரிப்பு, சோதனை ஓட்டப் பணிகள் முடிவடைந்து விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

கியா நிறுவனத்தின் புதிய எம்பிவி கார் அறிமுகம் எப்போது? - புதிய தகவல் வெளியானது!

மாருதி எர்டிகா கார் மார்க்கெட்டை குறிவைத்து நிலைநிறுத்தப்படும் இந்த கார் பரிமாணத்தில் சற்றே பெரிதாக, மஹிந்திரா மராஸ்ஸோ காருக்கு இணையானதாக இருக்கும். இதனால், எர்டிகா காரைவிடை சற்று அதிக இடவசதி, தொழில்நுட்ப வசதிகளுடன் வர இருக்கிறது.

கியா நிறுவனத்தின் புதிய எம்பிவி கார் அறிமுகம் எப்போது? - புதிய தகவல் வெளியானது!

புதிய கியா எம்பிவி காருக்கு ஆண்டுக்கு 50,000 யூனிட்டுகள் விற்பனை என்ற இலக்குடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும், ஆண்டுக்கு 26,000 யூனிட்டுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் முடிவு செய்துள்ளது. ஆந்திர மாநிலம், அனந்த்பூரில் உள்ள ஆலையில் இந்த கார் உற்பத்தி செய்யப்படும்.

கியா நிறுவனத்தின் புதிய எம்பிவி கார் அறிமுகம் எப்போது? - புதிய தகவல் வெளியானது!

தற்போது ஆண்டுக்கு 3 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறனை அனந்த்பூரில் உள்ள கியா ஆலை பெற்றிருக்கிறது. புதிய எம்பிவி கார் அறிமுகம் செய்யப்படும்போது, ஆண்டுககு 3.32 லட்சம் யூனிட்டுகள் என்ற அளவில் உயர்த்துவதற்கு கியா முடிவு செய்துள்ளது.

கியா நிறுவனத்தின் புதிய எம்பிவி கார் அறிமுகம் எப்போது? - புதிய தகவல் வெளியானது!

செல்டோஸ் கார் உருவாக்கப்பட்ட அதே கட்டமைப்புக் கொள்கையில்தான் இந்த கார் உருவாக்கப்படுகிறது. எனவே, கியா நிறுவனத்தின் பாரம்பரிய க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட்டுகள், அலாய் வீல்கள், நவீன வடிவமைப்புடன் கூடிய டேஷ்போர்டு மற்றும் சாதனங்கள் வழங்கப்படும்.

கியா நிறுவனத்தின் புதிய எம்பிவி கார் அறிமுகம் எப்போது? - புதிய தகவல் வெளியானது!

கியா செல்டோஸ் காரில் பயன்படுத்தப்படும் அதே பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகள் இந்த புதிய எம்பிவி காரிலும் பயன்படுத்தப்படும். இதனால், இந்த கார் நிச்சயமாக பெரிய அளவிலான வரவேற்பை பெறும் வாய்ப்பு இருக்கிறது.

Via- Rushlane

குறிப்பு: இந்த செய்தியில் மாதிரி படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Friday, January 1, 2021, 10:40 [IST]
English summary
Kia Motors is planning to launch new MPV Car in India by early next year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+