இனி இந்த கியா செல்டோஸ் & சொனெட் கார்களை வாங்க முடியாது!! டாப்-ட்ரிம்களின் விற்பனை நிறுத்தம்!

கியா செல்டோஸ், சொனெட் கார்களின் சில குறிப்பிட்ட வேரியண்ட்களின் விற்பனை மிக விரைவில் நிறுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவை எவை? ஏன் இந்த விற்பனை நிறுத்தம் என்பது உள்ளிட்ட விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கியா மோட்டார்ஸின் முதல் காராக இந்தியாவில் செல்டோஸ் கடந்த 2019ல் அறிமுகமானது. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டில் காம்பெக்ட் எஸ்யூவி காராக சொனெட் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.

இவை இரண்டும் கியா நிறுவனத்திற்கு சிறந்த மாடல்களாக உள்ள நிலையில் விரைவில் சொனெட்டில் வழங்கப்பட்டு வரும் எச்டிகே ப்ளஸ் ட்ரிம்-இன் விற்பனையும் மற்றும் செல்டோஸ் காரின் எச்டிஎக்ஸ் ப்ளஸ் ட்ரிம்-இன் விற்பனையும் நிறுத்தப்படவுள்ளது.

இந்த விற்பனை நிறுத்தங்கள் இந்த ஏப்ரல் மாத மத்தியில் இருந்து அமலுக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கை கியா நிறுவனத்தில் இருந்து ஒவ்வொரு டீலர்ஷிப் மையத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளன. அதில் ஒன்று ரஷ்லேன் செய்திதளம் மூலமாக நமக்கு கிடைத்துள்ளது.

இந்த அறிக்கையின்படி பார்க்கும்போது மேற்கூறப்பட்ட வேரியண்ட்களுக்கான முன்பதிவுகள் இந்த ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்தே நிறுத்தி கொள்ளப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெறாத வேரியண்ட்களின் விற்பனையை கியா நிறுவனம் எந்தவொரு தயக்கமும் இன்றி நிறுத்திவிடுகிறது.

இந்த வகையில் செல்டோஸ் எஸ்யூவி காரின் வரிசை சில வேரியண்ட்களின் நிறுத்தத்துடன் ஒழுங்கமைக்கப்பட்டதை இதற்கு முன் பார்த்துள்ளோம். இந்த வகையில் தான் தற்போது இந்த விற்பனை நிறுத்தமும் கொண்டுவரப்பட்டுள்ளது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வாடிக்கையாளர்களுக்கு விரைவில் கியா நிறுவனம் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். சொனெட்டின் எச்டிகே ப்ளஸ் ட்ரிம் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல்- டிசிடி கியர்பாக்ஸ் மற்றும் 1.5 லிட்டர் சிஆர்டிஐ டீசல்- 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் விற்கப்பட்டு வந்தது.

இவற்றின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.8.55 லட்சத்தில் இருந்து ரூ.9.69 லட்சம் வரையில் இருந்தன. செல்டோஸின் எச்டிஎக்ஸ் ப்ளஸ் ட்ரிம் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் உடன் விற்பனை செய்யப்பட்டது. இந்த ட்ரிம்-இல் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டது.

மேலும் இந்த வேரியண்ட்கள் விலைமிக்கவைகளாக கொண்டுவரப்பட்டதால் ட்யுல்-டோன் பெயிண்ட் தேர்வுகளிலும் கிடைத்தன. செல்டோஸ் எச்டிஎக்ஸ் ப்ளஸ் வேரியண்ட்டின் விலை ரூ.15.6 லட்சமாகவும், அதுவே ட்யூல்-டோனில் சற்று அதிகமாக ரூ.15.8 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

இந்த விற்பனை நிறுத்தங்களை தொடர்ந்து கியா நிறுவனம் விரைவில் சொனெட் மற்றும் செல்டோஸ் கார்களின் தனது நிறுவனத்தின் லோகோவை மாற்றவுள்ளது. புதிய லோகோவை கியா நிறுவனம் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Kia Seltos, Sonet Select Variants To Be Discontinued From Mid April 2021.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X