செல்டோஸ், சொனெட் கார்களுக்கு மாத சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்த கியா முடிவு?

கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார சூழல்களை கருத்தில்கொண்டு, தனது கார்களுக்கு மாத சந்தா திட்டத்தை அறிமுகம் செய்வதற்கு கியா இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

செல்டோஸ், சொனெட் கார்களுக்கு மாத சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்த கியா முடிவு?

தென்கொரியாவை சேர்ந்த கியா கார் நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தக்க வைத்துக் கொள்ளும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அண்மையில் கியா மோட்டார் இந்தியா என்ற தனது இந்தியாவுக்கான பிரிவை கியா இந்தியா என்று பெயர் மாற்றம் செய்தது. மேலும், புதிய பிராண்டு சின்னத்தையும் இந்தியாவில் அறிமுகம் செய்தது.

செல்டோஸ், சொனெட் கார்களுக்கு மாத சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்த கியா முடிவு?

இதைத்தொடர்ந்து, கூடுதல் சிறப்பம்சங்கள் மற்றும் புதிய லோகோ கொண்ட செல்டோஸ் மற்றும் சொனெட் கார்களை அடுத்த மாதம் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. இந்த கார்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

செல்டோஸ், சொனெட் கார்களுக்கு மாத சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்த கியா முடிவு?

இந்த நிலையில், கொரோனா இரண்டாவது அலை காரணமாக, பொருளாதாரத்தில் பாதிப்புகள் ஏற்படத் துவங்கி இருக்கின்றன. இதனால், வாடிக்கையாளர்கள் புதிய கார் வாங்கும் திட்டத்தில் இறங்குவது குறித்து மறுபரிசீலனை செய்து வருகின்றனர்.

செல்டோஸ், சொனெட் கார்களுக்கு மாத சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்த கியா முடிவு?

வேலையில் நிச்சயமற்ற நிலை உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் புதிய கார் வாங்கும் திட்டத்தில் துணிச்சலாக இறங்க முடியாத நிலையில் புதிய கார் வாங்க திட்டமிட்டிருந்த பலருக்கும் ஐயப்பாடு ஏற்பட்டுள்ளது.

செல்டோஸ், சொனெட் கார்களுக்கு மாத சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்த கியா முடிவு?

இந்த சூழலை கருத்தில்கொண்டு பிற கார் நிறுவனங்களைப் போல தனது புதிய கார்களுக்கு மாத சந்தா திட்டம் மற்றும் குத்தகை அடிப்படையில் வாடிக்கையாளர்கள் பெறுவதற்கான திட்டங்களை அறிமுகம் செய்வது குறித்து கியா இந்தியா நிறுவனம் பரிசீலித்து வருவதாக இந்தியன் ஆட்டோஸ் பிளாக் தள செய்தி தெரிவிக்கிறது.

செல்டோஸ், சொனெட் கார்களுக்கு மாத சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்த கியா முடிவு?

இந்த திட்டங்கள் மூலமாக கார் விற்பனையை ஓரளவு நிலையாக கொண்டு செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்பதுடன், வாடிக்கையாளர்களுக்கும் பெரிய அளவில் முதலீடு சுமை தவிர்க்கப்படும். எனினும், இந்த திட்டம் எந்த அளவுக்கு இருதரப்புக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறித்து தனது வாடிக்கையாளர்களிடத்தில் கருத்துக்களை வழங்குமாறு கியா இந்தியா கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

செல்டோஸ், சொனெட் கார்களுக்கு மாத சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்த கியா முடிவு?

இதனிடையே, தனது கார்களுக்கான காத்திருப்பு காலத்தை குறைப்பதற்கான முயற்சியிலும் கியா மோட்டார் ஈடுபட்டுள்ளது. இதனால், தனது பிரபல கார் மாடல்களான செல்டோஸ், சொனெட் கார்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.

செல்டோஸ், சொனெட் கார்களுக்கு மாத சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்த கியா முடிவு?

கடந்த ஆண்டு கொரோனா முதல் அலை காரணமாக பொருளாதாரத்தில் எழுந்த பிரச்னைகள் காரணமாக, மாருதி சுஸுகி, எம்ஜி மோட்டார் நிறுவனங்கள் மாத சந்தா திட்டத்தை அறிமுகம் செய்தன. இந்த நிலையில், கியா மோட்டார் நிறுவனமும் மாத சந்தா மற்றும் குத்தகை அடிப்படையில் கார்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கான திட்டத்தை கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
According to the latest report, Kia India has announced that it will be exploring to introduce the option of subscription and lease program for its products. Considering the current economic scenarios, new car buyers are still uncertain about taking up the responsibilities that come bundled with car ownership. In such a case, leasing or subscription services make for a better deal.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X