செல்டோஸ் கிராவிட்டி காரின் வருகையை மீண்டும் உறுதிசெய்த கியா!! புதிய லோகோ உடன் அறிமுகமாகிறது...

நிறுவனத்தின் புதிய லோகோ உடன் கியா செல்டோஸ் விரைவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இந்த நிலையில் தற்போது இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள டீசர் படத்தினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

செல்டோஸ் கிராவிட்டி காரின் வருகையை மீண்டும் உறுதிசெய்த கியா!! புதிய லோகோ உடன் அறிமுகமாகிறது...

நடுத்தர-அளவு எஸ்யூவி காரான செல்டோஸ் குறித்து கியா நிறுவனம் மிக முக்கிய அறிவிப்பை வருகிற ஏப்ரல் 27ஆம் தேதி வெளியிடவுள்ளதாக செய்திகள் சமீபத்தில் வெளியாகி இருந்தன.

செல்டோஸ் கிராவிட்டி காரின் வருகையை மீண்டும் உறுதிசெய்த கியா!! புதிய லோகோ உடன் அறிமுகமாகிறது...

நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த முக்கியமான அறிவிப்பு புதிய லோகோ உடன் செல்டோஸில் கொண்டுவரப்பட உள்ள ஸ்பெஷல் எடிசனை பற்றியதாக இருக்கலாம்.

செல்டோஸ் கிராவிட்டி காரின் வருகையை மீண்டும் உறுதிசெய்த கியா!! புதிய லோகோ உடன் அறிமுகமாகிறது...

இதற்கிடையில் முன்னதாக சில தினங்களுக்கு முன்பு செல்டோஸ் கிராவிட்டி எடிசன் காரை மறைமுகமாக குறிப்பிடுவது போன்ற ஒரு வீடியோவை கியா நிறுவனம் அதன் சமூக வளைத்தள பக்கங்களில் பதிவிட்டு இருந்தது.

ஆனால் இது கிராவிட்டி எடிசன் தான் என்பதை இந்த நிறுவனம் இதுவரையில் உறுதிப்படுத்தவில்லை. இந்த நிலையில் தற்போது செல்டோஸின் இந்த ஸ்பெஷல் எடிசன் காரை மீண்டும் மறைமுகமாக குறிப்பது போன்றதான பதிவு ஒன்றை கியா நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

செல்டோஸ் கிராவிட்டி காரின் வருகையை மீண்டும் உறுதிசெய்த கியா!! புதிய லோகோ உடன் அறிமுகமாகிறது...

இந்த படத்தில் விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் பயன்படுத்தும் தலைக்கவசம் மற்றும் கையுறைகளை பார்க்க முடிகிறது. அவற்றிற்கு மேலே, கழுகு தரையிறங்கியது என்ற வாக்கியங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் இருந்து மீண்டும் கிராவிட்டி எடிசனை தான் கியா நிறுவனம் சாடுவதை அறிய முடிகிறது.

செல்டோஸ் கிராவிட்டி காரின் வருகையை மீண்டும் உறுதிசெய்த கியா!! புதிய லோகோ உடன் அறிமுகமாகிறது...

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் கியாவின் தாயகமான தென்கொரியாவில் முதலாவதாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்பெஷல் எடிசன் செல்டோஸ் கார் வழக்கமான செல்டோஸ் காருடன் ஒப்பிடுகையில் வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் ஏகப்பட்ட மாற்றங்களை ஏற்றுவரவுள்ளது.

செல்டோஸ் கிராவிட்டி காரின் வருகையை மீண்டும் உறுதிசெய்த கியா!! புதிய லோகோ உடன் அறிமுகமாகிறது...

இதன்படி செல்டோஸின் புலி மூக்கு வடிவிலான க்ரில் அமைப்பிற்கு மாற்றாக க்ரோம் பதிக்கப்பட்ட முறையில் க்ரில் கிராவிட்டி எடிசனில் வழங்கப்படுகிறது. இதில் மிக முக்கியமான மாற்றமாக கியா நிறுவனத்தின் புதிய லோகோ பொருத்தப்பட உள்ளது.

செல்டோஸ் கிராவிட்டி காரின் வருகையை மீண்டும் உறுதிசெய்த கியா!! புதிய லோகோ உடன் அறிமுகமாகிறது...

இதனுடன் 18 இன்ச்சில் இரு-நிற அலாய் சக்கரங்களை பெறும் இந்த ஸ்பெஷல் எடிசனுக்கென புதிய நிறம் கொடுக்கப்பட உள்ளது. உட்புறத்தில் கொரிய சந்தையில் பெறுகின்ற அம்சங்களுடன் தான் இந்தியாவில் இந்த கார் அறிமுகமாகும் என தெரிகிறது.

Most Read Articles

மேலும்... #கியா #kia
English summary
Kia Seltos With New Logo Teased Ahead Of India Launch. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X