புதிய லோகோவில் கியா செல்டோஸ் எஸ்யூவி கார் எப்படி இருக்கு?.. வீடியோவே வந்தாச்சு... வாங்க பார்க்கலாம்!!

புதிய லோகோ உடன் உருவாகியிருக்கும் கியா செல்டோஸ் காரின் வீடியோ வெளியாகியுள்ளது. இதுகுறித்த மேலும் முக்கிய தகவல்களைக் கீழே காணலாம்.

புதிய லோகோவில் கியா செல்டோஸ் எஸ்யூவி கார் எப்படி இருக்கு?.. வீடியோவே வந்தாச்சு... வாங்க பார்க்கலாம்!!

தென் கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான கியா நேற்றைய (ஏப்ரல் 27) தினம் அதன் புதிய லோகோவை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த புதிய லோகோவே விரைவில் அதன் அனைத்து தயாரிப்புகளிலும் இடம் பெற இருப்பதாக நிறுவனம் அறிவித்தது.

புதிய லோகோவில் கியா செல்டோஸ் எஸ்யூவி கார் எப்படி இருக்கு?.. வீடியோவே வந்தாச்சு... வாங்க பார்க்கலாம்!!

குறிப்பாக, செல்டோஸ் மற்றும் சொனெட் ஆகிய இரு எஸ்யூவி கார்களே புதிய லோகோவில் இந்தியாவில் முதலில் விற்பனைக்கு வரும் என நிறுவனம் அறிவித்தது. இதன் பின்னரே நிறுவனத்தின் மற்றுமொரு கார் மாடலான கார்னிவல் எம்பிவி காரில் புதிய லோகோவை அறிமுகப்படுத்த இருப்பதாக நிறுவனம் கூறியது.

புதிய லோகோவில் கியா செல்டோஸ் எஸ்யூவி கார் எப்படி இருக்கு?.. வீடியோவே வந்தாச்சு... வாங்க பார்க்கலாம்!!

புதிய லோகோவுடன் செல்டோஸ் மற்றும் சொனெட் இரு கார்களும் அடுத்த மாதம் விற்பனைக்கு வர இருக்கின்றன. இந்த நிலையில், புத்தம் புதிய லோகோவுடன் தயாராகி இருக்கும் செல்டோஸ் கார் எப்படி இருக்கும் என்பதுகுறித்த வீடியோ இணையத்தின் வாயிலாக வெளியாகியுள்ளது.

புதிய லோகோவில் கியா செல்டோஸ் எஸ்யூவி கார் எப்படி இருக்கு?.. வீடியோவே வந்தாச்சு... வாங்க பார்க்கலாம்!!

கவலையளிக்கும் வகையில் இவ்வீடியோவில் புதிதாக என்ன மாற்றங்கள் எல்லாம் செய்யப்பட்டுள்ளன என்பது பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை. புதிய லோகோ மற்றும் காரின் உட்பகுதியின் முன்பக்கத்தின் ஒரு சில இடங்கள் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

புதிய லோகோவில் கியா செல்டோஸ் எஸ்யூவி கார் எப்படி இருக்கு?.. வீடியோவே வந்தாச்சு... வாங்க பார்க்கலாம்!!

ஆகையால், அடுத்த மாதம் புதுப்பித்தலுடன் விற்பனைக்கு வர இருக்கும் செல்டோஸ் காரில் என்னென்ன அம்சங்கள் இடம் பெற இருக்கின்றன என்பது தெளிவாக தெரிய வரவில்லை. அதேசமயம், தற்போது வெளியாகியிருக்கும் அறிக்கையின்படி, கியா நிறுவனம் புதிதாக இரு வேரியண்டுகளை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

புதிய லோகோவில் கியா செல்டோஸ் எஸ்யூவி கார் எப்படி இருக்கு?.. வீடியோவே வந்தாச்சு... வாங்க பார்க்கலாம்!!

ஐஎம்டி எச்டிகே ப்ளஸ் மற்றும் டர்போ ஜிடிஎக்ஸ் (ஓ) எம்டி ஆகிய இரு புதிய வேரியண்டுகளை செல்டோஸ் எஸ்யூவி-யில் கூடுதலாக கியா வழங்க இருக்கின்றது. இந்த புதிய வேரியண்டுகளில் சன் ரூஃப், ஏர் இன்டேக், ஏசி டைரைக்சன் மற்றும் குரல் கட்டளை உள்ளிட்ட சிறப்பு தொழில்நுட்ப வசதிகள் இடம் பெற இருக்கின்றன.

புதிய லோகோவில் கியா செல்டோஸ் எஸ்யூவி கார் எப்படி இருக்கு?.. வீடியோவே வந்தாச்சு... வாங்க பார்க்கலாம்!!

தொடர்ந்து, பேட்டில் ஷிஃப்டர் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் உள்ளிட்ட சிறப்பம்சங்களையும் கிராவிட்டு எடிசனில் செல்டோஸ் வழங்க திட்டமிட்டிருக்கின்றது. தற்போது செல்டோஸ் எஸ்யூவி இந்தியாவில் மூன்று விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

1.5 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்ட், 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின் மற்றும் 1.4 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின் இவையே தற்போது செல்டோஸ் எஸ்யூவி காரில் கிடைக்கும் எஞ்ஜின் தேர்வுகள் ஆகும். ரூ. 9.89 லட்சம் தொடங்கி ரூ. 17.45 லட்சம் வரையிலான விலையில் இக்கார் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

English summary
Kia Seltos SUV Car With New Logo Teaser Video Out. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X