பேய் படத்திற்காக புதிய கெட்டப்பை பெற்ற கியா செல்டோஸ் கார்!! 1000 காருக்கு மத்தியில் நின்றாலும் தனியா தெரியும்

தென் கொரியாவை சேர்ந்த கியா நிறுவனம் 2019ல் செல்டோஸின் மூலம் இந்திய சந்தையில் நுழைந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். செல்டோஸ் கியாவின் வெற்றி மாடல் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

பேய் படத்திற்காக புதிய கெட்டப்பை பெற்ற கியா செல்டோஸ் கார்!! 1000 காருக்கு மத்தியில் நின்றாலும் தனியா தெரியும்

2021ஆம் ஆண்டிற்கான அப்டேட்களை சில கூடுதல் வசதிகளுடன் பெற்றுள்ள செல்டோஸ் இந்தியாவின் சிறந்த காம்பெக்ட் எஸ்யூவி கார்களுள் ஒன்றாக விளங்குகிறது. எனவே, செல்டோஸில் மாடிஃபிகேஷன் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

பேய் படத்திற்காக புதிய கெட்டப்பை பெற்ற கியா செல்டோஸ் கார்!! 1000 காருக்கு மத்தியில் நின்றாலும் தனியா தெரியும்

இதற்கு ஓர் உதாரணத்தை பற்றியே இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம். எஃப்.எஃப் ஃப்லீம்ஸ் என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள கீழுள்ள வீடியோவில் இரத்தத்தால் அலங்கரிக்கப்பட்டது போன்றதான வ்ராப்-ஐ கொண்ட கஸ்டமைஸ்ட் செல்டோஸ் காரை காணலாம்.

Image Courtesy: FF Films

குஜராத், அகமதாபாத்தில் இருந்து இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த செல்டோஸ் கார் பேய் படம் ஒன்றிற்காக இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது. இதன் பெயிண்ட், வெள்ளை நிற காரின் மீது சிவப்பு பெயிண்ட் தெளித்தாற்போல் உள்ளது.

பேய் படத்திற்காக புதிய கெட்டப்பை பெற்ற கியா செல்டோஸ் கார்!! 1000 காருக்கு மத்தியில் நின்றாலும் தனியா தெரியும்

இவ்வாறான பெயிண்ட்டை வெளிநாட்டு கார்களில் தான் பெரும்பாலும் பார்க்க முடியும். இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் இதுதான் முதல்முறையாக இருக்க வேண்டும். இதனால் இந்த செல்டோஸ் கார் நிச்சயம் நமது இந்திய சாலையில் பலரது கவனத்தை இழுக்கும்.

பேய் படத்திற்காக புதிய கெட்டப்பை பெற்ற கியா செல்டோஸ் கார்!! 1000 காருக்கு மத்தியில் நின்றாலும் தனியா தெரியும்

இந்த குறிப்பிட்ட செல்டோஸ், விலைமிக்க டாப் வேரியண்ட்டாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காரில் பளபளப்பான புலி மூக்கு க்ரில், எல்இடி டிஆர்எல்கள், எல்இடி ஹெட்லேம்ப்கள், ஐஸ் கோண் வடிவில் ஃபாக் விளக்குகள் மற்றும் எல்இடி டெயில்லேம்ப்களை பார்க்க முடிகிறது.

பேய் படத்திற்காக புதிய கெட்டப்பை பெற்ற கியா செல்டோஸ் கார்!! 1000 காருக்கு மத்தியில் நின்றாலும் தனியா தெரியும்

இவற்றுடன் புதிய அலாய் சக்கரங்கள் இந்த செல்டோஸில் பொருத்தப்பட்டுள்ளன. உட்புறத்தில் எந்த மாற்றமும் இல்லை என்பது போல் தான் தெரிகிறது. இந்திய சந்தையில் செல்டோஸ் 3 விதமான என்ஜின் தேர்வுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

பேய் படத்திற்காக புதிய கெட்டப்பை பெற்ற கியா செல்டோஸ் கார்!! 1000 காருக்கு மத்தியில் நின்றாலும் தனியா தெரியும்

இதில் ஒன்றான 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் 115 பிஎஸ் பவரையும், 144 என்எம் டார்க் திறனையும், இரண்டாவதான 1.5 லிட்டர் டர்போ-டீசல் என்ஜின் 115 பிஎஸ் மற்றும் 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன.

பேய் படத்திற்காக புதிய கெட்டப்பை பெற்ற கியா செல்டோஸ் கார்!! 1000 காருக்கு மத்தியில் நின்றாலும் தனியா தெரியும்

மூன்றாவது என்ஜின் தேர்வான 1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் 140 பிஎஸ் மற்றும் 242 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக காருக்கு வழங்கக்கூடியதாக உள்ளது. செல்டோஸில் டிரான்ஸ்மிஷனுக்கு 6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் & 7-ஸ்பீடு டிசிடி & சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

பேய் படத்திற்காக புதிய கெட்டப்பை பெற்ற கியா செல்டோஸ் கார்!! 1000 காருக்கு மத்தியில் நின்றாலும் தனியா தெரியும்

ரூ.9.95 லட்சத்தை ஆரம்ப விலையாக கொண்டுள்ள கியா செல்டோஸிற்கு விற்பனையில் எம்ஜி ஹெக்டர், ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் நிஸான் கிக்ஸ் உள்ளிட்டவை போட்டியாக உள்ளன. மேலும் 7-இருக்கை செல்டோஸ் கார் ஹூண்டாய் அல்கஸாருக்கு போட்டியாக நடப்பு 2021ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது.

Most Read Articles

English summary
Custom Wrapped Kia Seltos Is Profoundly Eye Catching.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X