Just In
- 8 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 8 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 9 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
- 10 hrs ago
சேல்ஸ் எங்கயோ போயிருச்சு... முன்னெப்போதும் இல்லாத வகையில் கார்களை விற்று தள்ளிய எம்ஜி மோட்டார்!
Don't Miss!
- News
அமெரிக்கா, பிரேசில், இத்தாலி, ரஷ்யா, இந்தியா ஆகிய ஐந்து நாடுகளில் தான் கொரோனா பாதிப்பு மிக அதிகம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 02.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்குமாம்…
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் உடன் பிரபலமான கியா செல்டோஸ் கார் எப்படி இருக்கும்?! க்ரெட்டாவின் ஆதிக்கத்தை உடைக்குமா?
கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் எப்போது அறிமுகமாகும்? அதில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்? உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகமான கியா செல்டோஸ் எஸ்யூவி கார் கணிசமான விற்பனை எண்ணிக்கைகளை மாதந்தோறும் பதிவு செய்துகிறது.

செல்டோஸ் எஸ்யூவி மூலமாகதான் தென் கொரியாவை சேர்ந்த கியா நிறுவனம் இந்தியாவில் நுழைந்தது. செல்டோஸின் வெற்றியினால் மூன்றாவது அறிமுகமாக சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி காரை இந்த நிறுவனம் தைரியமாக இந்தியாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்தி இருந்தது.

இருப்பினும் இந்த எஸ்யூவி காருக்கு போட்டியாக கூட்டணி நிறுவனமான ஹூண்டாய் கடந்த 2020 மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்திய க்ரெட்டா எஸ்யூவி, செல்டோஸின் விற்பனையை பதம் பார்த்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இதனால் இது செல்டோஸின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் வெளிவருவதற்கான நேரமாகும்.

அதற்காக கார் முழுவதும் மாற்றியமைக்கப்படும் என்றெல்லாம் எண்ண வேண்டாம், மற்ற கார்களை ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடாக தற்போதைய செல்டோஸ் காரின் முன்பக்க க்ரில் டிசைன் மட்டுமே பெரிய அளவில் திருத்தியமைக்கப்படும்.

ஹெட்லைட்கள், பம்பர்களின் வடிவம் மாற்றியமைக்கப்பட வாய்ப்புகள் குறைவே. ஆனால் சில கூடுதல் ட்ரிம் நிலைகளையும் புதிய நிறங்களையும் செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் பெற்று வரலாம். குறிப்பாக டாப் ஜிடி ட்ரிம் சில கூடுதல் நிறத்தேர்வுகளை அலாய் சக்கரங்களின் டிசைனில் மாற்றத்துடன் ஏற்கலாம்.

செல்டோஸ் கார் பார்ப்பதற்கே கம்பீரமான தோற்றத்தில் காட்சியளிக்கும். இதனால் காரின் பரிணாம அளவுகளில் கியா நிறுவனம் கை வைக்காது. கியாவின் புதிய லோகோ இந்த ஃபேஸ்லிஃப்ட் காரில் வழங்கப்படுவது உறுதி.

செல்டோஸின் கேபினில் 10.25 இன்ச்சில் தொடுத்திரை, இயங்கும் பாதையை மாற்ற உதவும் கேமிராக்கள், கனெக்டட் கார் தொழிற்நுட்பம், மடக்கக்கூடிய இருக்கைகள், ஹெட்ஸ்அப் திரை உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக வழங்கப்படுகின்றன.

இவற்றை மாற்றமின்றி செல்டோஸ் எஸ்யூவி காரிலும் எதிர்பார்க்கலாம். அதேநேரம் 2021 கியா செல்டோஸில் எலக்ட்ரானிக் பார்க்கிங் ப்ரேக், பனோராமிக் சன்ரூஃப் மற்றும் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் தேர்வுகள் புதியதாக சேர்க்கப்படலாம்.

இந்த 2021ஆம் ஆண்டின் மத்தியில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் கியாவின் இந்த ஃபேஸ்லிஃப்ட் காரின் விலைகள் தற்போதைய செல்டோஸின் விலையை காட்டிலும் ரூ.30,000ல் இருந்து ரூ.45,000 வரையில் அதிகமாக நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு மாற்றாக ஸ்டைலிஷான் காரை தேடுவோருக்கு கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் மிகவும் ஏற்றதாக இருக்கும்.