Just In
- 1 hr ago
இந்த ஆண்டு டொயோட்டாவிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் 4 புதிய கார்கள்!
- 1 hr ago
நிஜ வாழ்க்கை ஹீரோ மயூர் ஷெல்கேவை விலையுயர்ந்த பைக்கால் கவுரவித்த ஜாவா... இதோட விலை எவ்ளோ தெரியுமா?
- 2 hrs ago
சொனெட்டில் அதிரடி மாற்றங்களை கொண்டுவரும் கியா!! வேறலெவல் வசதிகள் அறிமுகமாகின்றன...
- 2 hrs ago
மறுபடியுமா... தீயாய் பரவும் கொரோனாவால் வாகன விற்பனையில் சிக்கல்... அச்சத்தில் ஆட்டோமொபைல் துறை!
Don't Miss!
- Lifestyle
எந்தெந்த ராசிக்காரங்க அதிகமா பொய் சொல்லுவாங்க?உங்க ராசிப்படி நீங்க எப்படி பொய் சொல்லுவீங்க தெரியுமா?
- Movies
உதயநிதி ஸ்டாலினுக்கு இவ்வளவு பெரிய மகனா.. தோள்மேல கையப்போட்டு ஜம்முன்னு நிக்கிறாங்களே!
- Finance
இந்தியாவின் தரத்தை negative ஆக குறைத்த ஃபிட்ச்.. விளைவுகள் என்ன?
- News
"மனித உடல்கள்".. எந்த ஊர்னே தெரியல.. வரிசையாக அடுக்கி வச்சு.. பெட்ரோலை ஊற்றி.. எரியும் சடலங்கள்..!
- Education
ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் NIT-யில் பேராசிரியர் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Sports
ஹர்பஜன் காலில் விழுந்த சுரேஷ் ரெய்னா. களத்திலேயே நடந்த சம்பவம்.. சக வீரர்கள் திகைப்பு..காரணம் என்ன?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புதிய லோகோ, பனோரமிக் சன்ரூஃப்... அசத்தலாக வரும் புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி!
வாடிக்கையாளர்களின் மனம் கவர்ந்த கியா செல்டோஸ் எஸ்யூவியில் இரண்டு புதிய அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதுபற்றிய கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் கியா செல்டோஸ் மிகச் சிறந்த தேர்வாக வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. டிசைன், வசதிகள், எஞ்சின், விலை அனைத்திலும் நிறைவை தருவதால், தொடர்ந்து விற்பனையில் கலக்கி வருகிறது.

இந்த நிலையில், சந்தைப்போட்டியை மனதில் வைத்து சில கூடுதல் சிறப்பம்சங்களுடன் செல்டோஸ் காரை களமிறக்க உள்ளது கியா மோட்டார் நிறுவனம்.

அதாவது, கியா செல்டோஸ் எஸ்யூவியில் தற்போது சாதாரண சிறிய வகை சன்ரூஃப் கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில், பெரிய அளவிலான பனோரமிக் சன்ரூஃப் கொடுப்பதற்கு கியா மோட்டார் திட்டமிட்டுள்ளதாக டீம் பிஎச்பிமூலமாக வெளியாகி இருக்கும் தகவல் கூறுகிறது.

அதேபோன்று, புதிய செல்டோஸ் மாடலில் கியா மோட்டார் நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்திய புதிய லோகோவுடன் வர இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த இரண்டு புதிய அம்சங்களுடன் 2021 மாடலாக கியா செல்டோஸ் வாடிக்கையாளர்களை கவர வருகிறது.

ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆகிய இரண்டு புத்தம் புதிய எஸ்யூவி மாடல்களின் வருகையும் கியா செல்டோஸ் காருக்கு நெருக்கடியை தரும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, மதிப்பை கூட்டும் வகையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டு கொண்டு வரப்பட உள்ளது.

கியா செல்டோஸ் எஸ்யூவியில் வேறு பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் இருக்காது என்று தெரிகிறது. கியா செல்டோஸ் எஸ்யூவியில் 115 பிஎஸ் பவரையும், 144 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 140 பிஎஸ் பவரையும், 242 என்எம் டார்க்கையும் வழங்கும். 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் தொடர்ந்து வழங்கப்படும்.

டீசல் மாடலில் 115 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் எஞ்சின் பொருத்தப்படும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. பல்வேறு எஞ்சின், கியர்பாக்ஸ் தேர்வுகள் இருப்பது இந்த காரின் மிக முக்கிய மதிப்பாக கருதப்படுகிறது.

கியா செல்டோஸ் எஸ்யூவி ரூ.9.89 லட்சம் முதல் ரூ.17.45 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அடுத்த மாதம் 27ந் தேதி புதிய கியா செல்டோஸ் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. புதிய மாடலின் விலை சற்றே கூடுதலாக நிர்ணயிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.