செம்மையா வரப்போகுது!! Seltos X Line, அறிமுகப்படுத்த தயாராகும் Kia

விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற Kia Seltos X Line கார் தொடர்பான விபரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

செம்மையா வரப்போகுது!! Seltos X Line, அறிமுகப்படுத்த தயாராகும் Kia

இந்த 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் தென்கொரிய Kia நிறுவனம் பிராண்டின் லோகோவை மாற்றியது. புதிய லோகோ இந்திய சந்தையில் அப்டேட் செய்யப்பட்ட Seltos-இல் முதலாவதாக கொண்டுவரப்பட்டது.

செம்மையா வரப்போகுது!! Seltos X Line, அறிமுகப்படுத்த தயாராகும் Kia

நம் நாட்டு சந்தையில் Seltos எப்போதுமே ஸ்பெஷல் ஆகும். ஏனெனில் Kia நிறுவனம் இதன் பின் எத்தனை கார்களை அறிமுகப்படுத்தினாலும், Seltos தான் இந்த தென் கொரிய கார் தயாரிப்பு நிறுவனம் நம் நாட்டில் அறிமுகப்படுத்திய முதல் மாடலாகும்.

செம்மையா வரப்போகுது!! Seltos X Line, அறிமுகப்படுத்த தயாராகும் Kia

2019ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 22ஆம் தேதி Seltos-இன் மூலம் Kia நிறுவனம் இந்திய சந்தையில் நுழைந்தது. இந்த வகையில் பார்த்தால், Seltos சந்தையில் அறிமுகமாகி இரண்டு வருடங்கள் நிறைவடைந்துவிட்டன. கடந்த 2 வருடங்களில் அதிகளவில் விற்பனையான எஸ்யூவி கார் லிஸ்ட்டை எடுத்து பார்த்தால் நிச்சயம் Seltos-இன் பெயர் முன்னிலையில் இருக்கும்.

செம்மையா வரப்போகுது!! Seltos X Line, அறிமுகப்படுத்த தயாராகும் Kia

அந்த அளவிற்கு இந்த Kia தயாரிப்பிற்கு இந்திய வாடிக்கையாளர்கள் தங்களது வரவேற்பை கொடுத்துள்ளனர். இதனால் தான் கடந்த ஆண்டில் இதே ஆகஸ்ட் மாதத்தில் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு Seltos ஆண்டு நிறைவு ஸ்பெஷல் எடிசன் ஒன்று விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.

செம்மையா வரப்போகுது!! Seltos X Line, அறிமுகப்படுத்த தயாராகும் Kia

அதேபோல் தற்போது இரண்டாம் ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக Seltos-இல் X-Line வேரியண்ட்டை கொண்டுவர தயாரிப்பு நிறுவனம் தயாராகி வருகிறது. இன்னும் சில நாட்களில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த புதிய Seltos காரின் இந்திய வருகையினை ஏற்கனவே Kia நிறுவனம் சமூக வலைத்தள பக்கங்களில் ஓரளவிற்கு உறுதிப்படுத்திவிட்டது.

செம்மையா வரப்போகுது!! Seltos X Line, அறிமுகப்படுத்த தயாராகும் Kia

அதாவது, ப்ரோஜெக்ட் எக்ஸ் என்ற தலைப்பில் டீசர் வீடியோ ஒன்றை Kia வெளியிட்டு இருந்தது. இதுவே Seltos X-Line காரினை எதிர்பார்ப்பதற்கு காரணமாகும். ஏனென்றால், 2020 ஆட்டோ எக்ஸ்போவில் எக்ஸ்-லைன் கான்செப்ட் மாடலை Kia நிறுவனம் நிறுத்தி வைத்திருந்ததை மறந்துவிட வேண்டாம்.

செம்மையா வரப்போகுது!! Seltos X Line, அறிமுகப்படுத்த தயாராகும் Kia

இந்த நிலையில் இந்த ஸ்பெஷல் வேரியண்ட் தொடர்பான விபரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அதவாது, Seltos X-Line மாடல் பிரத்யேகமான Matte Graphite நிறத்தில் வழங்கப்பட உள்ளதாம். இதனால் கார் முழுவதுமாக அடர் கருப்பு நிறத்தில் இருக்கும்.

செம்மையா வரப்போகுது!! Seltos X Line, அறிமுகப்படுத்த தயாராகும் Kia

அதேநேரம் முன்பக்க க்ரில் பகுதியில் Piano கருப்பு நிறத்தில் Outline வழங்கப்பட உள்ளது. இந்த Piano கருப்பு நிறத்தை காரை சுற்றிலும், LED Fog Lamps, காரின் பின்பக்கத்தை காட்டும் வெளிபுற இறக்கைகள், மேற்கூரையில் உள்ள ஆண்டெனா மற்றும் பின்பக்கத்தில் இரட்டை Muffler & பின் கதவு உள்ளிட்ட பகுதிகளில் எதிர்பார்க்கலாம்.

செம்மையா வரப்போகுது!! Seltos X Line, அறிமுகப்படுத்த தயாராகும் Kia

அதேபோல் ஆரஞ்ச் நிற தொடுதல்களும் வழக்கமான Seltos காரில் இருந்து தோற்றத்தில் வேறுபடுவதற்காக, அலாய் சக்கரங்களிலும், பக்கவாட்டில் கதவுகளின் கீழ் கார்னிஷ் பகுதியிலும் கொண்டுவரப்படவுள்ளது. Seltos-இல் இவ்வாறு ஆரஞ்ச் நிற தொடுதல் ஆங்காங்கே இருந்தால் உண்மையில் அருமையாக இருக்கும்.

செம்மையா வரப்போகுது!! Seltos X Line, அறிமுகப்படுத்த தயாராகும் Kia

தாழ்வான பகுதியை நோக்கி கார் சறுக்கி செல்கையில் அடிப்பாகங்கள் சேதமடையாமல் தடுக்கும் முன்பக்க & பின்பக்க சறுக்கல் தட்டுகள் புதிய X-Line-இல் Piano கருப்பு நிறத்தையும் கொண்டிருக்கும், அதேநேரம் ஆரஞ்ச் நிறத்தையும் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செம்மையா வரப்போகுது!! Seltos X Line, அறிமுகப்படுத்த தயாராகும் Kia

அத்துடன் சக்கரங்களின் டிசைனும் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட உள்ளது. இம்முறை 18 இன்ச்சில் Crystal Cut Matte Graphite அலாய் சக்கரங்கள் வழங்கப்பட உள்ளதாக நமக்கு கிடைத்து செய்திகள் கூறுகின்றன. மேலும் 'X-Line' முத்திரைகளும் காரை சுற்றிலும் வழங்கப்படும்.

செம்மையா வரப்போகுது!! Seltos X Line, அறிமுகப்படுத்த தயாராகும் Kia

உட்புறத்தில் தேன்கூடு வடிவிலான பேட்டர்னில், க்ரே நிற தையல்கள் உடன் Indigo Pera Leatherette இருக்கைகள் Seltos X-Line-இல் கொண்டுவரப்பட உள்ளன. மற்றப்படி தற்போது நமக்கு கிடைத்துள்ள தகவல்களில் இந்த புதிய Seltos காரின் உட்புறம் குறித்து பெரிதாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

செம்மையா வரப்போகுது!! Seltos X Line, அறிமுகப்படுத்த தயாராகும் Kia

இருப்பினும் என்ஜின் தேர்வுகளில் பெரியதாக எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது. இந்தியாவில் Kia Seltos 1 பெட்ரொல், 1 டீசல் மற்றும் 1 டர்போ-பெட்ரோல் என மூன்று விதமான என்ஜின் தேர்வுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவற்றுடன் மேனுவல் & ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்பட்டாலும், புதிய X-Line மாடலை ஆட்டோமேட்டிக் காராகவே எதிர்பார்க்க முடியும்.

Most Read Articles

மேலும்... #கியா #kia
English summary
Kia Seltos X Line Details Leak, Suv Wears A New Matte Graphite Paint Scheme.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X