பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...

கியா நிறுவனம் இந்திய சந்தையில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்து பிரம்மாண்ட சாதனையை படைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...

2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் செல்டோஸ் எஸ்யூவியை விற்பனைக்கு அறிமுகம் செய்ததன் மூலம், கியா நிறுவனம் இந்திய சந்தையில் காலடி எடுத்து வைத்தது. விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஆரம்ப மாதங்களில், ஹூண்டாய் கிரெட்டாவை பின்னுக்கு தள்ளி இந்த மிட்-சைஸ் எஸ்யூவி தனி சாம்ராஜ்யம் நடத்தியது.

பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...

எனினும் புதிய தலைமுறை கிரெட்டாவின் வருகைக்கு பின் கியா செல்டோஸின் விற்பனை குறைந்து விட்டது தனிக்கதை. ஆனால் இன்னமும் கூட ஒவ்வொரு மாதமும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையைதான் கியா செல்டோஸ் பதிவு செய்து வருகிறது. இதன் விளைவாக கடந்த 2020ம் ஆண்டில் இந்தியாவில் அதிக எஸ்யூவி கார்களை விற்பனை செய்த நிறுவனங்களில் பட்டியலில் கியா 2வது இடத்தை பிடித்துள்ளது.

பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...

செல்டோஸ் எஸ்யூவி மூலம் இந்திய சந்தையில் வலுவான அடித்தளத்தை அமைத்த பிறகு, கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில், கார்னிவல் எம்பிவி காரை கியா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. நேரடி போட்டி என எந்த மாடலும் இல்லை என்றாலும், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் டாப் வேரியண்ட்களுடன் கியா கார்னிவல் போட்டியிட்டு வருகிறது.

பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...

தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் கிடைக்கும் கியா நிறுவனத்தின் விலை உயர்ந்த கார் என்றால், அது கார்னிவல் எம்பிவிதான். இருந்தாலும் இந்த பிரீமியம் எம்பிவி அதற்கு ஏற்ப சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. இந்த 2 கார்களை தொடர்ந்து, இந்திய சந்தையில் கியா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த மூன்றாவது தயாரிப்பு சொனெட்.

பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...

சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரான சொனெட், இந்திய சந்தையில் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. கவர்ச்சிகரமான டிசைன், பல்வேறு இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள், சவாலான விலை நிர்ணயம் உள்ளிட்ட காரணங்களால், கியா சொனெட் காம்பேக்ட் எஸ்யூவி காருக்கு இந்திய சந்தையில் உச்சகட்ட வரவேற்பு கிடைத்துள்ளது.

பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...

இந்த செக்மெண்ட்டில் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தி வரும் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட கார்களுக்கு கியா சொனெட் தலைவலியை கொடுத்து வருகிறது. தற்போதைய நிலையில் இந்த 3 கார்களை மட்டுமே கியா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...

இந்த சூழலில் இந்திய சந்தையில் 2 லட்சம் கார்கள் விற்பனை என்ற மைல்கல்லை வெறும் 17 மாதங்களில் கடந்திருப்பதாக கியா நிறுவனம் இன்று (ஜனவரி 25) அறிவித்துள்ளது. இதற்கு செல்டோஸ் மிட்-சைஸ் எஸ்யூவி மற்றும் சொனெட் காம்பேக்ட் எஸ்யூவி ஆகிய இரண்டு கார்களுக்கும்தான் கியா நிறுவனம் நன்றி சொல்ல வேண்டும்.

பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...

இந்த 2 கார்களும்தான் இந்த சாதனையில் முக்கிய பங்காற்றியுள்ளன. கியா கார்னிவல் காரும் தன் பங்கிற்கு ஓரளவிற்கு பங்காற்றியுள்ளது. இந்திய சந்தையில் புதிதாக நுழைந்த ஒரு நிறுவனம் இவ்வளவு குறுகிய காலத்தில் 2 லட்சம் கார்கள் என்ற விற்பனை மைல்கல்லை கடந்திருப்பது மிகப்பெரிய சாதனைதான் என்பதில் சந்தேகமில்லை.

Most Read Articles

English summary
Kia Sold 2 Lakh Cars In India In Just 17 Months - Thanks To Seltos & Sonet. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X