புதிய பிராண்டு லோகோவுடன் கியா சொனெட் காரின் முதல் தரிசனம்!

கியா மோட்டார் நிறுவனத்தின் புதிய லோகோவுடன் சொனெட் கார் முதல்முறையாக தரிசனம் கொடுத்துள்ளது. அதன் படங்கள் மற்றும் கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய பிராண்டு லோகோவுடன் கியா சொனெட் காரின் முதல் தரிசனம்!

தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார் நிறுவனம் அண்மையில் தனது பிராண்டுக்கு புதிய லோகோவை வெளியிட்டது. இதற்காக கண்கவர் நிகழ்ச்சியையும் நடத்தி உலகின் கவனத்தை ஈர்த்தது.

புதிய பிராண்டு லோகோவுடன் கியா சொனெட் காரின் முதல் தரிசனம்!

இந்த நிலையில், இந்த புதிய பிராண்டு சின்னத்துடன் கூடிய கியா கார்கள் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளன. வரும் 27ந் தேதி நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் இந்த புதிய மாடல்கள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பிராண்டு லோகோவுடன் கியா சொனெட் காரின் முதல் தரிசனம்!

இந்த சூழலில், புதிய கியா சின்னம் கொண்ட சொனெட் கார் முதல்முறையாக தரிசனம் கொடுத்துள்ளது. டீலருக்கு கொண்டு வரப்பட்ட அந்த காரை விஷ்ணு என்பவர் படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். இதனை ரஷ்லேன் தளம் வெளியிட்டுள்ளது.

புதிய பிராண்டு லோகோவுடன் கியா சொனெட் காரின் முதல் தரிசனம்!

KIA என்ற பிராண்டு எழுத்துக்கள் புதிய வடிவில் இடம்பெற்றிருக்கிறது. இந்த புதிய மாடல்கள் விரைவில் விற்பனைக்கு வரும் நிலையில், டெஸ்ட் டிரைவ் மற்றும் டெலிவிரி கொடுப்பதற்காக டீலருக்கு அனுப்பும் பணிகள் நடந்து வருவதும் தெரிய வந்துள்ளது.

புதிய பிராண்டு லோகோவுடன் கியா சொனெட் காரின் முதல் தரிசனம்!

இந்த நிலையில், புதிய மாடல்களில் சில வேரியண்ட்டுகள் நீக்கப்படும் என்றும், சில புதிய வேரியண்ட்டுகளும் எதிர்பார்க்கலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன. அதாவது, எச்டிகே ப்ளஸ் டிசிடி டர்போ பெட்ரோல் வேரியண்ட் மற்றும் எச்டிகே ப்ளஸ் ஆட்டோமேட்டிக் டீசல் வேரியண்ட்டுகள் நீக்கப்படும் வாய்ப்புள்ளது. எச்டிஎக்ஸ் டிசிடி பெட்ரோல் மற்றும் எச்டிஎக்ஸ் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டுகள் மாற்றாக அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு உள்ளது.

புதிய பிராண்டு லோகோவுடன் கியா சொனெட் காரின் முதல் தரிசனம்!

புதிய கியா சொனெட் காரில் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், 7 ஸ்பீக்கர் போஸ் ஸ்டீரியோ சிஸ்டம், எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ரியர் ஏசி வென்ட்டுகள், கனெக்டெட் கார் தொழில்நுட்பம் உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக தொடரும்.

புதிய பிராண்டு லோகோவுடன் கியா சொனெட் காரின் முதல் தரிசனம்!

இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் இடம்பெறும்.

புதிய பிராண்டு லோகோவுடன் கியா சொனெட் காரின் முதல் தரிசனம்!

இதனிடையே, வரும் 27ந் தேதி புதிய கியா செல்டோஸ் காரும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய லோகோவுடன் சில கூடுதல் சிறப்பம்சங்களுடன் செல்டோஸ் கார் வர இருக்கிறது. செல்டோஸ் காரிலும் புதிய வேரியண்ட்டுகள் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Kia Sonet car with new logo has spotted near dealership. The new model is expected to launch later this month.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X