அடுத்த ஆண்டு துவக்கத்தில் புதிய கார்... கியா அறிவிப்பால் கலக்கத்தில் மாருதி எர்டிகா!

அடுத்த ஆண்டு துவக்கத்தில் புதிய ரக கார் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக கியா மோட்டார் அறிவித்துள்ளது. இந்த புதிய மாடல் மாருதி எர்டிகா காருக்கு போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் புதிய கார்... கியா அறிவிப்பால் கலக்கத்தில் மாருதி எர்டிகா!

தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார் நிறுவனம் இந்தியர்களின் நாடித்துடிப்பை சரியாக பிடித்து பார்தது புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. முதலாவதாக அந்நிறுவனம் அறிமுகம் செய்த செல்டோஸ் கார் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், அடுத்து வந்த கார்னிவல், சொனெட் ஆகிய மாடல்களும் தனது ரக மாடல்களில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளன.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் புதிய கார்... கியா அறிவிப்பால் கலக்கத்தில் மாருதி எர்டிகா!

இந்த நிலையில், தனது பிராண்டின் புதிய லோகோவை இன்று இந்தியாவில் முறைப்படி அறிமுகப்படுத்தியது கியா மோட்டார் நிறுவனம். இந்த நிகழ்ச்சியில், கியாவின் புதிய லோகோ அறிமுகம் செய்ததுடன், மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய செல்டோஸ் மற்றும் சொனெட் கார்கள் அடுத்த மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் புதிய கார்... கியா அறிவிப்பால் கலக்கத்தில் மாருதி எர்டிகா!

இந்த நிகழ்ச்சியில் மற்றுமொரு கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக, அடுத்த ஆண்டு துவக்கத்தில் புத்தம் புதிய கார் மாடலை களமிறக்க உள்ளதாக கியா மோட்டார் தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் புதிய கார்... கியா அறிவிப்பால் கலக்கத்தில் மாருதி எர்டிகா!

அதாவது, இது புதிய ரகத்தில் களமிறக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கார் மாடல் குறித்து எந்த விபரத்தையும் கியா மோட்டார் பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனால், இது புதிய எம்பிவி கார் மாடலாக இருக்கும் என்று உறுதியாக நம்பப்படுகிறது.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் புதிய கார்... கியா அறிவிப்பால் கலக்கத்தில் மாருதி எர்டிகா!

ஏனெனில், ஒரு புதிய எம்பிவி கார் மாடலை கியா மோட்டார் நிறுவனம் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தி இருக்கிறது. இந்த புதிய எம்பிவி கார் மாடலானது மாருதி எர்டிகா காருக்கு நேரடி போட்டியாக இருக்கும் வகையில் பரிமாணம் மற்றும் விலையில் களமிறக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் புதிய கார்... கியா அறிவிப்பால் கலக்கத்தில் மாருதி எர்டிகா!

கியா நிறுவனத்தின் புதிய மிட்சைஸ் எம்பிவி கார் மாடலானது KY என்ற குறியீட்டுப் பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த கார் மாருதி எர்டிகா, மஹிந்திரா மராஸ்ஸோ, டொயோட்டா இன்னோவா போன்ற பிரபலமான எம்பிவி கார்களுக்கு போட்டியாக இருக்கும் வகையில் விலை மற்றும் சிறப்பம்சங்களை கொண்ட 7 சீட்டர் மாடலாக இருக்கும்.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் புதிய கார்... கியா அறிவிப்பால் கலக்கத்தில் மாருதி எர்டிகா!

இந்த புதிய எம்பிவி கார் ஆந்திர மாநிலம், அனந்த்பூரில் உள்ள கியா ஆலையில்தான் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இந்தியா மட்டுமின்றி, இந்தோனேஷியா உள்ளிட்ட பிற ஆசிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் புதிய கார்... கியா அறிவிப்பால் கலக்கத்தில் மாருதி எர்டிகா!

செல்டோஸ் காரில் அடிப்படையிலான கட்டமைப்புக் கொள்கையில்தான் இந்த புதிய காரும் உருவாக்கப்படுகிறது. இந்த கார் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் கிடைக்கும். அல்கஸார் எஸ்யூவியை போன்றே இந்த காரும் 2,760 மிமீ வீல்பேஸ் நீளத்தை பெற்றிருக்கும் வாய்ப்பு இருக்கிறது. இதனால், மூன்றாவது வரிசையிலும் போதுமான இடவசதியை எதிர்பார்க்கலாம்.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் புதிய கார்... கியா அறிவிப்பால் கலக்கத்தில் மாருதி எர்டிகா!

கியா எம்பிவி காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் இடம்பெற்றிருக்கலாம். பெட்ரோல் எஞ்சின் 113 பிஎச்பி பவரையும், 145 என்எம் டார்க் திறனையும், டீசல் எஞ்சின் 113 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும்.

குறிப்பு: மாதிரி படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
KIA has announced that the company will launch all new car model early next year and it is expected to be a mid size MPV car.
Story first published: Tuesday, April 27, 2021, 13:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X