இந்தியாவில் ஆழமாக காலூன்ற உதவிய கார் மாடலில் புதிய ட்ரிம் வெளியீடு... Kia அதிரடி! போட்டியாளர்கள் நடுக்கம்!

இந்தியாவில் மிக ஆழமாக காலூன்ற உதவியாக இருந்த கார் மடாலில் புதிய ட்ரிம்மை Kia நிறுவனம் வெளியீடு செய்துள்ளது. அது என்ன கார் மாடல், என்ன மாதிரியான சிறப்பு வசதிகளுடன் புதிய ட்ரிம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

இந்தியாவில் ஆழமாக காலூன்ற உதவியாக இருந்த கார் மாடலில் புதிய ட்ரிம் வெளியீடு... Kia அதிரடி! போட்டியாளர்கள் நடுக்கம்!

Kia நிறுவனத்தின் புகழ்வாய்ந்த கார் மாடல்களில் ஒன்று Seltos. இது ஓர் எஸ்யூவி ரக காராகும். நிறுவனம் இந்தியாவில் கால் தடம் பதித்து களமிறக்கிய முதல் காராக Seltos இருக்கின்றது. நாட்டில் மிக ஆழமாக கால் ஊன்றவும் இந்த கார் மாடலே நிறுவனத்திற்கு பெரும் உதவியாக மாறியிருக்கின்றது. ஆம், நாட்டின் மிக அதிகம் விற்பனையாகும் காராக Kia Seltos உருமாறியிருக்கின்றது.

இந்தியாவில் ஆழமாக காலூன்ற உதவியாக இருந்த கார் மாடலில் புதிய ட்ரிம் வெளியீடு... Kia அதிரடி! போட்டியாளர்கள் நடுக்கம்!

இதன் விளைவாக இந்தியாவின் மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்த கார் தயாரிப்பு நிறுவனமாக Kia உருவெடுத்துள்ளது. இந்த நிலையில், Seltos வரிசையில் கூடுதலாக புதிய தேர்வை சேர்க்கும் பணியில் Kia களமிறங்கியிருக்கின்றது. இதனடிப்படையில் Seltos X-Line எனும் தேர்வை நிறுவனம் வெளியீடு செய்துள்ளது.

இந்தியாவில் ஆழமாக காலூன்ற உதவியாக இருந்த கார் மாடலில் புதிய ட்ரிம் வெளியீடு... Kia அதிரடி! போட்டியாளர்கள் நடுக்கம்!

இதன் அறிமுகம் வரும் செப்டம்பர் மாதம் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் முன் மாதிரி ஏற்கனவே நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆம், Kia நிறுவனம் Seltos X-Line எஸ்யூவி காரின் முன் மாதிரி மாடலை கடந்த ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியிருந்தது.

இந்தியாவில் ஆழமாக காலூன்ற உதவியாக இருந்த கார் மாடலில் புதிய ட்ரிம் வெளியீடு... Kia அதிரடி! போட்டியாளர்கள் நடுக்கம்!

இதைத் தொடர்ந்தே உற்பத்தி செய்யவிருக்கும் மாடலை நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது. இதனை வழக்கமான Seltos எஸ்யூவியில் இருந்து மாறுபட்டு காட்டுவதற்காக பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், இதற்கு செய்யப்பட்டிருக்கும் நிற அலங்காரம் அதிகளவில் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்தியாவில் ஆழமாக காலூன்ற உதவியாக இருந்த கார் மாடலில் புதிய ட்ரிம் வெளியீடு... Kia அதிரடி! போட்டியாளர்கள் நடுக்கம்!

Kia Seltos X-Line காருக்கு அடர் நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் சில காஸ்மெட்டிக் மாற்றங்களும் செய்யப்பட்டிருக்கின்றன. Seltos X-Line கார் கன்-மெட்டல் மேட்-ரக பெயிண்டால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், காரின் குறிப்பிட்ட சில பகுதிகளில் கருப்பு கிளாஸ்-ரக பெயிண்டும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

இந்தியாவில் ஆழமாக காலூன்ற உதவியாக இருந்த கார் மாடலில் புதிய ட்ரிம் வெளியீடு... Kia அதிரடி! போட்டியாளர்கள் நடுக்கம்!

தொடர்ந்து, ஆங்காங்கே ஆரஞ்சு நிறம் ஹைலைட் வண்ணமாக எஸ்யூவியின் தோற்றத்தை கவர்ச்சிகரமானதாக மாற்றும் வகையில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. உருவத்தைப் பொருத்தவரை வழக்கமான Seltos மற்றும் Seltos X-Line இரண்டும் ஒரே மாதிரியான இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியாவில் ஆழமாக காலூன்ற உதவியாக இருந்த கார் மாடலில் புதிய ட்ரிம் வெளியீடு... Kia அதிரடி! போட்டியாளர்கள் நடுக்கம்!

அதேசமயம், Seltos X-Line தேர்வில் இடம் பெற்றிருக்கும் பம்பர் மறு வடிவமைப்பு செய்யப்பட்டிருக்கின்றது. இதில் இடம் பெற்றிருக்கும் ஏர்-டேம்களுக்கே ஆரஞ்சு நிறம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து, ஆரஞ்சு நிற புதிய அலாய் வீல், பெரியளவில் மாற்றம் செய்யப்பட்ட கிளாடிங் (ஸ்மோக்கட் ரக எல்இடி வால் பகுதி மின் விளக்குடன் இது பொருத்தப்பட்டிருக்கின்றது) உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கின்றன.

இந்தியாவில் ஆழமாக காலூன்ற உதவியாக இருந்த கார் மாடலில் புதிய ட்ரிம் வெளியீடு... Kia அதிரடி! போட்டியாளர்கள் நடுக்கம்!

Kia Seltos X-Line உட்பகுதி:

வெளிப்புறத்தைப் போலவே உட்பகுதியும் வழக்கமான Seltos மற்றும் Seltos X-Line ஆகிய இரண்டும் ஒரு மாதிரியானதாக காட்சியளிக்கின்றன. ஆனால், குறிப்பிட்ட சில அம்சங்கள் மட்டும் மாறுபட்டு தென்படுகின்றன. அந்தவகையில், Seltos X-Line தேர்வில் ஃபாக்ஸ் லெதர் இருக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து, அடர் நிறம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

இந்தியாவில் ஆழமாக காலூன்ற உதவியாக இருந்த கார் மாடலில் புதிய ட்ரிம் வெளியீடு... Kia அதிரடி! போட்டியாளர்கள் நடுக்கம்!

இதைத்தொடர்ந்து, வழக்கமான அம்சமான 10.25 இன்சிலான தொடுதிரை, யுவிஓ இணைப்பு, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசதிகளுடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல், காற்று வடிகட்டி, சன்ரூஃப் போன்ற பல்வேறு பிரீமியம் அம்சங்கள் Kia Seltos X-Line காரில் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் ஆழமாக காலூன்ற உதவியாக இருந்த கார் மாடலில் புதிய ட்ரிம் வெளியீடு... Kia அதிரடி! போட்டியாளர்கள் நடுக்கம்!

Kia Seltos X-Line எஞ்ஜின்:

Kia Seltos X-Line பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான எஞ்ஜின் தேர்வில் உருவாகியிருக்கின்றது. 1.4 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின் இவ்விரு மோட்டார் தேர்வுகளிலேயே Seltos X-Line உருவாகியுள்ளது. இத்துடன், பெட்ரோல் மோட்டாரில் 7 ஸ்பீடு டிசிடி தானியங்கி டிரான்ஸ்மிஷன் வழக்கமான கியர்பாக்ஸ் தேர்வாகவும், 6 ஸ்பீடு தானியங்கி டார்க் கன்வெர்டர் டீசல் வேரியண்டிலும் வழங்கப்படும்.

இந்தியாவில் ஆழமாக காலூன்ற உதவியாக இருந்த கார் மாடலில் புதிய ட்ரிம் வெளியீடு... Kia அதிரடி! போட்டியாளர்கள் நடுக்கம்!

Kia Seltos X-Line விலை:

இந்த அட்டகாசமான வசதிக் கொண்ட Seltos X-Line காரை Kia ரூ. 16.65 லட்சம் தொடங்கி ரூ. 17.85 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதன் விலை குறித்த விபரத்தை நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. காரின் அறிமுக தினத்தின்போது இதுகுறித்த வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Kia unveiled seltos x line trim ahead of september launch
Story first published: Friday, August 27, 2021, 13:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X