ஆஃப்-ரோடு வாகனமாக புதிய ஸ்போர்டேஜ் காரை வெளியீடு செய்துள்ள கியா!! கூடுதல் பருமனாகவும் மாறியுள்ளது!

அளவில் பெரிய, தொழிற்நுட்பங்கள் நிறைந்ததாக கியா ஸ்போர்டேஜ் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனமாகவும் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய கியா காரினை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஆஃப்-ரோடு வாகனமாக புதிய ஸ்போர்டேஜ் காரை வெளியீடு செய்துள்ள கியா!! கூடுதல் பருமனாகவும் மாறியுள்ளது!

உலகளவில் அதிகளவில் விற்பனை செய்யப்படும் கியா காராக விளங்கும் ஸ்போர்டேஜ் குறிப்பாக அமெரிக்க சந்தையில் அதிகளவில் விற்பனையாகிறது. இத்தகைய எஸ்யூவி கார் தான் தற்போது அதன் புதிய தோற்றத்தில் ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்றதாக கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆஃப்-ரோடு வாகனமாக புதிய ஸ்போர்டேஜ் காரை வெளியீடு செய்துள்ள கியா!! கூடுதல் பருமனாகவும் மாறியுள்ளது!

அதேநேரம் பரிமாண அளவுகளும் அதிகரித்துள்ளன. இதன் விளைவாக கார் முன்பை காட்டிலும் கம்பீரமானதாக மாறியுள்ளது. மேலும் தொழிற்நுட்ப அம்சங்களும் அதிகரித்துள்ளன. புதிய ஸ்போர்டேஜ் எக்ஸ்-லைன் மற்றும் எக்ஸ்-ப்ரோ என்ற இரு விதமான ட்ரிம் நிலைகளில் விற்பனை செய்யப்பட உள்ளது.

ஆஃப்-ரோடு வாகனமாக புதிய ஸ்போர்டேஜ் காரை வெளியீடு செய்துள்ள கியா!! கூடுதல் பருமனாகவும் மாறியுள்ளது!

இதில் எக்ஸ்-ப்ரோ மாடல் ஆனது அனைத்து-பாதை டயர்கள் உள்பட அட்வென்ச்சர் பயணங்களுக்கான அம்சங்களை பெற்றுள்ளது. புதிய தலைமுறை ஸ்போர்டேஜ் மாடலை தொடர்ந்து இந்த எஸ்யூவி காரின் எலக்ட்ரிக் வெர்சனையும் அறிமுகப்படுத்த கியா தயாராகி வருகிறது. இதுகுறித்து கியா அமெரிக்கா நிறுவனத்தின் தலைவரும், சிஇஒ-வுமான சீன் யூன் கருத்து தெரிவிக்கையில், கியா மின்மயமாக்கலை நோக்கி நகருகிறது.

ஆஃப்-ரோடு வாகனமாக புதிய ஸ்போர்டேஜ் காரை வெளியீடு செய்துள்ள கியா!! கூடுதல் பருமனாகவும் மாறியுள்ளது!

அதேவேளையில், அனைத்து விதமான வாடிக்கையாளர்களுக்கும் பொருத்தமான பல்வேறு தேர்வுகளை சேர்ப்பதன் மூலம் ஸ்போர்டேஜ் வரிசையை மேலும் வலுப்படுத்துகிறோம் என்றார். ஏற்கனவே கூறியதுதான், தோற்றத்தை பொறுத்தவரையில் முந்தைய தலைமுறையை காட்டிலும் புதிய ஸ்போர்டேஜ் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாகும். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், 18 செமீ கூடுதல் நீளமானது, 7 செ.மீ கூடுதல் நீளத்தில் வீல்பேஸை கொண்டது.

ஆஃப்-ரோடு வாகனமாக புதிய ஸ்போர்டேஜ் காரை வெளியீடு செய்துள்ள கியா!! கூடுதல் பருமனாகவும் மாறியுள்ளது!

உட்புறமும் இரு திரைகளுடன் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக புதிய ஸ்போர்டேஜின் கேபினும் வெளிப்புறத்திற்கு & ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்ப முரட்டுத்தனமானதாக மாறியுள்ளது. வித்தியாசமான ஃபெண்டர் பேட்டர்ன், சாடின் க்ரோம் மற்றும் அதிக பளபளப்பான கருப்பு ட்ரிம் உள்ளிட்டவற்றை இந்த மாற்றத்திற்கு காரணமாக சொல்லலாம்.

ஆஃப்-ரோடு வாகனமாக புதிய ஸ்போர்டேஜ் காரை வெளியீடு செய்துள்ள கியா!! கூடுதல் பருமனாகவும் மாறியுள்ளது!

வெளிப்பக்கத்தில் மேற்கூரை கம்பிகள் சற்று நீளமானதாக மாற்றப்பட்டுள்ளன. புதிய ஸ்போர்டேஜின் வெளிப்புறத்தில் பூமராங் வடிவில் எல்இடி டிஆர்எல்கள், பருமனான சக்கர வளைவுகள், ஷோல்டர் லைன் மற்றும் எல்இடி டெயில்லைட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. புதிய தலைமுறை ஸ்போர்டேஜின் அனைத்து வேரியண்ட்களும் நிலையாக அனைத்து-சக்கர ட்ரைவ் அமைப்பை பெற்றுள்ளன.

ஆஃப்-ரோடு வாகனமாக புதிய ஸ்போர்டேஜ் காரை வெளியீடு செய்துள்ள கியா!! கூடுதல் பருமனாகவும் மாறியுள்ளது!

இதன் எதிரொலியாக, காரின் க்ரவுண்ட் க்ளியரென்ஸ் கிட்டத்தட்ட 1 இன்ச் அதிகரித்துள்ளது. புதிய ஸ்போர்டேஜின் எக்ஸ்-லைன் வெர்சனில் 19 இன்ச் அலாய் சக்கரங்களுடன் வழக்கமான டயர்கள் வழங்கப்பட்டுள்ளன. அதுவே, எக்ஸ்-ப்ரோ வேரியண்ட்டில் 17-இன்ச் சக்கரங்களுடன் ஆஃப்-ரோடு டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஆஃப்-ரோடு வாகனமாக புதிய ஸ்போர்டேஜ் காரை வெளியீடு செய்துள்ள கியா!! கூடுதல் பருமனாகவும் மாறியுள்ளது!

இந்த அம்சத்துடன் எக்ஸ்-ப்ரோ வேரியண்ட்டில் எல்இடி ஃபாக் விளக்குகள், ஹீட்டட் விண்ட்ஸ்க்ரீன் மற்றும் வெவ்வேறான ட்ரைவ் மோட்களும் கொடுக்கப்பட்டுள்ளன. எக்ஸ்-ப்ரோ வெர்சனில் வழங்கப்பட்டுள்ள பிரெஸ்டிஜ் தொகுப்பின் மூலம் மடக்கும் வசதி உடன் முன்பக்க பயணி இருக்கை மற்றும் எல்இடி பிரோஜெக்டர் ஹெட்லைட்கள் உள்ளிட்டவற்றை பெறலாம்.

ஆஃப்-ரோடு வாகனமாக புதிய ஸ்போர்டேஜ் காரை வெளியீடு செய்துள்ள கியா!! கூடுதல் பருமனாகவும் மாறியுள்ளது!

இவை தவிர்த்து, புதிய தலைமுறை ஸ்போர்டேஜ் எஸ்யூவி காரை பற்றிய மற்ற விபரங்கள் எதையும் கியா நிறுவனம் வெளியிடவில்லை. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி டர்போசார்ஜ்டு யூனிட்டிற்கு பதிலாக 2.5 லிட்டர் 4-சிலிண்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் என்ஜின் வழங்கப்படலாம். இது தற்போதைய கியா ஸ்போர்டேஜின் 2.4 லிட்டர் என்ஜினை காட்டிலும் அளவில் சற்று பெரியதாகும்.

ஆஃப்-ரோடு வாகனமாக புதிய ஸ்போர்டேஜ் காரை வெளியீடு செய்துள்ள கியா!! கூடுதல் பருமனாகவும் மாறியுள்ளது!

புதிய நேச்சுரலி-அஸ்பிரேட்டட் என்ஜின் அதிகப்பட்சமாக 187 எச்பி-ஐ வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். எதிர்காலத்தில் ஸ்போர்டேஜை ஹைப்ரீட் வெர்சனிலும் கியா அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. என்ஜின் அமைப்பில் மட்டுமல்ல, டிரான்ஸ்மிஷன் அமைப்பிலும் புதிய ஸ்போர்டேஜ் மாற்றங்களை கொண்டுவரலாம்.

ஆஃப்-ரோடு வாகனமாக புதிய ஸ்போர்டேஜ் காரை வெளியீடு செய்துள்ள கியா!! கூடுதல் பருமனாகவும் மாறியுள்ளது!

மேனுவல் தேர்வு வழங்கப்படுவதற்கு வாய்ப்பில்லை. ஆனால், 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுக்கு பதிலாக புதிய 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம். இந்தியாவில் தென்கொரியாவை சேர்ந்த கியா நிறுவனத்தின் இந்த எஸ்யூவி கார் விற்பனையில் இல்லை. இதனால் இதன் இந்த புதிய தலைமுறையும் இன்னும் சில ஆண்டுகளுக்கு நம் நாட்டு சந்தைக்கு கொண்டுவரப்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

Most Read Articles
மேலும்... #கியா #kia
English summary
New-Gen Kia Sportage Officially Unveiled.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X