நிஜமாகும் ஹாலிவுட் படங்கள்!! ஐரோப்பாவில் சோதனை செய்யப்பட்ட ‘பறக்கும் கார்’!

பறக்கும் கார்கள், சில ஹாலிவுட் படங்களில் பார்த்திருப்போம். நேரில் பார்த்தோர் என்று பார்த்தால், யாரும் இருக்க மாட்டீர்கள் என்று தான் நினைக்கிறேன்.

நிஜமாகும் ஹாலிவுட் படங்கள்!! ஐரோப்பாவில் சோதனை செய்யப்பட்ட ‘பறக்கும் கார்’!

ஹாலிவுட் படங்களிலும் கூட எதிர்காலத்தில் நடப்பது போன்றதான காட்சிகளில் தான் பறக்கும் கார்களை காட்டியிருப்பார்கள். அப்படியென்றால், தற்போதைய காலத்திற்கும் பறக்கும் கார்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ள காலத்திற்கும் இடையே இன்னும் எந்த அளவிற்கு இடைவெளி உள்ளது என்பதை பார்த்து கொள்ளுங்கள்.

நிஜமாகும் ஹாலிவுட் படங்கள்!! ஐரோப்பாவில் சோதனை செய்யப்பட்ட ‘பறக்கும் கார்’!

அதுமட்டுமில்லாமல் பறக்கும் கார்களை தயாரிப்பது தற்சமயம் சற்று சிரமமான காரியமாக உள்ளது. இருப்பினும் இப்போதே பறக்கும் கார்களை சோதனை செய்வதை சில நிறுவனங்கள் ஆரம்பித்துவிட்டன. அவற்றில் ஒன்றை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

நிஜமாகும் ஹாலிவுட் படங்கள்!! ஐரோப்பாவில் சோதனை செய்யப்பட்ட ‘பறக்கும் கார்’!

நெதர்லாந்தை சேர்ந்த பறக்கும் கார் தயாரிப்பு நிறுவனம் பால்-வி (PAL-V: தனிப்பட்ட வான் நில வாகனம்). இதன் லிபெர்டி எனும் பறக்கும் வாகனம் கடந்த ஆண்டில் சாலையில் இயக்குவதற்கு அனுமதி பெற்ற முதல் பறக்கும் கார் என்ற பெயரை பெற்றது.

நிஜமாகும் ஹாலிவுட் படங்கள்!! ஐரோப்பாவில் சோதனை செய்யப்பட்ட ‘பறக்கும் கார்’!

ஆனால் நாம் இந்த செய்தியில் பார்க்கவுள்ளது, ஸ்லோவேக்கியாவில் இரு விமான நிலையங்களுக்கு இடையே சோதனை செய்யப்பட்ட க்ளீன் விஸனின் காப்புரிமை பெற்ற பறக்கும் காரை பற்றி.

இரு விமான நிலையங்களுக்கு இடையே பறந்த முதல் பறக்கும் கார் என்ற பெயரை பெற்ற இது, ஸ்லோவேக்கியாவின் நிட்ரா விமான நிலையத்தில் இருந்து, தலைநகர் பிராட்டிஸ்லாவா சர்வதேச விமான நிலையம் வரையில் பறக்கவிடப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த பயணம் வெறும் 35 நிமிடங்கள் மட்டுமே இருந்தது.

நிஜமாகும் ஹாலிவுட் படங்கள்!! ஐரோப்பாவில் சோதனை செய்யப்பட்ட ‘பறக்கும் கார்’!

பேராசிரியர் ஸ்டீஃபன் க்ளீனின் கண்டுப்பிடிப்பான இது பறக்கும் வாகனத்தில் இருந்து வெறும் 3 நிமிடங்களில் காராக மாறுகிறது. இந்த சோதனை ஓட்டம் குறித்து ஸ்டீஃபன் க்ளீன் பேசுகையில், இந்த விமானம் இரட்டை-போக்குவரத்து வாகனங்களின் புதிய சகாப்தத்தை தொடங்கும் என்றார்.

நிஜமாகும் ஹாலிவுட் படங்கள்!! ஐரோப்பாவில் சோதனை செய்யப்பட்ட ‘பறக்கும் கார்’!

ஸ்லோவேக்கியாவில் சோதனையில் உட்படுத்தப்பட்டிருப்பது ஏர்கார் மாதிரி 1 ஆகும். இதில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 158 பிஎச்பி என்ஜின், நிலையான-முன்னோக்கி செலுத்தி & பாலிஸ்டிக் பாராசூட் உடன் வழங்கப்பட்டுள்ளது.

நிஜமாகும் ஹாலிவுட் படங்கள்!! ஐரோப்பாவில் சோதனை செய்யப்பட்ட ‘பறக்கும் கார்’!

இதுவரையில் கிட்டத்தட்ட 40 மணிநேரத்திற்கும் அதிகமான நேரத்திற்கு பறக்கவிடப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ள இந்த மாதிரி 1 பறக்கும் கார் 8,200 அடி உயரம் வரையில் பறக்குமாம். இதன் டாப்-ஸ்பீடு மணிக்கு 190கிமீ ஆகும்.

நிஜமாகும் ஹாலிவுட் படங்கள்!! ஐரோப்பாவில் சோதனை செய்யப்பட்ட ‘பறக்கும் கார்’!

இத்துடன் ஏர்கார் மாதிரி 2 எனும் பறக்கும் காரும் தயாராகவுள்ளது. இதில் 296 பிஎச்பி என்ஜினை பொருத்த திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் இந்த பறக்கும் கார் அதிகப்பட்சமாக 300kmph வேகத்திலும், 1,000கிமீ ரேஞ்ச்சிலும் பறக்கும் என்று கூறப்படுகிறது.

Most Read Articles

English summary
Klein Vision AirCar V5 Flying Car Completes Test Flight Between Airports in Slovakia.
Story first published: Friday, July 2, 2021, 9:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X