போடு... ஸ்கோடா கோடியாக் இந்த தினத்தில் தான் இந்தியாவில் அறிமுகமாக உள்ளதா!! பொங்கல் ஸ்பெஷல்

2022 ஸ்கோடா கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் காரின் இந்திய அறிமுகம் குறித்த லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றியும், இந்த புதிய ஸ்கோடா காரை பற்றியும் விரிவாக இனி செய்தியில் பார்ப்போம்.

போடு... ஸ்கோடா கோடியாக் இந்த தினத்தில் தான் இந்தியாவில் அறிமுகமாக உள்ளதா!! எப்போ தெரியுமா?

சில வாரங்களுக்கு முன்பு தான் ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் காரின் தயாரிப்பு பணிகளை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக துவங்கியது. அதேநேரத்தில் சில டீலர்ஷிப் மையங்களில் கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவுகளும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் துவங்கின.

போடு... ஸ்கோடா கோடியாக் இந்த தினத்தில் தான் இந்தியாவில் அறிமுகமாக உள்ளதா!! எப்போ தெரியுமா?

இந்த நிலையில் தற்போது நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, 2022 ஸ்கோடா கோடியாக் காரின் டெலிவிரிகள் ஜனவரி 14ஆம் தேதியில் இருந்தும், அதற்கு முன்னதாக ஜனவரி 10இல் இந்த கார் அறிமுகப்படுத்தப்படலாம் எனவும் தெரிவிக்கின்றன. இந்தியாவில் கோடியாக் கார்களின் விற்பனை நிறுத்தப்பட்டு கிட்டத்தட்ட 2 வருடங்களாகிவிட்டன. 2020 ஏப்ரலில் புதிய மாசு உமிழ்வு விதிமுறைகள் அமலுக்கு வந்த போது ஸ்கோடா கோடியாக் போன்ற விற்பனையில் சுமாரான டீசல் கார்களின் விற்பனை நிறுத்தி கொள்ளப்பட்டது.

போடு... ஸ்கோடா கோடியாக் இந்த தினத்தில் தான் இந்தியாவில் அறிமுகமாக உள்ளதா!! எப்போ தெரியுமா?

செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா நிறுவனம் உலகளவில் முதல் தலைமுறை கோடியாக் மாடலுக்கு அதன் ஆயுட்காலத்தை அதிகரிக்கும் வகையில் குறிப்பிடத்தக்க தோற்ற மாற்றங்களுடன் அப்டேட்டை வழங்கி இருந்தது. இந்த மாடல் தான் விரைவில் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனையை துவங்க உள்ளது. வழங்கப்பட்டுள்ள அப்டேட்களின்படி கோடியாக் காரின் முன்பக்கம் அப்டேட்டான க்ரில் பகுதி, புதிய வடிவமைப்பில் பொனெட், புதிய ஒருங்கிணைக்கப்பட்ட எல்இடி டிஆர்எல்-கள் உடன் ரீஸ்டைலில் ஹெட்லேம்ப்களை பெற்றுள்ளது.

போடு... ஸ்கோடா கோடியாக் இந்த தினத்தில் தான் இந்தியாவில் அறிமுகமாக உள்ளதா!! எப்போ தெரியுமா?

இவற்றுடன் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட்களாக, அகலமான மைய காற்று ஏற்பான் உடன் திருத்தியமைக்கப்பட்ட வடிவில் பம்பர் மற்றும் லிப் ஸ்பாய்லர் போன்றவற்றையும் கோடியாக் மாடலில் ஸ்கோடா வழங்கியுள்ளது. அதேபோல் பின்பக்கத்திலும் எல்இடி டெயில்லேம்ப்கள் மற்றும் பம்பரின் வடிவம் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் விசாலமான கேபினிற்காக நீண்ட பில்லர்களை கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் கார் தொடர்ந்துள்ளது.

போடு... ஸ்கோடா கோடியாக் இந்த தினத்தில் தான் இந்தியாவில் அறிமுகமாக உள்ளதா!! எப்போ தெரியுமா?

பொருட்களை கட்டி வைக்கும் கம்பியுடன் மேற்கூரை சற்று சாய்வாக வழங்கப்பட்டுள்ளது. காரின் பக்கவாட்டில் கருப்பு நிற பிளாஸ்டிங்குகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதேபோல் அலாய் சக்கரங்களின் டிசைனும் புதியது. ஆக மொத்தத்தில் முன்பு விற்பனையில் இருந்த கோடியாக்கின் வெளிப்புற தோற்றத்துடன் ஒப்பிடுகையில் புதிய கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் கார் முற்றிலும் புதியது. இந்திய சந்தையில் ஸ்போர்ட்லைன் வேரியண்ட்டும் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போடு... ஸ்கோடா கோடியாக் இந்த தினத்தில் தான் இந்தியாவில் அறிமுகமாக உள்ளதா!! எப்போ தெரியுமா?

கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்படும் இந்த வேரியண்ட்டை சுற்றிலும் அதேநேரத்தில் க்ரோம் தொடுதல்களும் வழங்கப்படுகின்றன. உட்புறத்தில் கண்ட்ரோல்களுடன் புதிய ஸ்டேரிங் சக்கரம், ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு இணைப்பு உடன் இணைக்கக்கூடிய 8-இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 3-நிலை ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், பனோராமிக் சன்ரூஃப், 9 காற்றுப்பைகள், சுற்றிலும் விளக்குகள் போன்றவற்றை கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் கொண்டுள்ளது.

போடு... ஸ்கோடா கோடியாக் இந்த தினத்தில் தான் இந்தியாவில் அறிமுகமாக உள்ளதா!! எப்போ தெரியுமா?

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு அப்டேட் செய்யப்பட்ட கோடியாக்கில் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்தியாவிலும் கொடுக்கப்படும் என கூறப்படுகின்ற இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 190 பிஎஸ் மற்றும் 320 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இதனுடன் 7-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

போடு... ஸ்கோடா கோடியாக் இந்த தினத்தில் தான் இந்தியாவில் அறிமுகமாக உள்ளதா!! எப்போ தெரியுமா?

இது என்ஜினின் ஆற்றலை அனைத்து சக்கரங்களுக்கும் வழங்கும். முன்பு கோடியாக்கில் வழங்கப்பட்ட 2.0 லிட்டர் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 150 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக இருந்தது. இந்த 7-இருக்கை ஸ்கோடா காருக்கு விற்பனையில் போட்டியாக ஃபோக்ஸ்வேகன் டிகுவான் மற்றும் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் கார்கள் சந்தையில் விற்பனையில் உள்ளன.

போடு... ஸ்கோடா கோடியாக் இந்த தினத்தில் தான் இந்தியாவில் அறிமுகமாக உள்ளதா!! எப்போ தெரியுமா?

இதனை தொடர்ந்து சமீபத்தில் உலகளவில் வெளியீடு செய்யப்பட்ட ஸ்லாவியா செடான் மாடல் வருகிற 2022 மார்ச் மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ராபிட் செடான் காருக்கு மாற்றாக கொண்டுவரப்படும் ஸ்லாவியா, ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் பிரீமியம் கார்கள் வரிசையில் ஆக்டேவியா மற்றும் சூப்பர்ப் மாடல்களுடன் இணையவுள்ளது.

போடு... ஸ்கோடா கோடியாக் இந்த தினத்தில் தான் இந்தியாவில் அறிமுகமாக உள்ளதா!! எப்போ தெரியுமா?

ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா மற்றும் மாருதி சுஸுஇ சியாஸ் உள்ளிட்ட செடான் கார்களுக்கு போட்டியாக விளங்கவுள்ள ஸ்கோடா ஸ்லாவியாவின் ஆரம்ப இந்திய எக்ஸ்-ஷோரூம் விலையினை ரூ.10 லட்சத்தில் எதிர்பார்க்கிறோம். குஷாக் எஸ்யூவி காரை உருவாக்க பயன்படுத்தப்பட்ட எம்க்யூபி ஏ0 இன் ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட உள்ள ஸ்லாவியா காரின் நீளம் 4,541மிமீ ஆகும்.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda #pongal 2022
English summary
Kodiaq facelift launch date out skoda did not confirm yet
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X