இந்தியாவில் 300வது காரை டெலிவிரி செய்தது லம்போர்கினி!! மூன்றில் ஒரு பங்கு உருஸ் எஸ்யூவி தானாம்!

லம்போர்கினி நிறுவனம் இந்த 2021ஆம் ஆண்டின் இந்தியாவில் அதன் 300வது காரை வாடிக்கையாளரிடம் டெலிவிரி செய்துள்ளது. இந்த சிறப்புமிக்க தருணத்தை கொண்டாடும் விதமாக இந்த இத்தாலிய சூப்பர் கார் தயாரிப்பு நிறுவனம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் 300வது காரை டெலிவிரி செய்தது லம்போர்கினி!! மூன்றில் ஒரு பங்கு உருஸ் எஸ்யூவி தானாம்!

தொடர்ச்சியாக கடந்த மூன்று வார இறுதி நாட்களில் லம்போர்கினி கார் உரிமையாளர்களுடன் நடத்தப்பட்டு வந்த லம்போர்கினி தினத்தின் இரண்டாவது பதிப்பு ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. இந்த ஆண்டு, இந்த இத்தாலிய சூப்பர்கார் தயாரிப்பு நிறுவனம் இந்திய சந்தையில் அதன் 300வது வாகனத்தை டெலிவிரி செய்துள்ளது.

இந்தியாவில் 300வது காரை டெலிவிரி செய்தது லம்போர்கினி!! மூன்றில் ஒரு பங்கு உருஸ் எஸ்யூவி தானாம்!

இதில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது கிட்டத்தட்ட 100 யூனிட்கள் லம்போர்கினி உருஸ் மாடல் ஆகும். 2018ல் லம்போர்கினியின் உலகளாவிய வெற்றி மாடலான உருஸ் முதன்முதலாக இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மற்ற லம்போர்கினி கார்களில் இருந்து பெரிய அளவில் வேறுப்பட்டதான இந்த லக்சரி எஸ்யூவி முதல் இந்திய வாடிக்கையாளருக்கு அதே ஆண்டு செப்டம்பர் மாதத்தில் டெலிவிரி செய்யப்பட்டது.

இந்தியாவில் 300வது காரை டெலிவிரி செய்தது லம்போர்கினி!! மூன்றில் ஒரு பங்கு உருஸ் எஸ்யூவி தானாம்!

அதன்பின் அதற்கடுத்த ஒரு வருடத்தில், அதாவது 2019 செப்டம்பரில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட உருஸ் எஸ்யூவி கார்களின் எண்ணிக்கை வெற்றிகரமாக 50 யூனிட்களை கடந்தது. இதனால் 100வது உருஸ் கார் அடுத்த 2020ஆம் ஆண்டில் டெலிவிரி செய்யப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்தியாவில் 300வது காரை டெலிவிரி செய்தது லம்போர்கினி!! மூன்றில் ஒரு பங்கு உருஸ் எஸ்யூவி தானாம்!

ஆனால் அதன்பின் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க, மற்ற கார்களின் விற்பனையை போல் இந்த லம்போர்கினி எஸ்யூவி காரின் விற்பனையும் வேகம் குறைந்தது. இதனால் 100வது உருஸ் கார் இந்த 2021ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் தான் அதன் உரிமையாளரை சென்றடைந்தது.

இந்தியாவில் 300வது காரை டெலிவிரி செய்தது லம்போர்கினி!! மூன்றில் ஒரு பங்கு உருஸ் எஸ்யூவி தானாம்!

ஒரே ஆண்டில் 300 கார்களை லம்போர்கினி நிறுவனம் விற்பனை செய்வது ஒன்றும் புதியதல்ல. முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டிலும் 300 கார்களை இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்துள்ளது. இருப்பினும் இந்த 2021ல் இவ்வளவு விரைவாக, 9 மாதங்களில் விற்பனையில் 300 யூனிட்களை கடந்துள்ளது.

இந்தியாவில் 300வது காரை டெலிவிரி செய்தது லம்போர்கினி!! மூன்றில் ஒரு பங்கு உருஸ் எஸ்யூவி தானாம்!

இந்த நிகழ்வை நினைவுக்கூறும் விதமாக தனது இந்திய வாடிக்கையாளர்களை அவர்களது லம்போர்கினி கார்களுடன் லம்போர்கினி நிறுவனம் அழைத்தது. இதன்படி தங்களது லம்போர்கினி சூப்பர்கார்களுடன் வருகை தந்த வாடிக்கையாளர்கள் சில அற்புதமான வழிகளில் ஒன்றாக லம்போர்கினி நிறுவனதால் இயக்கப்பட்டனர்.

இந்தியாவில் 300வது காரை டெலிவிரி செய்தது லம்போர்கினி!! மூன்றில் ஒரு பங்கு உருஸ் எஸ்யூவி தானாம்!

அப்போது பேசிய லம்போர்கினி இந்தியா நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஷராத் அகர்வால், இந்தியாவில் 300 லம்போர்கினி கார்கள் டெலிவிரி செய்யப்பட்டுள்ளதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் இந்த பயணத்தில் எங்களுக்கு ஆதரவளித்த வாடிக்கையாளர்களுடன் சேர்ந்து இந்த மைல்கல் சாதனையை லம்போர்கினி தினமாக கொண்டாடுகிறோம்.

இந்தியாவில் 300வது காரை டெலிவிரி செய்தது லம்போர்கினி!! மூன்றில் ஒரு பங்கு உருஸ் எஸ்யூவி தானாம்!

இந்த ஆண்டு ஹூராகென் எவோ பின்சக்கர-ட்ரைவ் ஸ்பைடர், உருஸ் பேர்ல் கேப்சூயூல் மற்றும் ஹூராகென் எஸ்டிஓ ஆகிய அற்புதமான கார்களை இந்தியாவில் வெளியீடு செய்துள்ளோம். இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவில் 100வது உருஸ் காரை டெலிவிரி செய்தோம். இது இந்தியாவில் சூப்பர்-சொகுசு கார் பிரிவில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

இந்தியாவில் 300வது காரை டெலிவிரி செய்தது லம்போர்கினி!! மூன்றில் ஒரு பங்கு உருஸ் எஸ்யூவி தானாம்!

லம்போர்கினி உரிமையாளர்களுடன் வெற்றியை கொண்டாடுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்றார். ஏற்கனவே கூறியதுதான், லம்போர்கினி தினம் கடந்த மூன்று வாரங்களாக இறுதி விடுமுறை நாட்களில் நடத்தப்பட்டு வந்தது. இதில் கலந்து கொண்ட லம்போர்கினி வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு வாரத்திலும் ஒவ்வொரு சாலைகளில் ஒன்றாக தங்களது லம்போர்கினி கார்களில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இந்தியாவில் 300வது காரை டெலிவிரி செய்தது லம்போர்கினி!! மூன்றில் ஒரு பங்கு உருஸ் எஸ்யூவி தானாம்!

அதாவது, முதல் வாரத்தில் மும்பை - புனேயும், இரண்டாவது வாரத்தில் பெங்களூர் - ஹம்பி வரையிலும், மூன்றாவது வாரத்தில் டெல்லி- ஜெவார் வரையிலும் வாடிக்கையாளர்கள் லம்போர்கினி நிறுவனத்தால் ட்ரைவ் செய்யப்பட்டனர். இந்த மூன்று நிகழ்வுகளிலும் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டதாக லம்போர்கினி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 300வது காரை டெலிவிரி செய்தது லம்போர்கினி!! மூன்றில் ஒரு பங்கு உருஸ் எஸ்யூவி தானாம்!

லம்போர்கினி பிராண்டில் இருந்து கடைசியாக உருஸ் கிராபைட் கேப்சூல் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. முழுவதும் கருப்பு நிறத்தில், ஆங்காங்கே ஆரஞ்ச் நிற தொடுதல்களுடன் வடிவமைக்கப்பட்ட உருஸ் எஸ்யூவி மாடலின் இந்த ஸ்பெஷல் எடிசன் இந்தியர்கள் பலரை வெகுவாக கவர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

Most Read Articles

English summary
Lamborghini celebrates the milestone delivery of 300 cars in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X