கவர்ச்சிகரமான சூப்பர் கார்... லம்போர்கினி ஹூராகேன் எவோ ஆர்டபிள்யூடி ஸ்பைடர் ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ...

ஹூராகேன் எவோ ஆர்டபிள்யூடி (RWD-ரியர் வீல் டிரைவ்) ஸ்பைடர் சூப்பர் காரை லம்போர்கினி நிறுவனம் சர்வதேச சந்தைகளில் கடந்த 2020ம் ஆண்டு வெளியிட்டது. ஆனால் இந்திய சந்தைக்கு இந்த சூப்பர் கார் தற்போதுதான் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சூப்பர் காரை பார்வையிடுவதற்காக, மும்பையில் உள்ள லம்போர்கினி டீலர்ஷிப்பிற்கு நாங்கள் அழைக்கப்பட்டோம்.

3.54 கோடி ரூபாய் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில், ஹூராகேன் எவோ ஆர்டபிள்யூடி (RWD-ரியர் வீல் டிரைவ்) ஸ்பைடர் சூப்பர் காரை லம்போர்கினி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்திய சந்தையில் தற்போது கிடைக்கும் மிகவும் கவர்ச்சிகரமான கன்வெர்டபிள் ரக கார்களில் ஒன்றாக இது தற்போது திகழ்கிறது.

கவர்ச்சிகரமான சூப்பர் கார்... லம்போர்கினி ஹூராகேன் எவோ ஆர்டபிள்யூடி ஸ்பைடர் ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ...

டிசைன் & ஸ்டைல்

லம்போர்கினி ஹூராகேன் எவோ ரியர் வீல் டிரைவ் ஸ்பைடர் சூப்பர் கார் லைஃப் ஸ்டைல் ரகத்தில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. முன் பகுதியை பொறுத்தவரை, ரியர் வீல் டிரைவ் கூபே மாடலை போன்று இந்த கார் காட்சியளிக்கிறது. பகல் நேர விளக்குகள் உடன் லேசர் எல்இடி ஹெட்லைட்களை இந்த கார் பெற்றுள்ளது. மேலும் இந்த காரின் முன் பகுதியில் புதிய ஸ்பிளிட்டரும் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் முன் பக்க ஏர் டேமுக்கு உள்ளாக செங்குத்து துடுப்புகளும் இடம்பெற்றுள்ளன. இதன் மூலமாக காற்றோட்டமும், ஏரோடைனமிக்சும் சிறப்பாக இருக்கும். டீலர்ஷிப்பில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த கார் வாடிக்கையாளர் ஒருவருக்கு சொந்தமானது. அவர் பிரத்யேகமான நீல நிற வண்ணத்தில் காரை தேர்வு செய்துள்ளார்.

கவர்ச்சிகரமான சூப்பர் கார்... லம்போர்கினி ஹூராகேன் எவோ ஆர்டபிள்யூடி ஸ்பைடர் ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ...

இந்த காரில், 5-ஸ்போக், 19 இன்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த காரின் பிரேக் காலிபர்கள் சிகப்பு நிறத்தில் உள்ளன. இதனுடன் பெரிய பெட்டல் டிஸ்க்கும் கவனம் ஈர்க்கிறது. மேலும் இரு பக்கமும், டோர்களுக்கு பின்னால் பெரிய காற்று குழாய்கள் வழங்கப்பட்டுள்ளன. பெரிய வி10 இன்ஜினை குளிர்ச்சியாக்கும் ரேடியேட்டர்களுக்கு இது காற்றை கடத்துகிறது.

கவர்ச்சிகரமான சூப்பர் கார்... லம்போர்கினி ஹூராகேன் எவோ ஆர்டபிள்யூடி ஸ்பைடர் ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ...

இந்த காற்று குழாய்களில், ஹூராகேன் எவோ ரியர் வீல் டிரைவ் லோகோ இடம்பெற்றுள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் சூப்பர்ஸ்போர்ட் எக்ஸாஸ்ட், கவர்ச்சியாக காட்சியளிக்கிறது. இதன் சப்தமும் மிக அருமையாக உள்ளது. எக்ஸாஸ்ட் சிஸ்டம் அக்ராபோவிக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டிருக்கலாம். இது மிகவும் பிரபலமான எக்ஸாஸ்ட் சிஸ்டம் உற்பத்தியாளராகும்.

கவர்ச்சிகரமான சூப்பர் கார்... லம்போர்கினி ஹூராகேன் எவோ ஆர்டபிள்யூடி ஸ்பைடர் ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ...

இதன் எக்ஸாஸ்ட் சிஸ்டம், இலகுவாகவும், அதிக சப்தமாகவும் இருக்கும். அத்துடன் பவரையும் அதிகரிக்கும். இந்த காரின் சாஃப்ட் டாப் மேற்கூரையை 17 வினாடிகளுக்கு உள்ளாகவே திறந்து விட முடியும். அத்துடன் மணிக்கு 50 கிலோ மீட்டர்கள் வரையிலான வேகத்தில் செல்லும்போது இயக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கவர்ச்சிகரமான சூப்பர் கார்... லம்போர்கினி ஹூராகேன் எவோ ஆர்டபிள்யூடி ஸ்பைடர் ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ...

காக்பிட் & இன்டீரியர்

லம்போர்கினி ஹூராகேன் எவோ ரியர் வீல் டிரைவ் ஸ்பைடர் சூப்பர் காரின் உட்புறத்தில், 8.4 இன்ச் எச்எம்ஐ டச்ஸ்க்ரீன் வழங்கப்பட்டுள்ளது. டெலிபோன் அழைப்புகள், இன்டர்நெட் மற்றும் ஆப்பிள் கார்பிளே ஆகிய வசதிகளை இது வழங்குகிறது. அதே சமயத்தில் இருக்கைகள் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில், சிகப்பு நிற தையல் வேலைப்பாடுகளையும் காண முடிகிறது.

கவர்ச்சிகரமான சூப்பர் கார்... லம்போர்கினி ஹூராகேன் எவோ ஆர்டபிள்யூடி ஸ்பைடர் ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ...

நீங்கள் எந்த நிறத்தில் விரும்பினாலும், அந்த நிற தையல் வேலைப்பாடுகள் வழங்கப்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதேபோல் வெளிப்புறத்திற்கு சுமார் 300 வண்ண தேர்வுகள் உள்ளன. இதில், ஒன்றை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். கேபினின் மற்ற பாகங்களை போல், ஸ்டியரிங் வீலும் லெதர் மற்றும் அல்காண்ட்ராவால் சுற்றப்பட்டுள்ளது.

கவர்ச்சிகரமான சூப்பர் கார்... லம்போர்கினி ஹூராகேன் எவோ ஆர்டபிள்யூடி ஸ்பைடர் ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ...

இன்ஜின் & டிரான்ஸ்மிஷன்

லம்போர்கினி ஹூராகேன் எவோ ரியர் வீல் டிரைவ் ஸ்பைடர் காரில், 5.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் வி10 இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்மில் 602 பிஎச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 560 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் என்ற வேகத்தை வெறும் 3.5 வினாடிகளில் இந்த கார் எட்டி விடும்.

அதே நேரத்தில் மணிக்கு அதிகபட்சமாக 324 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும். அலுமினியம் மற்றும் கார்பன் ஃபைபர் மூலம் இந்த காரின் இலகுவான ஹைப்ரிட் சேஸிஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மீது அலுமினியம் மற்றும் தெர்மோபிளாஸ்டிக் பாடி கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் எடை 1,509 கிலோ ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கவர்ச்சிகரமான சூப்பர் கார்... லம்போர்கினி ஹூராகேன் எவோ ஆர்டபிள்யூடி ஸ்பைடர் ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ...

லம்போர்கினி ஹூராகேன் எவோ ஆர்டபிள்யூடி ஸ்பைடர் சூப்பர் காரில், பைரெலி பி ஜீரோ டயர்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. 20 இன்ச் ரிம்கள் மற்றும் கார்பன்-செராமிக் பிரேக்குகள் ஆப்ஷனலாக வழங்கப்படுகின்றன. இந்த காரின் உரிமையாளர் மிகவும் சிறப்பான முறையில் கஸ்டமைஸ் செய்திருக்கிறார்.

ஆனால் உட்புறம் மற்றும் வெளிப்புறத்திற்கு நீங்கள் என்ன வண்ணம் தேர்வு செய்துள்ளீர்கள்? என்னென்ன வழிகளில் கஸ்டமைஸ் செய்துள்ளீர்கள்? என்பதெல்லாம் ஒரு விஷயமே கிடையாது. ஏனெனில் இது லம்போர்கினி. சாலையில் நிச்சயமாக அனைத்து தலைகளும் திரும்பி பார்க்கும்!

Most Read Articles

English summary
Lamborghini Huracan Evo RWD Spyder First Look Review: Design, Interiors, Engine, Transmission, Price. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X