புதிய லம்போர்கினி ஹூராக்கன் எவோ காரின் இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!! எப்போது தெரியுமா?

லம்போர்கினி ஹூராக்கன் எவோ பின்சக்கர-ட்ரைவ் ஸ்பைடர் காரின் இந்திய அறிமுகம் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய லம்போர்கினி ஹூராக்கன் எவோ காரின் இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!! எப்போது தெரியுமா?

இந்தியாவில் ஹூராக்கன் எவோ காரின் வேரியண்ட்கள் வரிசையை அதன் விலைமிக்க பின்சக்கர-ட்ரைவ் ஸ்பைடர் வேரியண்ட் உடன் விரிவுப்படுத்த லம்போர்கினி நிறுவனம் தயாராகி வருகிறது.

புதிய லம்போர்கினி ஹூராக்கன் எவோ காரின் இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!! எப்போது தெரியுமா?

இந்த புதிய லம்போர்கினி ஹூராக்கன் கார் வருகிற ஜூன் 8ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஹீராக்கன் எவோ பின்சக்கர ட்ரைவ் கார் சர்வதேச சந்தைகளில் கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

புதிய லம்போர்கினி ஹூராக்கன் எவோ காரின் இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!! எப்போது தெரியுமா?

கிட்டத்தட்ட ஹூராக்கனின் பின்சக்கர-ட்ரைவ் கூபே காரின் தோற்றத்தை பெற்றுவரும் இந்த புதிய வேரியண்ட், அதேநேரம் ஸ்டைலில் அனைத்துசக்கர-ட்ரைவ் வேரியண்ட்டில் இருந்து சற்று வித்தியாசப்படும்.

புதிய லம்போர்கினி ஹூராக்கன் எவோ காரின் இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!! எப்போது தெரியுமா?

அதாவது, புதிய முன்பக்க ஸ்பிளிட்டர், பிரத்யேகமான பின்பக்க டிஃப்யூஸர் மற்றும் புதிய பின்பக்க பம்பர் உள்ளிட்டவற்றை இந்த புதிய ஸ்பைடர் வேரியண்ட் பெற்றுவரவுள்ளது. ஆனால் காற்று இயக்கவியலை மேம்படுத்தும் வகையிலான அனைத்து-சக்கர-ட்ரைவ் மாடலின் முட்டுச்சுவர்-டிசைன் இந்த புதிய வேரியண்ட்டிலும் தொடரப்பட்டிருக்கும்.

புதிய லம்போர்கினி ஹூராக்கன் எவோ காரின் இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!! எப்போது தெரியுமா?

பின்சக்கர-ட்ரைவ் கூபேவை காட்டிலும் ஸ்பைடர் வேரியண்ட்டின் எடை கிட்டத்தட்ட 120 கிலோ அதிகமாக இருக்கும். இந்த கூடுதல் எடைக்கு, தோற்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மேம்பாடுகள் மற்றும் மேற்கூரையை திறந்து மூடுவதற்கு வழங்கப்படும் இயந்திரவியல் முறையே காரணங்களாகும்.

புதிய லம்போர்கினி ஹூராக்கன் எவோ காரின் இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!! எப்போது தெரியுமா?

ஒரு தொடுதல் மூலமாக திறந்து மூடக்கூடிய மேற்கூரை, திறப்பதற்கு 17 நொடிகளை எடுத்து கொள்கிறது. உட்புற கேபின் கிட்டத்தட்ட ஹூராக்கன் பின்சக்கர-ட்ரைவ் கூபே காரையே ஒத்து காணப்படும். அதேபோல் இவற்றில் வழங்கப்படும் என்ஜின் தேர்விலும் எந்த மாற்றமும் இருக்காது.

புதிய லம்போர்கினி ஹூராக்கன் எவோ காரின் இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!! எப்போது தெரியுமா?

இந்த வகையில் புதிய பின்சக்கர-ட்ரைவ் ஸ்பைடர் வேரியண்ட்டில் பொருத்தப்படுகின்ற வழக்கமான 5.2 லிட்டர், நேச்சுரலி-அஸ்பிரேட்டட் வி10 பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 610 எச்பி மற்றும் 560 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

புதிய லம்போர்கினி ஹூராக்கன் எவோ காரின் இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!! எப்போது தெரியுமா?

இது ஹூராக்கன் எவோ காரின் அனைத்து-சக்கர-ட்ரைவ் வேரியண்ட்டை காட்டிலும் 30 எச்பி மற்றும் 40 என்எம் டார்க் திறன் குறைவாகும். இந்த வி10 பெட்ரோல் என்ஜின் உடன் 7-ஸ்பீடு இரட்டை-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

புதிய லம்போர்கினி ஹூராக்கன் எவோ காரின் இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!! எப்போது தெரியுமா?

ஹூராக்கன் எவோ பின்சக்கர-ட்ரைவ் ஸ்பைடர் வேரியண்ட்டில் 0-வில் இருந்து 100kmph வேகத்தை 3.5 வினாடிகளில் எட்டிவிட முடியும். அதுவே இத்தகைய வேகத்தை பின்சக்கர-ட்ரைவ் கூபே மாடலில் 0.2 வினாடி முன்னதாகவே 3.3 வினாடிகளில் எட்டிவிட முடியும்.

புதிய லம்போர்கினி ஹூராக்கன் எவோ காரின் இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!! எப்போது தெரியுமா?

அதேபோல் இந்த ஸ்பைடர் வேரியண்ட்டின் டாப் ஸ்பீடு 324kmph, இதன் கூபே வெர்சனின் டாப் ஸ்பீடு 325kmph ஆகும். இருப்பினும் இந்தியாவில் விற்பனையில் உள்ள ஹூராக்கன் எவோ பின்சக்கர-ட்ரைவ் கூபே காரை (ரூ.3.22 கோடி) காட்டிலும் புதிய ஸ்பைடர் வேரியண்ட்டின் விலை சற்று அதிகமாகவே நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

Most Read Articles

English summary
Lamborghini Huracan Evo RWD Spyder India launch on June 8.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X