லம்போர்கினியின் ஹூராகென் எஸ்டிஒ!! ரூ.4.99 கோடி விலையில் இந்தியாவில் அறிமுகம்!!

லம்போர்கினி ஹூராகென் எஸ்டிஒ இந்தியாவில் ரூ.4.99 கோடி என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய லம்போர்கினி ஹூராகென் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

லம்போர்கினியின் ஹூராகென் எஸ்டிஒ!! ரூ.4.99 கோடி விலையில் இந்தியாவில் அறிமுகம்!!

லம்போர்கினி ஹூராகென் எஸ்டிஒ, எஸ்டிஒ என்பதன் விரிவாக்கம் சூப்பர் ட்ராஃபியோ ஓமோலோகாட்டா, இத்தாலிய வார்த்தைகள். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உலகளவில் வெளியிடப்பட்ட ஹூராகென் எஸ்டிஒ, லம்போர்கினி பிராண்டின் வி10 பந்தய காரான ஹூராகென் ஜிடி3-இன் ரோடு-லீகல் வெர்சன் ஆகும்.

லம்போர்கினியின் ஹூராகென் எஸ்டிஒ!! ரூ.4.99 கோடி விலையில் இந்தியாவில் அறிமுகம்!!

ஹூராகென் எவோ மாடலில் வழங்கப்படும் அதே 5.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் வி10 என்ஜின் தான் இந்த எஸ்டிஒ மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 640 பிஎச்பி மற்றும் 565 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 7-ஸ்பீடு இரட்டை-க்ளட்ச் லம்போர்கினி டோப்பியா க்ளட்ச் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

லம்போர்கினியின் ஹூராகென் எஸ்டிஒ!! ரூ.4.99 கோடி விலையில் இந்தியாவில் அறிமுகம்!!

இந்த டிரான்ஸ்மிஷனின் வாயிலாக ஆற்றலை என்ஜின் காரின் பின் சக்கரங்களுக்கு வழங்குகிறது. ஆனால் மற்ற லம்போர்கினி ஹூராகென் கார்களில் ஆற்றல் அனைத்து சக்கரங்களுக்கும் வழங்கப்படுகிறது. இருப்பினும் ஹூராகென் எஸ்டிஒ-வில் 100kmph வேகத்தை வெறும் 3 வினாடிகளில் எட்டிவிடலாம்.

லம்போர்கினியின் ஹூராகென் எஸ்டிஒ!! ரூ.4.99 கோடி விலையில் இந்தியாவில் அறிமுகம்!!

அதேபோல் 9 வினாடிகளில் மணிக்கு 200கிமீ வேகத்தை அடைந்துவிடலாம். ஹூராகென் எஸ்டிஒ காரின் டாப் ஸ்பீடு 310kmph ஆகும். 75 சதவீத பாகங்கள் கார்பன் ஃபைபரால் தயாரிக்கப்படுவதால் ஹூராகென் எவோ-வை காட்டிலும் புதிய எஸ்டிஒ காரின் எடை கிட்டத்தட்ட 43 கிலோ குறைவு.

லம்போர்கினியின் ஹூராகென் எஸ்டிஒ!! ரூ.4.99 கோடி விலையில் இந்தியாவில் அறிமுகம்!!

அதுமட்டுமில்லாமல் லம்போர்கினியின் மோட்டார்ஸ்போர்ட் பிரிவான ஸ்குவாட்ரா கோர்ஸ் மற்றும் அலங்கரிப்பு துறைகள் கூட்டு சேர்ந்து உருவாக்கிய வாகனமான ஹூராகென் எஸ்டிஒ-வில் ஜன்னல் கண்ணாடிகளும் 30 சதவீதம் எடை குறைவானவைகளாக உள்ளன.

லம்போர்கினியின் ஹூராகென் எஸ்டிஒ!! ரூ.4.99 கோடி விலையில் இந்தியாவில் அறிமுகம்!!

மாங்கனீசால் உருவாக்கப்பட்ட சக்கரங்களும் கார் இலகுவாக இருப்பதற்கு காரணமாக இருக்கின்றன. முன்பக்க பொனெட்டில் என்ஜினிற்கு காற்றை வழங்க புதிய குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இவை கூடுதல் கீழ்நோக்கிய அழுத்தலை வழங்கக்கூடியவைகளாக விளங்குகின்றன.

லம்போர்கினியின் ஹூராகென் எஸ்டிஒ!! ரூ.4.99 கோடி விலையில் இந்தியாவில் அறிமுகம்!!

இவற்றினால் எஸ்டிஒ காரில் காற்று இயக்கவியல் பண்பும், கீழ்நோக்கிய அழுத்தலும் ஹூராகென் எவோவை விட சிறப்பானதாக இருக்கும். இதன் முன்பகுதியில் அனைத்து பாகங்களும் ஒரே மரப்பலகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த எஸ்டிஒ காரின் பின்பக்கத்தில் மிக பெரிய, தேவைக்கு ஏற்றாற்போல் சரிச்செய்து கொள்ளக்கூடிய விங் வழங்கப்பட்டுள்ளது.

லம்போர்கினியின் ஹூராகென் எஸ்டிஒ!! ரூ.4.99 கோடி விலையில் இந்தியாவில் அறிமுகம்!!

பம்பரும் சற்று திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இரட்டை-எக்ஸாஸ்ட் குழாய் உள்ளன. எஸ்டிஒ, மழை மற்றும் கோப்பை என்ற மூன்று விதமான டிரைவிங் மோட்களுடன் உள்ள இந்த காரில் ப்ரெம்போ சிசிஎம்-ஆர் கார்பன் பீங்கான் ப்ரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

லம்போர்கினியின் ஹூராகென் எஸ்டிஒ!! ரூ.4.99 கோடி விலையில் இந்தியாவில் அறிமுகம்!!

அப்படியே உட்புறத்திற்கு சென்று அமரும்போதே முதலில் நம்மை கார்பன்-ஃபைபர் இருக்கைகளும், நான்கு-புள்ளி சீட் பெல்ட்களும் நம்மை வசீகரித்து விடுகின்றன. கார்பன் ஃபைபர் பாகங்களை காரின் கேபின் முழுவதும் ஆங்காங்கே காண முடிகிறது.

லம்போர்கினியின் ஹூராகென் எஸ்டிஒ!! ரூ.4.99 கோடி விலையில் இந்தியாவில் அறிமுகம்!!

இவ்வளவு ஏன் கீழ் தரையில் கூட கொடுத்துள்ளனர். அல்காண்ட்ரா உள்ளமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள எஸ்டிஒ காரின் கேபினை பிராண்டின் அட் தனிப்பயனாக்கல் பிரிவின் உதவியுடன் உங்களது விருப்பத்திற்கு ஏற்ப கஸ்டமைஸ்ட் செய்தும் கொள்ளலாம்.

Most Read Articles

English summary
Lamborghini Huracan STO Launched In India At Price Rs.4.99 Crore.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X