லம்போர்கினியின் கடைசி அவெண்டடோர் கார்!! அவெண்டடோர் அல்டிமே வெளியீடு!

லம்போர்கினி நிறுவனம் அதன் இறுதி அவெண்டடோர் மாடலை, 'அவெண்டடோர் அல்டிமே' என்கிற பெயரில் வெளியிட்டுள்ளது. இந்த இறுதி லம்போர்கினி அவெண்டடோர் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

லம்போர்கினியின் கடைசி அவெண்டடோர் கார்!! அவெண்டடோர் அல்டிமே வெளியீடு!

கடைசி அவெண்டடோர் கார் என்பதால் தொழிற்நுட்ப களஞ்சியமாக லம்போர்கினி நிறுவனம் அவெண்டடோர் அல்டிமே காரை உருவாக்கியுள்ளது. இதன் என்ஜினில் இருந்து ஆரம்பிப்போம்.

லம்போர்கினியின் கடைசி அவெண்டடோர் கார்!! அவெண்டடோர் அல்டிமே வெளியீடு!

இதில் வழக்கமான 6.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தான் 7-ஸ்பீடு சிங்கிள்-க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் உடன் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இது தற்போது அதிகப்பட்சமாக 769 பிஎச்பி மற்றும் 720 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளது.

லம்போர்கினியின் கடைசி அவெண்டடோர் கார்!! அவெண்டடோர் அல்டிமே வெளியீடு!

அதுமட்டுமின்றி இந்த அவெண்டடோர் காரின் எடையிலும் லம்போர்கினி பொறியியலாளர்கள் பணியாற்றி இருப்பது இதன் எடை வெறும் 1,550 கிலோ எனும் தெரியும்போது அறிய முடிகிறது. இது அவெண்டடோர் எஸ் காரை காட்டிலும் 25 கிலோ குறைவாகும்.

லம்போர்கினியின் கடைசி அவெண்டடோர் கார்!! அவெண்டடோர் அல்டிமே வெளியீடு!

அதுமட்டுமில்லாமல், இதன் மூலம் அவெண்டடோர் எஸ்விஜே காருக்கு இணையான ஆற்றல்-எடை விகிதத்தை புதிய அவெண்டடோர் அல்டிமே பெற்றுள்ளது. முன்பக்கத்தில் காற்று இயக்கவியலுக்கு இணக்கமாக பிரிப்பான் வழங்கப்பட்டுள்ளது.

லம்போர்கினியின் கடைசி அவெண்டடோர் கார்!! அவெண்டடோர் அல்டிமே வெளியீடு!

பின்பக்கத்தில் பெரிய டிஃப்யூஸர் மற்றும் எக்ஸாஸ்ட் அமைப்பு அப்படியே லம்போர்கினி அவெண்டடோர் எஸ்.வி.ஜே காரில் இருந்து தொடரப்பட்டுள்ளன. இவற்றுடன் 4-சக்கர ஸ்டேரிங் மற்றும் மூன்று வெவ்வேறான நிலைகளுடன் ஆக்டிவ் ரியர் ஸ்பாய்லரும் புதிய அவெண்டடோர் அல்டிமே காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

லம்போர்கினியின் கடைசி அவெண்டடோர் கார்!! அவெண்டடோர் அல்டிமே வெளியீடு!

இந்த கடைசி அவெண்டடோர் காரில் சக்கரங்களை வாடிக்கையாளர்கள் அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப 20 இன்ச்சிலோ அல்லது 21 இன்ச்சிலோ பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூப்பர் லம்போர்கினி காரின் உட்புறத்தில் தனிப்பயனாக்கல் டிஎஃப்டி டிஜிட்டல் ஓட்டுனர் திரை வழங்கப்பட்டுள்ளது.

லம்போர்கினியின் கடைசி அவெண்டடோர் கார்!! அவெண்டடோர் அல்டிமே வெளியீடு!

இதனுடன் டேஸ்போர்டை, ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் குரல் கட்டளை வசதியையும் கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் பகிர்ந்து கொண்டுள்ளது. லம்போர்கினி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 350 கூபேக்கள் மற்றும் 250 ரோட்ஸ்டர் வெர்சன்களில் புதிய அவெண்டடோர் அல்டிமே கார் உருவாக்கப்பட உள்ளது.

லம்போர்கினியின் கடைசி அவெண்டடோர் கார்!! அவெண்டடோர் அல்டிமே வெளியீடு!

இதை ஏன் கடைசி அவெண்டடோர் கார் என சொல்கிறோம் என்றால், லம்போர்கினி நிறுவனம் அவெண்டடோரின் இடத்திற்கு ஹைப்ரீட் மற்றும் முழு எலக்ட்ரிக் கார்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. கடைசி அவெண்டடோர் என்பதால் அல்டிமே காரை பலர் நினைவாக வாங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Lamborghini has made the final iteration of the Aventador, its long-standing flagship supercar, before putting an end to the production of the legendary supercar. This final iteration is named 'Lamborghini Aventador Ultimae'.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X