Just In
- 1 hr ago
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- 3 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 5 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 5 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
Don't Miss!
- News
அமெரிக்க கேபிடல் கலவரத்தன்று புடினுடன் டிரம்ப் பேசியிருப்பார்... அலைபேசி பதிவை பார்க்க ஆவல் -ஹிலாரி
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நகர்புற சாலையா இருந்தாலும் சரி, ஆஃப்-ரோடு சாலையா இருந்தாலும் சரி, இது கெத்தானது! லம்போர்கினியின் உருஸ் எஸ்யூவி
உலகின் பிரபல ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பு நிறுவனமான லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் ரக கார்களை தாண்டி புதிய எஸ்யூவி மாடலை தயாரிக்கவுள்ளோம் என கூறியபோது பெரும்பாலான லம்போர்கினி ரசிகர்களுக்கு அது ஷாக்கிங் நியுஸாக இருந்தது.

அப்போதுதான் உலகளவில் எஸ்யூவி கார்கள் வேகமாக பிரபலமாகி வந்ததால் லம்போர்கினி நிறுவனமும் அந்த வழியில் சென்றது. லம்போர்கினி நிறுவனம் உருஸ் காரை 2018ஆம் ஆண்டிற்காக டிசம்பர் 2017ல் அறிமுகப்படுத்தியது.

லம்போர்கினி பிராண்டில் இருந்து எஸ்யூவி கார் என்ற உடனே உலக வாடிக்கையாளர்கள் மத்தியில் வேகமாக பிரபலமான உருஸ் அறிமுகமாகி கிட்டத்தட்ட 3 வருடங்களாகிவிட்டதால் தற்போது இது பழைய காராகிவிட்டது என்பதை ஒத்து கொண்டுதான் ஆக வேண்டும்.

இருப்பினும் இந்த எஸ்யூவி காரை விளம்பரப்படுத்தும் நோக்கில் புதிய ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. உருஸின் தயாரிப்பு பணிகளில் 10,000 யூனிட்களை கடந்துவிட்டதாக லம்போர்கினி நிறுவனம் கடந்த 2020 ஜூலை மாதத்தில் அறிவித்திருந்தது.
இந்த புதிய ப்ரோமோ வீடியோ இந்த எஸ்யூவி காரின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் கார் முழுக்க முழுக்க ரஷ்யாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் ரேஸ் ட்ராக்கில் கார் இயங்குவதுபோல் காட்டப்படுகிறது.

அதன்பின் ஆளே இல்லாத கரடுமுரடான சாலைகளை கொண்ட ஆஃப்-ரோடில் இயங்குவதுபோல் காட்டப்பட்டு கடைசியாக நகர்புற சாலைகளுக்கு உருஸ் கார் கொண்டுவரப்பட்டுள்ளது. 1:39 நிமிடம் ஓடக்கூடியதாக உள்ள இந்த வீடியோவில் கார் எப்போதும் ஆக்ரோஷமாக இயங்குவது போன்றே காட்டப்பட்டுள்ளது.

‘லம்போர்கினி உருஸ்- அனைத்து சாலையும் இதன் சாலையே' என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவிற்கு கீழே, "நீங்கள் எந்த சாலைக்கும் செல்லும்போது, உலகிற்கு வரம்பு இல்லை. இது தனித்துவமான ஒன்றாக மாறும், உருஸ் மட்டுமே உங்களை அவ்வாறு உணர வைக்கும்.

நகரத்தில், இயற்கையின் மத்தியில் அல்லது பந்தயத்தில் நீங்கள் எங்கிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல: நீங்கள் பெறும் அனுபவம் நம்பமுடியாதது " என்ற கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளன. உருஸ் எஸ்யூவி காரில் 4.0 லிட்டர் இரட்டை-டர்போ வி8 என்ஜினை லம்போர்கினி நிறுவனம் பொருத்துகிறது.

அதிகப்பட்சமாக 6,000 ஆர்பிஎம்-ல் 650 பிஎஸ் மற்றும் 2,250- 4,500 ஆர்பிஎம்-ல் 850 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜினின் உதவியுடன் உருஸ் காரை அதிகப்பட்சமாக 305kmph வேகத்தில் இயக்க முடியும்.

0-வில் இருந்து 100kmph வேகத்தை இந்த கார் வெறும் 3.6 வினாடிகளில் எட்டிவிடக்கூடியது. லம்போர்கினி நிறுவனம் உருஸ் எஸ்யூவி காரை ரூ.3.10 கோடி என்ற ஆரம்ப விலையில் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது.