உற்பத்தியில் புதிய மைல்கல்லை தொட்டு அசத்திய லம்போர்கினி உரூஸ் எஸ்யூவி!

உலக அளவில் லம்போர்கினி உரஸ் எஸ்யூவிக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. இதனால், தற்போது உற்பத்தியில் மேலும் ஒரு புதிய மைல்கல்லை தொட்டு அசத்தி உள்ளது.

உற்பத்தியில் புதிய மைல்கல்லை தொட்டு அசத்திய லம்போர்கினி உரூஸ் எஸ்யூவி!

சூப்பர் கார் மார்க்கெட்டில் லம்போர்கினி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு பெருமதிப்பு இருந்து வருகிறது. மேலும், கோடீஸ்வரர்களின் கனவு பிராண்டாகவும் மதிப்பை பெற்றுள்ளது. சூப்பர் கார்கள் மூலமாக வாடிக்கையாலர்களின் மனதில் சிம்மாசனம் போட்டிருக்கும் உரூஸ் என்ற சூப்பர் எஸ்யூவி மூலமாக தனது ஆதிக்கத்தை அதிகப்படுத்திக் கொண்டுள்ளது.

உற்பத்தியில் புதிய மைல்கல்லை தொட்டு அசத்திய லம்போர்கினி உரூஸ் எஸ்யூவி!

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட அனைத்து நாடுகளிலும் உரூஸ் எஸ்யூவிக்கு பெரிய அளவிலான வரவேற்பு இருக்கிறது. இந்தியாவிலும் அதிகம் விற்பனையாகும் சூப்பர் லக்சுரி எஸ்யூவி மாடலாக மாறி இருக்கிறது. இதனால், லம்போர்கினி உரூஸ் எஸ்யூவியின் உற்பத்தியும் புதிய மைல்கற்களை தொட்டு சாதனை படைத்து வருகிறது.

உற்பத்தியில் புதிய மைல்கல்லை தொட்டு அசத்திய லம்போர்கினி உரூஸ் எஸ்யூவி!

அந்த வகையில், லம்போர்கினி உரூஸ் எஸ்யூவி உற்பத்தியில் 15,000 யூனிட்டுகள் என்ற புதிய எண்ணிக்கையை தொட்டு அசத்தி இருக்கிறது. உற்பத்தி பிரிவிலிருந்து வந்த 15,000-வது யூனிட் லம்போர்கினி உரூஸ் எஸ்யூவி இங்கிலாந்தை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவருக்கு டெலிவிரி கொடுக்கப்பட உள்ளது.

உற்பத்தியில் புதிய மைல்கல்லை தொட்டு அசத்திய லம்போர்கினி உரூஸ் எஸ்யூவி!

லம்போர்கினி உரூஸ் எஸ்யூவியின் 15,000வது யூனிட் கிரிகோ கெரெஸ் மேட் என்ற விசேஷ வண்ணத்தில் வெர்தே ஸ்கான்டல் அலங்கார அம்சங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த உரூஸ் எஸ்யூவியின் இன்டீரியர் இரட்டை வண்ணங்களில் நெரோ அடே மற்றும் வெர்தே ஸ்கான்டல் என்ற அலங்கார அம்சங்களுடன் கவர்கிறது.

உற்பத்தியில் புதிய மைல்கல்லை தொட்டு அசத்திய லம்போர்கினி உரூஸ் எஸ்யூவி!

லம்போர்கினி உரூஸ் எஸ்யூவி கடந்த 2017ம் ஆண்டு டிசம்பரில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. அதைத்தொடர்ந்து லம்போர்கினி நிறுவனத்தின் விற்பனை இருமடங்கு உயர்ந்தது. இந்தியாவிலும் லம்போர்கினி எஸ்யூவியின் விற்பனை மிகச் சிறப்பாக இருந்து வருகிறது.

உற்பத்தியில் புதிய மைல்கல்லை தொட்டு அசத்திய லம்போர்கினி உரூஸ் எஸ்யூவி!

லம்போர்கினி கார்களுக்கு உரித்தான மிரட்டலான தோற்றத்திலும், 4.0 லிட்டர் ட்வின் டர்போ கொண்ட வி8 எஞ்சின் தேர்வில் கிடைக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 641 பிஎச்பி பவரையும், 850 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது.

உற்பத்தியில் புதிய மைல்கல்லை தொட்டு அசத்திய லம்போர்கினி உரூஸ் எஸ்யூவி!

இந்தியாவில் லம்போர்கினி உரூஸ் எஸ்யூவி ரூ.3.10 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

உற்பத்தியில் புதிய மைல்கல்லை தொட்டு அசத்திய லம்போர்கினி உரூஸ் எஸ்யூவி!

லம்போர்கினி உரூஸ் எஸ்யூவிக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வரவேற்பை கருத்தில்கொண்டு, உற்பத்திப் பிரிவானது 80,000 சதுர மீட்டரில் இருந்து 1.60 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதாக விரிவாக்கம் செய்யப்பட்டது. லம்போர்கினி உரூஸ் எஸ்யூவி உற்பத்திக்காக தனி உற்பத்திப் பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு திறனுடன் கூடிய விசேஷ வர்ணப் பூச்சும் பிரிவும் லம்போர்கினி உரூஸ் எஸ்யூவிக்கு உள்ளது.

Most Read Articles

English summary
Lamborghini Urus SUV has achieved new milestone in production and the production cross 15,000 units. This makes the performance SUV the best-selling model in the brand's history. Read in Tamil.
Story first published: Wednesday, July 21, 2021, 18:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X