லம்போர்கினி உருஸ் எஸ்யூவிக்கு இந்தியாவில் பல மாதங்கள் வெயிட்டிங் பீரியட்!

லம்போர்கினி உருஸ் எஸ்யூவிக்கு இந்தியாவில் வலுவான விற்பனை இருந்து வருகிறது. இதனால், காத்திருப்பு காலமும் பல மாதங்கள் நீண்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

லம்போர்கினி உருஸ் எஸ்யூவிக்கு இந்தியாவில் பல மாதங்கள் வெயிட்டிங் பீரியட்!

எஸ்யூவி கார்களுக்கு இந்தியர்கள் வலுவான வர்த்தகம் உள்ளது. அந்த வகையில், பட்ஜெட் எஸ்யூவி மாடல்கள் முதல் சூப்பர் ரக எஸ்யூவி வரை பெரிய அளவிலான வரவேற்பை வாடிக்கையாளர்கள் மத்தியில் பெற்றுள்ளன. அந்த வகையில், லம்போர்கினி உருஸ் எஸ்யூவிக்கு இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.

லம்போர்கினி உருஸ் எஸ்யூவிக்கு இந்தியாவில் பல மாதங்கள் வெயிட்டிங் பீரியட்!

கடந்த 2018ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது முதல் லம்போர்கினி உருஸ் எஸ்யூவி சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது. அறிமுகம் செய்யப்பட்ட முதல் சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு 65 யூனிட்டுகள் விற்பனையாகி அசர வைத்தது.

லம்போர்கினி உருஸ் எஸ்யூவிக்கு இந்தியாவில் பல மாதங்கள் வெயிட்டிங் பீரியட்!

இதையடுத்து, கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பிரச்னையால் விற்பனையில் சிறிய தடங்கல் ஏற்பட்டது. எனினும், கடந்த ஆண்டு கொரோனாவுக்கு மத்தியிலும் 52 லம்போர்கினி உருஸ் எஸ்யூவிகள் இந்தியாவில் விற்பனையாகி உள்ளன. இது மிகவும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையாக கருத முடிகிறது.

லம்போர்கினி உருஸ் எஸ்யூவிக்கு இந்தியாவில் பல மாதங்கள் வெயிட்டிங் பீரியட்!

இந்த நிலையில், லம்போர்கினி இந்தியா தலைவர் ஷரத் அகர்வால் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில்,"உருஸ் எஸ்யூவிக்கு இந்தியாவில் மிக வலுவான சந்தை உள்ளது.

லம்போர்கினி உருஸ் எஸ்யூவிக்கு இந்தியாவில் பல மாதங்கள் வெயிட்டிங் பீரியட்!

கடந்த ஆண்டு லம்போர்கினி உருஸ் எஸ்யூவியில் சில புதிய வேரியண்ட்டுகளையும் கொண்டு வந்தோம். அனைத்து வேரியண்ட்டுகளுக்கும் சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது.

லம்போர்கினி உருஸ் எஸ்யூவிக்கு இந்தியாவில் பல மாதங்கள் வெயிட்டிங் பீரியட்!

இதனால், இந்த ஆண்டு காத்திருப்பு காலம் மேலும் அதிகரிக்கும் என்று நம்புகிறோம். தற்போதைய நிலையில் 8 முதல் 9 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் வரை இருக்கிறது," என்று தெரிவித்துள்ளார்.

லம்போர்கினி உருஸ் எஸ்யூவிக்கு இந்தியாவில் பல மாதங்கள் வெயிட்டிங் பீரியட்!

சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு முதல் நிலை நகரங்கள் மட்டுமின்றி, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் நல்ல வர்த்தக வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

லம்போர்கினி உருஸ் எஸ்யூவிக்கு இந்தியாவில் பல மாதங்கள் வெயிட்டிங் பீரியட்!

லம்போர்கினி உருஸ் எஸ்யூவி வடிவமைப்பு, செயல்திறன் மிக்க எஞ்சின், தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் விலை என அனைத்திலும் கோடீஸ்வர வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை கச்சிதமாக பூர்த்தி செய்து வருகிறது.

லம்போர்கினி உருஸ் எஸ்யூவிக்கு இந்தியாவில் பல மாதங்கள் வெயிட்டிங் பீரியட்!

லம்போர்கினி உருஸ் எஸ்யூவியில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 650 எச்பி பவரையும், 850 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. 2.2 டன் எடை கொண்ட இந்த எஸ்யூவியை இதன் எஞ்சின் 0 - 100 கிமீ வேகத்தை 3.6 வினாடிகளில் எட்டிவிடும்.

லம்போர்கினி உருஸ் எஸ்யூவிக்கு இந்தியாவில் பல மாதங்கள் வெயிட்டிங் பீரியட்!

புதிய லம்போர்கினி உருஸ் எஸ்யூவி இந்தியாவில் ரூ.3.10 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பென்ட்லீ பென்டைகா மற்றும் போர்ஷே கேயென் எஸ்யூவி மாடல்கள் இதன் போட்டியாளர்களாக கருதப்படுகிறது.

Most Read Articles

English summary
According to official, Lamborghini Urus has strong waiting period In India.
Story first published: Monday, January 4, 2021, 13:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X