44 டன்னில் ஒரு லாரி, 7 எஸ்யூவி கார்கள்... லேண்ட்ரோவர் டிஃபெண்டர் கார் எப்படிபட்டது என்ற கேள்விக்கான விடை இதோ!!

பார்ப்பவர்கள் யாராலும் எளிதில் நம்ப முடியாத நிகழ்வொன்று நடந்துள்ளது, அதாவது 7 எஸ்யூவி கார்களை சுமந்து நிற்கும் 44 டன் எடை உடைய லாரி ஒன்றினை ஒற்றை வாகனமாக லேண்ட் ரோவர் கார் ஒன்று இழுத்து சென்றுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள வீடியோவினை இந்த செய்தியில் பார்ப்போம்.

44 டன்னில் ஒரு லாரி, 7 எஸ்யூவி கார்கள்... லேண்ட்ரோவர் டிஃபெண்டர் கார் எப்படிபட்டது என்ற கேள்விக்கான விடை இதோ!!

லேண்ட் ரோவர் டிஃபென்டர் எஸ்யூவிகளின் கடினமான நிலப்பரப்பை சமாளிக்கும் திறன் அல்லது எடையை இழுக்கக்கூடிய திறன்களைப் பற்றி ஏதேனும் சந்தேகம் இருந்தால், அவர்கள் இந்த நிகழ்வை பார்த்து தங்களது சந்தேகத்தை தீர்த்து கொள்ளலாம்.

44 டன்னில் ஒரு லாரி, 7 எஸ்யூவி கார்கள்... லேண்ட்ரோவர் டிஃபெண்டர் கார் எப்படிபட்டது என்ற கேள்விக்கான விடை இதோ!!

இந்த நிகழ்வினை வீடியோவாக பிரிட்டிஷ் கார் தயாரிப்பு நிறுவனமான லேண்ட் ரோவர் அதன் சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து கொண்டுள்ளது. டிஃபெண்டரின் எடையை காட்டிலும் இழுக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை சுமார் 10 மடங்கு அதிகமாக நிச்சயம் இருக்கும்.

44 டன்னில் ஒரு லாரி, 7 எஸ்யூவி கார்கள்... லேண்ட்ரோவர் டிஃபெண்டர் கார் எப்படிபட்டது என்ற கேள்விக்கான விடை இதோ!!

அதுமட்டுமில்லாமல் சாலையை பனி ஆக்கிரமித்துள்ளதையும் பார்க்க முடிகிறது. இவ்வாறான சூழலில் எடைக்கு நிகராக உள்ள வாகனத்தை இழுப்பதே பெரும்பாடாக இருக்கும். அதிலும் இவ்வாறு அதிகப்படியான எடை கொண்ட வாகனங்களை இழுப்பது என்பது சவாலானதே.

44 டன்னில் ஒரு லாரி, 7 எஸ்யூவி கார்கள்... லேண்ட்ரோவர் டிஃபெண்டர் கார் எப்படிபட்டது என்ற கேள்விக்கான விடை இதோ!!

இருப்பினும் ஒரு லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரால் என்ன செய்ய முடியும் என்பதை வெளிக்காட்டும் விதமாகவே இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இது டிஃபெண்டரை விளம்பரப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட வீடியோ என்று நினைத்துவிட வேண்டாம். ஏனெனில் இது தற்செயலானது.

புதிய எஸ்யூவி கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்க சென்ற 44 டன் எடை உடைய லாரி பனியில் சிக்கி கொண்டுள்ளது. இவ்வாறான கடினமான சூழலில் இருந்து அந்த வாகனங்களை மீட்கவே டிஃபெண்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

44 டன்னில் ஒரு லாரி, 7 எஸ்யூவி கார்கள்... லேண்ட்ரோவர் டிஃபெண்டர் கார் எப்படிபட்டது என்ற கேள்விக்கான விடை இதோ!!

லேண்ட்ரோவர் டிஃபெண்டர் எஸ்யூவியால் அதிகப்பட்சமாக 900 கிலோ எடை உடைய பொருட்களை சுமந்து செல்ல முடியும். அதேபோல் 900மிமீ ஆழமுடைய நீர் நிலைகளில் இந்த வாகனத்தை இயக்க முடியும். இத்தகைய திறன்களுடன் மாற்றியமைக்கப்பட்ட பாதை ஏற்பு 2 சிஸ்டம் மற்றும் காற்று சஸ்பென்ஷனும் இந்த வாகனத்தில் வழங்கப்படுகிறது.

44 டன்னில் ஒரு லாரி, 7 எஸ்யூவி கார்கள்... லேண்ட்ரோவர் டிஃபெண்டர் கார் எப்படிபட்டது என்ற கேள்விக்கான விடை இதோ!!

புதிய டி7எக்ஸ் ப்ளாட்ஃபாரத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் புதிய டிஃபெண்டர் எஸ்யூவி காரை இந்தியா உள்பட சில நாட்டு சந்தைகளில் லேண்ட் ரோவர் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய டிஃபெண்டர் 1.2 மில்லியன் கிமீ தூரத்திற்கு 45,000க்கும் அதிகமான சோதனைகளில் ஈடுப்படுத்தப்பட்டதை இங்கு கூறியே ஆக வேண்டும்.

44 டன்னில் ஒரு லாரி, 7 எஸ்யூவி கார்கள்... லேண்ட்ரோவர் டிஃபெண்டர் கார் எப்படிபட்டது என்ற கேள்விக்கான விடை இதோ!!

டிஃபெண்டர் 110 மாடல் சமீபத்தில் ஐரோப்பிய என்சிஏபி மோதல் சோதனையில் முழு ஐந்து நட்சத்திரங்களை பெற்றுள்ளது. இந்தியாவில் கடந்த 2020 அக்டோபர் 15ஆம் தேதி புதிய டிஃபெண்டர் எஸ்யூவி கார் அறிமுகமானது. இதன் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.73.98 லட்சமாக உள்ளது.

Most Read Articles

English summary
Land Rover Defender pulls 44-tonne truck carrying 7 SUVs with ease.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X