525எச்பி ஆற்றலில், ஆற்றல்மிக்க டிஃபெண்டர் காரை உலகளவில் வெளியிட்டது லேண்ட் ரோவர்!! இந்தியாவர வாய்ப்பிருக்கா?

ஆற்றல்மிக்க டிஃபெண்டர் காராக லேண்ட் ரோவர் டிஃபெண்டர் வி8 மாடல் 525எச்பி என்ஜின் உடன் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பவர்ஃபுல் டிஃபெண்டர் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

525எச்பி ஆற்றலில், ஆற்றல்மிக்க டிஃபெண்டர் காரை உலகளவில் வெளியிட்டது லேண்ட் ரோவர்!! இந்தியாவர வாய்ப்பிருக்கா?

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் டிஃபெண்டர் வி8 காரில் குவாட்-எக்ஸிட் எக்ஸாஸ்ட், க்ரே நிறத்தில் 22-இன்ச் அலாய் சக்கரங்கள் மற்றும் நீல நிறத்தில் முன்பக்க ப்ரேக் காலிபர்கள் உள்ளிட்டவை தோற்றத்தில் மற்ற டிஃபெண்டர் மாடல்களில் இருந்து இது வித்தியாசப்படுவதற்காக வழங்கப்பட்டுள்ளன.

525எச்பி ஆற்றலில், ஆற்றல்மிக்க டிஃபெண்டர் காரை உலகளவில் வெளியிட்டது லேண்ட் ரோவர்!! இந்தியாவர வாய்ப்பிருக்கா?

அதேநேரம் பைஸ்போக் திருத்தம் மற்றும் எக்ஸாஸ்ட் சிஸ்டங்கள் வி8-ஐ செயல்திறனில் 4 மற்றும் 6-சிலிண்டர் டிஃபெண்டர்களில் இருந்து வேறுப்படுத்தி காட்டுகின்றன. இந்த டிஃபெண்டர் மாடலில் 5.0 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு ‘ஏஜே' வி8 என்ஜின் வழங்கப்படுகிறது.

525எச்பி ஆற்றலில், ஆற்றல்மிக்க டிஃபெண்டர் காரை உலகளவில் வெளியிட்டது லேண்ட் ரோவர்!! இந்தியாவர வாய்ப்பிருக்கா?

ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் மற்றும் ஜாகுவார் எஃப்-டைப் கார்களில் வழங்கப்படுகின்ற இந்த ஆற்றல்மிக்க என்ஜின் 525எச்பி வரையிலான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியது. இவ்வாறு 525எச்பி என்ஜின் ஆற்றலில் இயங்கக்கூடிய டிஃபெண்டர் கார் இதுவரை தயாரிக்கப்படவில்லை.

525எச்பி ஆற்றலில், ஆற்றல்மிக்க டிஃபெண்டர் காரை உலகளவில் வெளியிட்டது லேண்ட் ரோவர்!! இந்தியாவர வாய்ப்பிருக்கா?

குறைவான வீல்பேஸ் நீளத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய டிஃபெண்டர் வி8 கார் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 5.2 வினாடிகளிலும், அதிகப்பட்சமாக 240kmph வரையிலான வேகத்தையும் எட்டிவிடக்கூடியது. சேசிஸில் பெரிய அளவிலான மாற்றங்களை கொண்டுவந்து டிஃபெண்டர் வி8-இன் ஹேண்ட்லிங்கிலும் லேண்ட் ரோவர் நிறுவனம் தீவிரமாக கவனத்தை செலுத்தியுள்ளது.

525எச்பி ஆற்றலில், ஆற்றல்மிக்க டிஃபெண்டர் காரை உலகளவில் வெளியிட்டது லேண்ட் ரோவர்!! இந்தியாவர வாய்ப்பிருக்கா?

வழக்கமான டிஃபெண்டர்களின் பாதை நிர்வாக அமைப்பினால் வழங்கப்படும் ஆஃப்-ரோடு ட்ரைவிங் மோட்களுடன் இந்த வி8 வெர்சன் கூடுதலாக, த்ரோட்டில் பதிலைக் கூர்மைப்படுத்தும் மற்றும் வழக்கமான சாலை மற்றும் ஆஃப்-ரோடு சாலைக்களுக்கு ஏற்ற வகையில் தொடர்ச்சியாக மாறக்கூடிய டம்பர்களை உருவாக்கும் புதிய டைனாமிக் அமைப்பை பெற்றுள்ளது.

525எச்பி ஆற்றலில், ஆற்றல்மிக்க டிஃபெண்டர் காரை உலகளவில் வெளியிட்டது லேண்ட் ரோவர்!! இந்தியாவர வாய்ப்பிருக்கா?

இவற்றுடன் வி8 ஆனது வலிமையான சஸ்பென்ஷன் மற்றும் அதிவேக திருப்பத்தின்போது கார் ஒருபுறமாக சாய்வதை தடுக்க தடிமனான ஆன்டி-ரோல் பார்கள் மற்றும் இயங்கும் பாதையில் இருந்து விலகி செல்லாமல் இருக்க, பின்புற டிஃப்ரென்ஷியலில் யவ் கன்ட்ரோலர் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

525எச்பி ஆற்றலில், ஆற்றல்மிக்க டிஃபெண்டர் காரை உலகளவில் வெளியிட்டது லேண்ட் ரோவர்!! இந்தியாவர வாய்ப்பிருக்கா?

உலகளவில் வாடிக்கையாளர்களின் பார்வைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதே தவிர்த்து புதிய டிஃபெண்டர் வி8-இன் இந்திய வருகையை தற்போதைக்கு எதிர்பார்க்க முடியாது. ஆனால் நம் நாட்டு சந்தையில் சில லேண்ட் ரோவர் டிஃபெண்டர் மாடல்கள் விற்பனையில் உள்ளன என்பதை மறக்காதீர்கள்.

Most Read Articles

English summary
Land Rover Defender V8 revealed. Read In Tamil.
Story first published: Thursday, February 25, 2021, 23:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X